1496: லியார்னோடா டாவின்சி மேற்கொண்ட பறக்கும் இயந்திர சோதனை தோல்வியுற்றது.
1521: பாப்பரசர் 10 ஆம் லியோ, மார்டின் லூதரை சமூகப் பிரஷ்ட் செய்தார்.
1815: பிரஷ்யா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியன ரகசிய பாதுகாப்புக் கூட்டணி அமைத்தன.
1925: இத்தாலியில் பெனிட்டோ முசோலினி அதிகாரத்திற்கு வந்தார்.
1947: அமெரிக்க நாடாளுமன்ற விவாதங்கள் முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.
1956: ஈபில் கோபுரத்தின் மேற்பகுதி தீயினால் சேதமடைந்தது.
1957: ஹமில்டன் கைக்கடிகார நிறுவனம் முதலாவது இலத்திரனியல் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது.
1958: மேற்கிந்திய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1959: அலாஸ்கா, அமெரிக்காவின் 49 ஆவது மாநிலமாக்கப்பட்டது.
1961: கியூபாவுடனான உறவை அமெரிக்கா துண்டித்தது.
1962: பாப்பரசர் 23 ஆம் அருளப்பர் பிடெல் காஸ்ட்ரோவை சமூகப் பிரஷ்டம் செய்தார்.
1990: பனாமா முன்னாள் ஜனாதிபதி மனுவல் நொரீகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.
1993: மொஸ்கோவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸின் ஆகியோர் அணுவாயுத குறைப்பு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.
1994: ரஷ்யாவில் விமான விபத்தொன்றில் 125 பேர் பலி.
1999: செவ்வாய் கிரகத்தை நோக்கி மார்ஸ் போலார் லாண்டர் விண்கலம் ஏவப்பட்டது.
2004: எகிப்திய விமானமொன்று செங்கடலில் வீழ்ந்ததால் 148 பேர் பலி.
No comments:
Post a Comment