Friday, December 17, 2010

மோனலிசா ஒவியத்தின் புன்னகையின் இரகசியம் அறியப்பட்டுள்ளது

உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா ஒவியத்தின் மயக்கும் புன்னகைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து விட்டனர். மோனலிசா ஓவியத்தில் காணப்படும் புன்னகை உலக மக்களை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.

மோனலிசா ஓவியத்தை நேரே பார்க்கும் போது அது புன்னகை செய்வதாக எமக்கு தென்படுவதில்லை, ஆனால் ஒரு பக்கத்தில் இருந்து அந்த ஓவியத்தை உற்று நோக்கினால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.

இந்தத் தோற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டாவின்சி எந்த வகையான நுணுக்கத்தைக் கையாண்டு இந்த ஓவியத்தை வரைந்திருப்பார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.

மோனலிசா ஓவியத்தின் மீது 'எக்ஸ்ரே' கதிர்கள் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டதில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. டாவின்சி காலத்தில் மூன்று விதமான அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றான 'புமாட்டோ', முறையைப் பயன்படுத்தியே டாவின்சி, மோனலிசாவின் புன்னகையை உருவாக்கியுள்ளார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் மோனலிசாவின் இதழ்களின் மீது பல்வேறு வர்ணங்களை 40 அடுக்குகளாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னகை இருக்கும் இடத்தில் மட்டும் டாவின்சி, தூரிகையைப் பயன்படுத்தாமல் தன் கைவிரல்களைப் பயன்படுத்தியுள்ளதும் 'எக்ஸ்ரே' ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 16

1431: இங்கிலாந்தின் 6 ஆம் ஜோர்ஜ் மன்னர் பிரான்ஸின் மன்னராக பாரிஸில் முடிசூட்டப்பட்டார்.
1946: ஐ.நாவில் தாய்லாந்து இணைந்தது.
1950: கொரிய யுத்தத்தில் சீனப்படைகள் வடகொரிய படையினருடன் இணைந்ததையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார்.
1971: பங்களாதேஷ் பிரிவினை யுத்தத்தின்போது இந்தியப் படையினரும் பங்களாதேஷின் முக்தி பாஹினி கெரில்லாக்களும் பாகிஸ்தான் படையினரை தோற்கடித்தனர். 93000 பாகிஸ்தான் படையினர் சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பொறுப்பான ஜெனரல்; ஏஏ.கே.நியாஸியும் இந்திய இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் ஜகித் சிங் அரோராவும் கையெழுத்திட்டனர்.

1986: சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கஸகஸ்தான் பிராந்தியத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.
1991: கஸகஸ்தான் சுதந்திர தனி நாடாகியது.

Thursday, December 16, 2010

பிரான்ஸ் நாட்டின் ஹென்றி IV மன்னரின் தலை 400 ஆண்டுகளின் பின் கண்டுபிடிப்பு

பிரான்ஸ் நாட்டில் 1610 ஆண்டு கொலை செய்யப்பட்ட ஹென்றி IV மன்னரின் தலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



அந்தத் தலை இதுவரை காலமும் பதனிட்டு வைக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 9 மாதகால ஆராய்ச்சியின் பின்னர் இத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.


400 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதற்கென மரபணு சோதனை, அங்க அடையாளங்கள் மற்றும் மானிடவியல், தடவியல், கதிர்த்தாக்கம் உட்பட நோய்கள் தொடர்பான ஆய்வு ஆகியவற்றை துல்லியமாக மேற்கொண்டுள்ளனர்.


குறிப்பாக மூக்கில் காணப்பட்ட ஓர் அடையாளம் மற்றும் காதில் தோடு அணியப்பட்டமைக்கான அடையாளம், கொலை முயற்சி ஒன்றின் போது முகத்தில் ஏற்பட்ட காயம் ஆகியவை இவற்றில் முக்கியமானவையாகும்.

ஹென்றி IV

ஹென்றி ஐஏ மன்னர் அக்காலத்தில் மிகவும் புகழ்பூத்த நல்லாட்சி புரிந்த மன்னர்களில் ஒருவராவார். இவரது கம்பீர தோற்றம் காரணமாகவும் பெண்களால் அதிகம் நேசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர் 1610 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பாரிஸில் வைத்து பிரன்கொயிஸ் ரவ்யிலக் என்பவரால் கொலைசெய்யப்பட்டார்.

இவரது தலை மாத்திரம் 1793 ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது காணமல் போனபோதும் புரட்சியின் போது போராட்டக்காரர்களால் இவரது தலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்தத் தலை பலரிடம் கைமாறியதாகக் கூறப்பட்டது.

எனினும் 400 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 15

1914: ஜப்பானில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட காஸ் வெடிப்புச் சம்பவத்தால் 687 பேர் பலி.

1967: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் பாலமொன்று உடைந்ததால் 46 பேர் பலி.

1970: தென்கொரிய கப்பல் கொரிய நீரிணையில் கவிழ்ந்ததால் 308 பேர் பலி.

1973: அமெரிக்க உளவியல் மருத்துவர்கள் சங்கம் ஓரினச் சேர்க்கையை உளவியல் நோய் பட்டியலிலிருந்து நீக்கியது.

1974: எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக பிரிட்டனில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1978: மக்கள் சீனக்குடியரசை அமெரிக்கா அங்கீகரிக்கும் எனவும் தாய்வானுடனான தொடர்புகளை துண்டிக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

2005: சர்வதேச நாணய நிதியத்திற்கான தனது கடனை ஆர்ஜென்டீனா முன்கூட்டியே செலுத்தும் என ஆர்ஜென்டீன ஜனாதிபதி நெஸ்டர் கேர்ச்னர் அறிவித்தார்.

2009: போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொண்டது.

10 தலை நாகமும் பறைசாற்றிய உண்மையும்


அண்மைக்காலத்தில் அதிகம் பேசப்பட்ட விடயம் 10 தலை நாகபாம்பு பற்றியது. வன்னிப் பகுதியில் இந்த 10 தலை நாகம் தென்பட்டதாக கூறி சில ஊடகங்களும் உண்மை நிலையை அறியாமல் செய்தியை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியிருந்தன.

இந்த 10 தலை நாகத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்னர் இணையத்தளங்களில் உலாவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எந்தவொரு செய்தியையும் ஆராய்ந்து அறியாமல் முறையற்ற தனமாக மக்கள் மத்தியில் போலிகளை பரப்புவதால் ஏமாற்றப்படுபவர்கள் வாசகர்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.இந்நிலையில் 10 தலை நாகம் என போலியாக சித்திரிக்கப்பட்ட, உண்மையான 'ஒரு தலை' நாகத்தின் புகைப்படமும் இப்போது இணையத்தில் வெளிவந்திருக்கிறது. ஒரு தலை நாகத்தின் புகைப்படத்திற்கு 10 தலை கொடுத்தவர்கள் கணினி விற்பன்னர்களே...!

ஏமாற்றமடைந்த வாசகர்களுக்கு உண்மைநிலை புரியவேண்டும் என்பதற்காக 10 தலை நாகத்தின் 'கிரபிக்ஸ்' விளையாட்டை இங்கே பிரசுரிகின்றேன் . இப்படத்தில் ஒரு தலை நாகத்தின் பின்னால் அதனுடைய நிழல் அப்படியே இருக்கும். அதே படத்தை 10 தலைகளாக மாற்றியபோதும் அதே ஒரு தலை நாகத்தின் நிழல் தென்படுவதை வாசகர்களின் கவனித்திற்காக விடுகின்றேன்  (நன்றி: பேஸ்புக் நண்பர்கள்)

Wednesday, December 15, 2010

வார்டு அறையில் சுற்றுகிறது வேலூர் ஆஸ்பத்திரியில் நுழையும் மர்ம உருவம்; செல்போன் படத்தால் பேய் பீதி

வேலூரில் ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய் நுழைவது போன்ற படக்காடசி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம்
நுழைவது போன்ற படக்காடசி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது.

வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பினார்.

சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரி கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து அறையை விட்டு வெளியேறுகிறது.



இந்த படக்காட்சி பார்ப்பவர்களை பீதியில் உறைய வைக்கிறது. மேலும் இந்த காடசியை பார்க்கும் போது சிலரின் உரையாடல்களும் கேட்கிறது. கம்ப்யூட்டரில் கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட சந்தேகம் ஏற்படுகிறது.

பேய் வருவதை படம் எடுத்து அதனை தெளிவு படுத்தும் முயற்சியில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் அதனால் தான் அவர்களின் குரல் கேட்கிறது. பேய் வருவது உண்மை தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஏதாவது ஆஸ்பத்திரி குறித்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக விரோதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் பரவி வரும் ஆஸ்பத்திரி பேய் இருக்கா இல்லையா?

அல்லது பேய் வருவதற்கான அறிகுறியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. திருவண்ணா மலையில் சித்தர் பரந்ததாக கடந்த ஆண்டு வீடியோ காட்சி பரவியது. அதுபோல வேலூரில் பேய் படக்காட்சி பார்ப்பவர்களை கலங்கடித்து வருகிறது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 14

1287: நெதர்லாந்தில் கடல்நீர் பாதுகாப்பு மதிலொன்று உடைந்ததால் சுமார் 50000 பேர் பலி.

1812: ரஷ்யா மீதான பிரெஞ்சு படையெடுப்பு முடிவடைந்தது.
1903: ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் விமானம் மூலம் முதல் தடவையாக சோதனை பறப்பை மேற்கொண்டனர்.

1955: இலங்கை உட்பட 16 நாடுகள் ஐ.நாவில் இணைந்தன.
1972: சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற கடைசி விண்கலமான அப்பலோ 17 பூமிக்குத் திரும்பியது.
1995: பொஸ்னியா, சேர்பியா, குரொஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பாரிஸ் நகரில் சமாதான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.