
யு–ட்யூப் (You Tube) இணையத் தள நிறுவனத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. யு–ட்யூப் இணையத் தள நிறுவனமும், உலகின் முன்னணி இசை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து வீவோ (VEVO) என்னும் பெயரில் ஒரு மியூசிக் வீடியோ வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த திட்டத்தை யு–ட்யூப் இணைய நிறுவனத்துடன் சோனி மியூசிக் என்டர்டெய்ன்மென்ட், யுனிவர்சல் மியூசிக் குரூப், இ.எம்.ஐ., ஏ.டி அண்ட் ட்டி மற்றும் அபுதாபி மீடியா கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயற்படுத்துகின்றார்கள். இந்த நிறுவனங்கள் இத்திட்டத்திற்கென 30 கோடி டாலர் நிதியை வழங்கியுள்ளன.

தற்போது வீவோ இணைய தளத்தில் 5,191 கலைஞர்களுடைய 14,675 மியூசிக் வீடியோக்கள் உள்ளன. மேலும் 20 வெவ்வேறு வகையான இசை ஆல்பங்கள் இருக்கின்றன. வீவோ தளத்தைப் பயன்படுத்துபவர்கள் அவர்கள் விரும்பும் வகையில் பிளே லிஸ்ட்டுகளை (Play List) உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வகையில் இதுவரை 800க்கும் அதிகமான பிளே லிஸ்ட்டுகள் உள்ளன.
வீவோ இணையத் தளத்தை மேலும் விரிவாக்கும் திட்டத்தில் இந்த நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபடுகின்றன.

வீவோ இணையத் தள முகவரி
No comments:
Post a Comment