சனிக்கிழமை, 11 டிசெம்பர் 2010 09:28
1792: பிரான்ஸில் 16 ஆம் லூயி மன்னன் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.1907: நியூஸிலாந்து நாடாளுமன்றக் கட்டிடம் தீயினால் முற்றாக சேதமடைந்தது.
1917: ரஷ்யாவிடமிருந்து பிரிந்து லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1941: அமெரிக்காவுக்கு எதிராக அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனியும் பெனிட்டோ முஸோலினி தலைமையிலான இத்தாலியும் யுத்தப்பிரகடனம் செய்தன. பதிலுக்கு அமெரிக்காவும் இந்நாடுகள் மீது யுத்தப் பிரகடனம் செய்தது.
1946: யுனிசெப் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1994: ரஷ்ய துருப்புகள் செச்சென்யா மீது படையெடுத்தன.
1998: தாய்லாந்து விமானமொன்று சூரத் தானி விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் 101 பேர் பலி.
No comments:
Post a Comment