Wednesday, December 22, 2010

facebook பாதுகாப்பு இன்னும் மேம்படுத்தப்படுகிறது

பேஸ்புக் (facebook) இணைய தளம் அண்மைக் காலமாக தனது கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பினையும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இன்று இன்னுமொரு புதிய பாதுகாப்பு வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எமது செல்பேசிகளின் உதவியுடன் செயற்பட இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.

எமது பேஸ்புக் கணக்கினை பொதுக் கணணிகளில் திறக்கும் நிலை ஏற்பட்டால் எமது கடவுச் சொல்லிற்குப் பதிலாக ஒரு தற்காலிக கடவுச் சொல்லினை (password) உபயோகிக்கும் வசதியினை பேஸ்புக் ஏற்படுத்தித் தந்துள்ளது. உதாரணமாக நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கினை cafe யிலோ அல்லது உங்கள் நண்பனின் கணணியிலோ திறக்க நேரிட்டது என எண்ணிக் கொள்வோம். அந்த குறிப்பிட்ட கணணியில் உங்கள் கடவுச் சொல்(password) சேமிக்கப்படும் அல்லது கழவாடப்படும் என நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்த வசதியினை பயன்படுத்தலாம்.

இவ்வாறு தற்காலிக கடவுச் சொல்லினை பெற முதலில் உங்கள் செல்பேசி இலக்கத்தை உங்கள் பேஸ்புக் கணக்கோடு இணைத்துக் கொள்ள வேண்டும்(ஒரு முறை செயற்படுத்தினால் போதுமானது). அவ்வாறு இணைக்கப்பட்ட செல்பேசி இலக்கத்திலிருந்து “otp” என டைப் செய்து “32665″ எனும் இலக்கத்துக்கு அனுப்பினால் உங்களுக்கான அந்த தற்காலிக கடவுச் சொல் கிடைக்கும்.

அவ்வாறு பெறப்படும் கடவுச் சொல்லினை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்பதையும் அந்த குறிப்பிட்ட கடவுச் சொல் 20 நிமடங்களின் பின்னர் செயலிழந்து போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்க.

இந்த குறிப்பிட்ட சேவையானது தற்போது செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இந்த குறித்த பாதுகாப்பு சேவயினை ஒரு வாரத்திற்குள் அனைத்து பாவனையாளர்களும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment