சாதாரண புகைப்படங்களை அழகிய டிஜிட்டல் ஆர்ட்
(Digital Art) ஆக மாற்றுவதற்கு உதவும் தளமாக
Befunky உள்ளது. விண்டோஸ் பெயிண்ட் பிரஷில் இல்லாத பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. புகைப்படத்தை கார்ட்டூன் போலவோ, கரியால் வரைந்த ஓவியம் போலவோ, மற்றும் பல புதிய வடிவமாக மாற்றவோ
Befunky பயன்படுத்தலாம்.

புகைப்படங்களை டிஜிட்டல் ஆர்ட் ஆக மாற்ற ஆன்லைன் தளம்
நம் கணினியில் உள்ள புகைப்படத்தை அங்கே தரவேற்றவேண்டும் (Upload). சமூகக் குழும தளங்களில்
(Social Networking sites) இருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு. டிஜிட்டல் ஆர்ட் ஆக மாற்றப்பட்ட நமது திறமையால் உருவான அழகிய நவீனத்தை பேஸ்புக், மைஸ்பேஸ் போன்றவற்றில் பகிரும் வசதியும் உண்டு.
விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆகிய அனைத்து இயங்குதளத்திலும்
(Operating System) இதைப் பயன்படுத்தலாம். உங்கள் உலவியில்
(Browser) இருந்து இயக்குவதால் இது சாத்தியமாகிறது. சமீபத்திய பிளாஷ் ப்ளேயர் (Flash Player) தேவைப்பட்டால் தரவிறக்கிக்
(Download) கொள்ளவும்.
தள முகவரி :
http://bit.ly/g5qQrx