கூகுள் மேப்ஸை உலகின் எந்த நாட்டிலிருந்தும் பெறலாம். எந்த நாட்டிற்கும், நகரத்திற்கும், தெருவிற்கும் வழி காட்டும் வகையில் மேப்களும், வழி காட்டுதல்களும் நமக்கு கூகுள் மேப்ஸ் தருகிறது. இதற்குத் தேவை எல்லாம் சற்று வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு மட்டுமே. இணைய இணைப்பு இல்லாதபோது கூகுள் மேப்ஸ் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது? இந்த இடத்தில் தான் நமக்கு ஜிமேப் கேட்சர் (Gmap Catcher) என்னும் அப்ளிகேஷன் நமக்கு உதவுகிறது. இதனை http://code.google.com /p/gmapcatcher என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திலிருந்து டவுண்ட்லோட் செய்து, பின் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். பின் அதனை இயக்கவும். இது இயங்குகையில், நீங்கள் எந்த ஊருக்கான மேப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த ஊரின் பெயரை என்டர் செய்திட வேண்டும். பின்னர் ஆன்லைனில் சென்று குறிப்பிட்ட மேப்பைப் பெற, இந்த புரோகிராம் உங்கள் அனுமதி கேட்கும். இதற்கு 'Yes' என்பதில் கிளிக் செய்திட, உடனே அந்த நகரத்திற்கான மேப் ஜிமேப் கேட்சர் விண்டோவில் கிடைக்கும். இதன் பின்னர் அதனை டவுண்லோட் செய்திட நாம் கட்டளை கொடுத்தவுடன், அந்த மேப் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்கள் சிஸ்டத்தில் சேவ் செய்யப்படும். மேப்பிற்கான பூகோள ரேகைக் குறியீடுகள் (latitude, longitude) ஏரியா, ஸூம் செட்டிங்ஸ் ஆகிய தகவல்களும், மேப்புடன் பதியப்படும். இது டவுண்லோட் செய்யப்பட்டுவிட்டால், இந்த மேப்பினை அடுத்துப் பார்க்க, இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. இல்லாமலேயே ஜிமேப் கேட்சர் உதவியுடன் காணலாம். ஜிமேப் கேட்சர் புரோகிராமினை விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலும் இயக்கலாம். |
Wednesday, December 15, 2010
கூகுளின் புதிய கூகுள் கேம்ப்
Facebook இன் புதிய வரவு : குரல்வழி மற்றும் முகம் பார்த்து அரட்டை வசதி அறிமுகம்
FriendCam Video Chat என்னும் பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருளானது இணைய உலகில் Skype க்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இந்த மென்பொருளானது சில அடிப்படை பிரச்சனைகளை இன்னும் நிவர்த்திசெய்யவில்லை. Beta நிலையிலுள்ளமையினால் இது காலப்போக்கில் சரிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இணைப்பு |
கூகிளிடமிருந்து புதிய இரண்டு சேவைகள்
நமது நண்பர்களின் ஊரையோ அல்லது அவர்களின் வீட்டுக்கு செல்லும் பாதையையோ அல்லது அவர்களின் வீட்டையோ தேடி அலைய வேண்டிய சிரமத்தை கூகிள் மெப்ஸ்(maps) நமக்கு போக்கியது. தற்போது குறித்த ஒரு அமைவிடத்தை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையை கூகிள் இலகுவாக்கித்தந்துள்ளது. முன்பெல்லாம் ஒரு இடத்தை கூகிள் மெப்ஸ்(maps) மூலம் நமது நண்பர்களுக்கு காட்ட வேண்டுமானால், அந்த மெப் ன் லின்க்கினை(link) எடுத்து மைல்(mail) பண்ணுவோம்.அந்த லின்கினை கிளிக்(click) செய்து அந்த இடத்தை பார்க்கக் கூடியதாக இருந்தது ஆனால் தற்போது எமது inbox ல் வைத்தே பார்க்க கூடியதாக இருக்கும். இதனை செயற்படுத்த gmail setting ற்கு சென்று Labs என்பதை க்ளிக் செய்து Google Maps previews in mail என்பதை enable செய்து save பண்ணிக்கொள்ளவும். அடுத்தது google buzz ல் மெப்ஸ் இனை சேர்த்துக்கொள்ளல். நீங்கள் பகிரப்போகும் மெப்ஸ் ன் லின்கினை எடுத்து paste செய்து கொண்டால் போதும். google maps இனி google buzz இலும் தெரியும். |
ஜோர்ஜியாவில் இராட்சத கோழி முட்டை
முர்மான் மொடெபாட்ஸா என்பவர் தம் வீட்டில் வளர்த்து வந்த கோழியே இந்த இராட்சத முட்டையை இட்டுள்ளது. இதன் நீளம் 82 மிமீ( 3 1/4 அங்குலம்), அகலம் 62மி.மீ. (2 1/2 அங்குலம்), நிறை 170 கிராம்(6 அவுன்ஸ்). முர்மானின் குடும்பத்தினர் இந்த இராட்ச முட்டையை கின்னஸ் புத்தகத்தில் பதிவதற்காகக் கையளித்துள்ளனர். |
பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை
பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர் ஒருவர் அனுப்புவது போல மெசேஜ் ஒன்று வருகிறது. அதில், இந்த இடத்தில் கிளிக் செய்தால், இதுவரை நீங்கள் பார்க்காத பாலியியல் படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு லிங்க் கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிக்கு ‘distracting beach babes’ என்று பெயர் தரப்பட்டுள்ளது. சிறிய அளவில், அரைகுறை ஆடையுடன், ஒரு படம் காட்டப்படுகிறது. இதனால் கவனம் திருப்பப்பட்டவர்கள், இந்த படத்தில் கிளிக் செய்கையில், படம் இயக்கப்படாமல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு, இந்த படம் இயக்குவதற்கான சாப்ட்வேர் உங்களிடம் இல்லை என்றும், அதற்கான சாப்ட்வேர் பெற இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. பின்னர் வருமானம் கிடைக்கும் விளம்பர அட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பதியப்படுகிறது. அத்துடன் மற்ற பேஸ்புக் நண்பர்களுக்கு இதே முறையில் செய்தி அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் தளம், தன் தளத்தின் பாதுகாப்பு வழிகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இது போல ஏதேனும் பொய் விளம்பரங்கள் கிடைக்கையில், தகுந்த எச்சரிக்கை செய்திகளை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்த அப்ளிகேஷனுக்கான லிங்க்கில் கிளிக் செய்தவர்கள், தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. பேஸ்புக் தளத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகையில் அது குறித்து ஆய்வு செய்து தகவல்களைத் தரும் சோபோஸ் குரூப் (Sophos) என்ற முகவரியில், தள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும், தகவல்களையும் தந்துள்ளது. |
வருகிறது ஐ போன் 4
1.வடிவம்: புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது. போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம். 2. மைக்ரோசிம்: இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம். 3.டிஸ்பிளே: ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை‘Retina Display’ என அழைக்கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம். 4. கேமரா: இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம். 5.சிப்: ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது. 6. கூடுதல் உதிரி வசதிகள்: பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது. இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம். தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது. இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர். |
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 13
1937: சீனாவின் நான்கிங் நகரைக் கைப்பற்றிய ஜப்பானிய படையினரின் பல வாரகால வெறியாட்டம் ஆரம்பமாகியது. ஜப்பானிய படையினரால் 20000 பேர் கொல்லப்பட்டதுடன் 80,000 பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். 
1959: பேராயர் மாகாரியோஸ் சைப்ரஸின் முதல் ஜனாதிபதியானார்.
1988: பலஸ்தீனத் தலைவர் யஸீர் அரபாத், அமெரிக்காவுக்குச் செல்ல விஸா வழங்கப்படாததால் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றினார்.
2001: இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதலாளிகள் உட்பட 15 பேர் பலி.
2003: ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் திக்ரித் நகரில் வைத்து அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
2004: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட் 9 கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
1959: பேராயர் மாகாரியோஸ் சைப்ரஸின் முதல் ஜனாதிபதியானார்.
1988: பலஸ்தீனத் தலைவர் யஸீர் அரபாத், அமெரிக்காவுக்குச் செல்ல விஸா வழங்கப்படாததால் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றினார்.
2001: இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதலாளிகள் உட்பட 15 பேர் பலி.
2003: ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் திக்ரித் நகரில் வைத்து அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
2004: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட் 9 கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
Subscribe to:
Posts (Atom)