Wednesday, December 8, 2010

பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.
இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.
'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள்  உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்  .
இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது.  பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.

*பிறந்த திகதியும் இடமும் :-
இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.

*தாயின் கன்னிப் பெயர் :-
பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

*விலாசம் :-
நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.

*விடுமுறைகள் :-
உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக்  கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.

*வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :-
இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.

முறையற்ற படங்கள் :-
பேஸ்புக்கை  பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்

*ஒப்புதல்கள் :-
இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது.  விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.

*தொலைபேசி இலக்கம் :-
உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும்  "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.

*பிள்ளைகளின் பெயர்கள் :-
இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.

பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.

பேஸ்புக் தரும் புதிய குரூப் வசதி

சென்ற அக்டோபர் 7 அன்று பேஸ்புக் தளத்தில் புதிய குரூப் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த தளத்தில் கிடைக்கும் குரூப்ஸ் வசதியைப் போலின்றி, சில தனிப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டது. ஒரு சிறிய குழுவாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்ட குழுவினை அமைத்து
அரட்டை அடிக்க, போட்டோக்கள் மற்றும் பைல்களைப் பகிர்ந்து கொள்ள, மின்னஞ்சல்களை குழு உறுப்பினர் களுக்குள் அனுப்பிக் கொள்ள இது வசதி அளிக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்களுக்குள் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும்.

எப்படி இது ஏற்கனவே உள்ள பெரிய அளவிலான குழுக்களில் இருந்து வேறுபட்டு ள்ளது என்று இங்கு பார்க்கலாம்.

1. எப்படி தொடங்குவது?
வழக்கமான பேஸ்புக் குரூப் லிங்க், அதன் தளத்தில் இடது பிரிவில் கிடைக்கும். புதிய குரூப்ஸ் (New groups) செல்ல இங்கு லிங்க் கிடைக்காது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணையப் பக்க முகவரி at http://www.facebook.com/groups. இங்கு சென்ற வுடன், புதிய குரூப்ஸ் தொடங்க Create Group என்பதில் கிளிக் செய்திடவும்.

உங்கள் குடும்ப உறவினர்கள் அல்லது நண்பர்களுக்காக எனில் அதற்கேற்றார்போல் இந்த குழுவிற்குப் பெயரிடவும். வர்த்தக நோக்கு எனில் அதனை மையப்படுத்தி பெயர் அமைக்கவும். அடுத்து பேஸ்புக் தளத்தில் பதிந்த, நீங்கள் விரும்பும் நண்பர்களின் அல்லது உறவினர்களின் பெயர்களை டைப் செய்திடவும்.

இந்த குழுவிற்கான ஐகானையும் இங்கு மாற்றலாம். தொடர்ந்து இந்த குழுவில் இடப்படும் செய்திகள், தகவல்கள் யாருக் கெல்லாம் தெரியப் படலாம் என்பது குறித்தும் இங்கு செட் செய்திடலாம். அனைத்தும் முடித்த பின்னர், Create என்பதில் கிளிக் செய்து குழு அமைத்திடும் பணியை முடிக்கலாம்.

2.குரூப் அரட்டை:
அடுத்த வசதி குழுவின் அரட்டை வசதி. இங்கு அரட்டையில் ஈடுபடும்போது, ஈடுபடும் இருவருக்கு மட்டும் அது தெரியாது. குழுவில் உள்ள அனைவரும் அரட்டையைத் தெரிந்து கொள்ளலாம். குரூப் பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள “Chat with Group” என்பதில் கிளிக் செய்து அரட்டையைத் தொடங்கலாம்.

3. ஆவணங்கள் பகிர்ந்து கொள்ளல்:
இந்த குழுவின் இன்னொரு சிறப்பு இதில் ஆவணங்களை உருவாக்குதல். இதில் உருவாக்கப்படும் ஆவணங்களை, குழு உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தலாம். எடிட் செய்திடலாம்.

4.குழுவிற்கான மின்னஞ்சல் முகவரி:
குழுவின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள, இந்த குழு மட்டும் பயன்படுத்த ஒரு மின்னஞ்சல் முகவரியினை அமைக்கலாம். இதனை உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. குரூப்பில் மின்னஞ்சல் செய்திகள் அனைத்தும் அனைவரும் படிக்கும்படி அமைக்கப்படும்.

