பழைய கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால், கம்ப்யூட்டரின் சிபியூவில் இருந்தே மானிட்டருக்கு மின் கேபிள் செல்லும். இது. சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாக பொருத்திப் பார்ப்பது நல்லது. தற்போது வந்துள்ள மானிட்டர் என்றால் அதற்கு தனியே பவர் கார்டு இருக்கும். அது சரியானபடி பவர்பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டு உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். அந்த பிளக்குக்கு தனியாக சுவிட்ச் இருந்தால் அது ஆன் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். பொதுவாக மானிட்டரின் வலது பக்கத்தில் பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அட்ஜெஸ்ட் செய்தால் மானிட்டர் சரியாகலாம். மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது. அது ஆன் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஒருசிறிய லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்சு நிறத்தில் அல்லது மெலிதான பச்சை நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது. கம்ப்யூட்டரின் சிபியூவுக்கு சிக்னல் வரவில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம். மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளை சரி செய்து பார்க்க வேண்டும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்ட வேண்டும். சந்தேகத்துக்கு உரிய மானிட்டரை மற்றொரு கம்ப்யூட்டரில் பொருத்தி பார்க்கலாம். அப்போதும் மானிட்டர் வேலை செய்யவில்லை என்றால்,மானிட்டரில் தான் கோளாறு உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளலாம். சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் இருக்கும். கம்ப்யூட்டர் பூட் ஆகும்போதும், பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாம தெரியும். , உங்களது டிஸ்பிளே கார்ட் சரியில்லை என்று அர்த்தம். எனவே அதை மாற்றிப் பார்க்கலாம். புதிய டிஸ்பிளே கார்டு பொருத்தப்பட்ட பின்னரும் மானிட்டர் சரிப்பட்டுவரவில்லை என்றால், மானிட்டரை மாற்ற வேண்டும் அல்லது மானிட்டரை பழுது பார்க்க வேண்டும். இவ்வாறு மானிட்டர் பிரச்சினைகளை நீங்களே முடிந்த அளவு தீர்க்கலாம். |

Saturday, December 25, 2010
கம்ப்யூட்டரில் மானிட்டர் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment