Wednesday, February 8, 2012

இணையத்தில் கசிந்த பிளக்பெரி லண்டன் புகைப்படம்

சந்தையில் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டுவரும் பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளின் இறுதி எதிர்பார்ப்பு அதன் பிளக்பெரி 10 இயங்குதளமென சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 
  
தற்போது பிளக்பெரி லண்டன் கையடக்கத்தொலைபேசி மாதிரியினது என நம்பப்படும் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 




இப்புகைப்படத்தில் காணப்படும் கையடக்கத் தொலைபேசியானது மற்றைய பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளை விட முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகின்றது.

இவ்வருட இறுதியில் இக்கையடக்கத்தொலைபேசியானது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே பொறுத்திருந்து பார்ப்போம் பிளக்பெரி லண்டன் இழந்த சந்தையைக் கைப்பற்ற ஆர்.ஐ. எம் நிறுவனத்திற்கு கைகொடுக்குமா என.

Thursday, March 3, 2011

பயனுள்ள பத்து இணையதளங்கள்







இன்றைய பதிவு பயனுள்ள தளங்கள் சிலவற்றின் தொகுப்பாக அமைகின்றது.






1) காணொளிகளை பதிவு செய்து அவற்றை நேரடியாக யுடியூபில் தரவேற்றம் செய்வதற்கு
http://www.screenr.com

2) உங்கள் கீ போர்ட்டில் இல்லாத குறியீடுகள்
http://www.copypastecharacter.com

3. ஒன்லைனில் பெக்ஸ் செய்வதற்கு
http://www.faxzero.com/

4.உங்கள் புகைப்படங்கள் மற்றும் ஒலிகளின் மூலம் குறும்படங்கள் தயாரிக்க
http://studio.stupeflix.com

5. உங்கள் சித்திரங்களை வரைய மற்றும் பகிர்வதற்கு
http://www.ratemydrawings.com

6. வெப் கெமராவின் உதவியுடன் வீடியோ மின்னஞ்சல் அனுப்ப
http://www.mailvu.com

7. உங்கள் ஆங்கில ஆக்கங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகளை கண்டறிய
http://www.polishmywriting.com

8. பெரிய கோப்புக்களை பரிமாற்றம் செய்ய
https://www.wetransfer.com

9. உங்கள் கனவு இல்லத்தினை முப்பரிமாணத்தில் உருவாக்க
http://www.homestyler.com

10.புகைப்படங்களின் தகவல்களை அறிய
http://regex.info/exif.cgi

Saturday, February 26, 2011

VLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு 1.1.7 Download செய்ய

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் Default Windows Media Palyer Install  செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும்.
இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.7 வந்துள்ளது. 
ஆகவே இதன் முந்தைய பதிப்பான 1.1.5 உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை Download செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Supportசெய்யும் Video  Formats:
       MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 Support செய்யும் Audio Formats:

  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3 1
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
  • APE (Monkey Audio)
  • Real Audio 2
  • Alaw/µlaw
  • AMR (3GPP)
  • MIDI 3
  • LPCM
  • ADPCM
  • QCELP
  • DV Audio
  • QDM2/QDMC (QuickTime)
  • MACE

இப்படி பல வகைப்பட்ட ஆடியோ வீடியோ பைல்களை நாம் இந்த மென்பொருளில் உபயோகிக்க முடியும். இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று ஆகவே இந்த மென்பொருளின் புதிய பதிப்பை கீழே உள்ள Download Button அழுத்தி பெற்று கொள்ளவும்.


இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 


புதிய அப்பிள் MacPro கணணிகள்

நேற்றைய தினம் அப்பிள் நிறுவனம் தனது மடிக்கணணிகளின் புதிய வடிவங்களினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட Processor மற்றும் தண்டர்போல்ட் (ThunderBolt) தொழிநுட்பம் மற்றும் மேம்படுத்தப்ப வீடியோ க்ரெபிக்ஸ் ப்ரொசெசர்(video graphics processor) மற்றும் இன்னும் தெளிவான HD Camera என்பவற்றை குறிப்பிடலாம்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்திலும் அதன் படங்களை இங்கேயும் காண்க..




Google cloud connect : இனி அனைவரும் பயன்படுத்தலாம். கூகிளின் மற்றுமொரு தயாரிப்பு

கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது.

இந்த Google cloud connect இனை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் எமது கூகிள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோ சொப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகிள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.


இந்த Google cloud connect இனை உங்கள் விண்டோஸ் கணணியில் நிறுவ இந்த முகவரியினை க்ளிக் செய்து நிறுவிக் கொள்ளலாம். இந்த சேவையானது தற்போதைக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லாகின் செய்வதன் மூலம் எமது ஆவணங்களினை கூகிள் டொக்ஸ் இல் சேமித்துக் கொள்ள முடியும்.


இந்த புதிய சேவையினை பயன்படுத்தி உங்கள் ஆவணங்களினை இணையத்தில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கும் எப்போதும் ஆவணங்களினை பயன்படுத்தும் வசதியினை பெற்றுக்கொள்ளுங்கள்.

Tuesday, February 22, 2011

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 20

1547: 6 ஆம் எட்வர்ட், இங்கிலாந்தின் மன்னரானார்.

1933: 1920 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட மதுவிலக்குச் சட்டம் நீக்கப்பட்டது.

1935: கரோலின் மிக்கெல்சன் எனும் பெண், அந்தார்ட்டிக்காவில் காலடி வைத்த முதல் பெண்ணானார்.

2005: ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை அங்கீகரித்த முதல் நாடாகியது ஸ்பெய்ன்.

2009: கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் இலங்கை விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

2010: போர்த்துக்கலில் வெள்ளத்ததால் 43 பேர் கொல்லப்பட்டனர்.

Monday, February 21, 2011

Online-ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அழகாக Cut செய்து
கொள்ளும் விருப்பம் நம் அனைவரிடமும்  இருக்கும் இதற்காக
Photoshop போன்ற எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
சில நிமிடங்களில் புகைப்படங்களை அழகாக Cut செய்யலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வேகமான சுழ்நிலையில் புதிதாக ஒரு மென்பொருளை படிப்பதற்கு
பெரும்பாலும் நேரம் கிடைப்பதில்லை, புகைப்படங்களை சிலர்
போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு அழகாக வடிவமைத்து
வைத்திருப்பார்கள், அவர்களை விட நம்மால் நம் புகைப்படங்களை
அழகாக Cut செய்து நம் டிவிட்டர் முதல் பேஸ்புக் வரை அனைத்திலும்
வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
 இணையதள முகவரி : http://www.cutmypic.com/
 
படம் 2

இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Choose என்ற
பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும்  Cut செய்ய வேண்டிய
புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Go என்ற பொத்தானை அழுத்த
வேண்டும் அடுத்து வரும் திரையில் (படம் 2) நம் புகைப்படத்தில்
எந்த பகுதிவரை வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Round the Corners என்பதில் எந்த Style-ல் cut செய்ய
வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு நிழல்
வேண்டும் என்றால் Drop Shadow என்பதை சொடுக்கி
தேர்ந்தெடுத்துக்கொண்டு Preview என்ற பொத்தானைஅழுத்தி
Output படத்தின் Preview பார்த்துக்கொள்ளலாம். எல்லாம் சரியாக
தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்ததும் Done என்ற பொத்தானை
சொடுக்கி படத்தை நம் கணினியில் சேமித்துக்கொள்ளவும்.

கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.