5. இமெயில் அறிவிப்புகள்:
இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களும் தங்களுக்கு எவை எல்லாம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதனை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளலாம்.

2012ல் என்ன நடக்கப் போகிறது?

2012ல் உலக அழிவு பற்றி எச்சரிக்கை சொல்லப்பட்டது.அதற்கு திகதியை அறிவித்து விட்டது என்னை இன்னும் யோசிக்க வைத்துள்ளது.2012, டிசம்பர் 21ம் திகதியே இந்த சம்பவம் நடைபெறவுள்ளது.


'

என்ன கொடும இது'என்று வடிவேல் பாணியில் தலையில் கை வைத்துகொண்டேன்.2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.ஆனால் சில விடயங்கள் என்னை சரியாக இருக்குமோ,என என்னை யோசிக்க வைக்கிறதே!!!!!

இதற்கு இப்போது ஏற்பட்டிருக்கும் உலக காலநிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்.ஆசியா கண்டத்தில் கடுமையான வெள்ளம் ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நாகரீகம் வளர்ந்து வரும் தற்போதைய உலகில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சு வாயுக்களால் பூமி வெப்பமயமாகி வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.

ஆனால் இன்னும் இதை நம்ப முடியாமல் சில விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தவில்லை.(எத நம்ப!?)ஏற்படப்போகின்ற விளைவால் 30 சதவீதமான உயிரினங்கள் அழிவடையலாம் என எதிர்வு கூறப்ப்பட்டுள்ளது.(குழப்ப்புறாங்க ஐயா!)


எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விஞ்ஞானி உண்டு என அனைவரும் மறந்து போயிருப்பது புரிகிறது.உலகம் என்றாவது அழியத்தானே போகிறது.இது என்னை பொறுத்து எல்லா மதத்திலும் கூறப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக இதை வைத்துக் கொண்டு சூது விழையாட்டுக்கள் ஆரம்பிக்கப்படலாம்.வாஸ்த்து சாஸ்த்திரங்களை வைத்தும் விழையாட்டுக்கள் ஆரம்பிக்கப்படலாம்.

என்ன நடந்ததோ அது நன்றகவே நடந்நது....
எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாக்வே நடக்கும்.....

விண்டோஸ் வேகமாக இயங்க டிப்ஸ்


நம்மில் 90% பேர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம் என்பது, பன்னாட்டளவில் அறியப்பட்ட உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற இங்கு டிப்ஸ்கள் தரப்படுகின்றன.

1.மினிமைஸ்:
பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும்.

2. இமெயில் போல்டர்:
இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும்.

3. சரியான பயன்பாடு:
போல்டர்களுக்குச் சரியான பெயர் கொடுத்து, மெயில்களைப் பொருள் வாரியாகப் பிரிக்கவும். ஒரே போல்டரில், அதிக மெயில்களைத் தேக்குவது போல்டர்கள் அமைத்த நோக்கத்தை செயல்படுத்தாது.

4. அப்புறம் பார்க்கலாம்:
பின் நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் பல மெயில்கள் வரும். இவற்றிற்கென ஒரு போல்டரை உருவாக்கி அதில் போட்டு வைத்து, நேரம் கிடைக்கும்போது கண்டறிந்து, நீக்கவும்.

5. பிரவுசரின் தேடல் சாதனம்:
உங்களுக்கென விருப்பமான தேடல் சாதனத்தினை, மாறா நிலைக்கு (டிபால்ட்) தேர்ந்தெடுத்து அமைக்கவும். இல்லையெனில், லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், சிஸ்டம் அமைத்த சர்ச் இஞ்சினும் , நீங்கள் பயன்படுத்த இன்னொன்றுமாய் கிடைக்கும்.

6.பைல் பெயர் மாற்றம்:
பைல்களின் பெயர்களை மாற்ற விரும்புகிறீர்களா? நிறைய பைல்கள் மாற்றப்பட வேண்டுமா? முதல் பைலைத் தேர்ந்தெடுக்கவும். எப்2 அழுத்தவும். புதிய பெயரை டைப் செய்திடவும். இனி, என்டர் அழுத்தாமல், டேப் கீ அழுத்தவும். எக்ஸ்புளோரர் உங்களை அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லும். அந்த பைலின் பெயர் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாற்றத்திற்குத் தயாராய் இருக்கும். பேக் ஸ்பேஸ் கீயெல்லாம் அழுத்த வேண்டாம்.

7. இமெயில் செக்கிங்:
அடிக்கடி உங்கள் இமெயில்களை செக் செய்து பெறும்படி அமைக்க வேண்டாம். இதனால், உங்கள் வழக்கமான கம்ப்யூட்டர் பணியில் தேவையற்ற குறுக்கீடு இருக்கும். எனவே எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திட வேண்டும் என்பதனை, இதன் அடிப்படையில் அமைக்கவும்.

8. பல பைல் தேர்ந்தெடுக்கும் எளிய வழி:
ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தேர்ந்தெடுக்கிறீர்களா? கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயை அழுத்தித் தான் பலரும் இந்த செயலை மேற்கொள்கிறோம். இதனால் சில வேளைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றான வழி ஒன்றும் உள்ளது. முதலில் Organize>Folder and search options>View என்று செல்லுங்கள். பின்னர் கீழாகச் சென்று Use check boxes to select items என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இதன் மூலம் டிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

9. ஸ்பேம் நீக்கவும்:
உங்களுடைய கம்ப்யூட்டரில் ஸ்பேம் மெயில்களை வடிகட்டுவதற்கென புரோகிராம் இல்லை எனில், உடனடியாக ஒன்றை இன்ஸ்டால் செய்திடவும்.

10. விண்டோஸ் 7 கால்குலேட்டர்:
விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளில் கால்குலேட்டர்கள் இணைந்தே தரப்பட்டன. ஆனால் சில சிறப்பான கால்குலேட்டர் செயல்பாடுகளுக்கு, இணைய தளங்கள் தரும் இலவச கால்குலேட்டர் புரோகிராம்களை பதிந்து பயன்படுத்தினோம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், வேறு ஒரு புரோகிராமிற்குச் செல்ல வேண்டியதில்லை. இதில் கிடைக்கும் கால்குலேட்டர் மிகச் சிறப்பானதாகப் பல செயல்பாடுகளைத் தாங்கி உள்ளதாக அமைந்துள்ளது.

11. பிரச்னை பதிவு:
விண்டோஸ் இயக்கத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு, உங்கள் டெக்னீஷியனை அடிக்கடி அழைத்து, பிரச்னைகள் குறித்து நிறைய விளக்கம் தர வேண்டியுள்ளதா? நீங்கள் சொல்வது அவருக்கும், அவர் கேட்பது உங்களுக்கும் புரியாமல், பல தொலைபேசி அழைப்புகளை வீணாக்குகிறீர்களா? இது தேவையே இல்லை. Windows’ Problem Steps Recorder என்பதை இயக்கினால் போதும். வரிசையாக, ஒவ்வொரு ஸ்டெப் ஆக, என்ன நடை பெற்றது என்று உங்களுக்கு இது காட்டும். இதனைப் பெற PSR என ஸ்டார்ட் மெனு சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். மிக விலாவாரியாக, ஸ்கிரீன் ஷாட்களுடன் உங்கள் பிரச்னைகளை இதில் காணலாம்.

12. திரை இடம் பெரிதாக:
டாஸ்க்பார் ஐகான் பெரிதாக அமைந்து, மானிட்டர் திரையில், நீங்கள் இயங்கும் இடம் சுருங்குகிறதா? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து Properties > Use small icons என அமைக்கவும். இதன் மூலம் அனைத்து ஐகான்களும் பாதியாக அதன் அளவில் குறையும். நீங்கள் இயங்க அதிக இடம் கிடைக்கும்.

13. சிறிய, பெரிய எழுத்துக்கள்:
எழுத்துக்களை அமைத்துவிட்டு, அதனை முழுமையாகப் பெரிய எழுத்துக்கள் அல்லது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக அமைக்க வேண்டுமா? ஒவ்வொரு எழுத்தாகத் தேடிச் சென்று மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர், ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால், இந்த ஆப்ஷன்கள் வரிசையாகக் காட்டப்படும். தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.

14. பின் அப்:
விண்டோஸ் 7 தொகுப்பில் எதனையும் டாஸ்க்பாரில் பின் செய்தி டலாம். அடிக்கடி பயன்படுத்தப் படும் போல்டர்கள், கண்ட்ரோல் பேனல், ