அவ்வாறெனில் இனிமேல் கணினியின் முகப்பு திரையிலேயே பேஸ்புக்கை கொண்டுவரக்கூடிய Facebook Desktop என்கின்ற மென்பொருளை பயன்படுத்துங்கள்.
இவ்வாறு செய்தால் இனிமேல் பேஸ்புக் ஐ பார்வையிடுவதற்காக இணைய உலாவியை திறக்கவே தேவையில்லை.டெக்ஸ்டாப்பில் பேஸ்புக் இல் வருகின்ற அப்டேட்களை காட்டுமாறு செய்துவிடலாம்.
Facebook Desktop என்பது பேஸ்புக்கை கணினியில் பயன்படுத்த உதவும் அளவில் சிறிய டெக்ஸ்டாப் அப்பிளிகேஷனாகும்.
மெசெஞ்சர் சாப்ட்வேர்கள் போலவே தொழிற்ப்படும் இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து பேஸ்புக்கின் ஸ்டீரிமில் புதிதாக என்ன நடைபெற்றது என்பதை அலெட் செய்கிறது.அடோப் ஏர் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த மென்பொருள்.
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட், புதிய வால் போஸ்ட், நண்பராக சேர விரும்புவர்கள் போன்றவற்றின் விபரங்களை காட்டுகின்றது இந்த மென்பொருள் ஆனால் பேஸ்புக் பேஜ்களை பற்றிய தகவல்களை காட்டவில்லை.
No comments:
Post a Comment