1915; பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.
1
932: அமெரிக்காவின் முதலாவது பெண் செனட்டராக ஹெட்டீ டபிள்யூ. கராவே தெரிவு செய்யப்பட்டார்.
1976: பலஸ்தீன விடுதலை இயக்கம் ஐ.நா. பாதுகாப்புச் சபை விவாதத்தில் பங்குபற்றுவதற்கு அனுமதியளிப்பதற்கு பாதுகாப்புச் சபை அங்கீகாரம் வழங்கியது.
1991: ஈராக்கில் அமெரிக்கப் படைகளை யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.
1991: ஆபிரிக்க நாடான மாலியில் அரசியல் கட்சிகளை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கும் புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்களிப்பின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
1998: மனித குளோனிங்கை தடை செய்வதை ஐரோப்பாவின் 19 நாடுகள் இணங்கின.
2004 உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலான குயின்மேரி-2 தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது.
2006: சவூதி அரேபியாவின் மினா நகரில் சன நெரிசலில் சிக்கி 362 யாத்திரிகர்கள் பலியாகினர்.
2010: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரை சுட்ட மெஹ்மட் அலியை 25 வருடங்களுக்குப் பின் துருக்கி விடுதலை செய்தது.
2010: ஹெய்ட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 230,000 பேர் பலி.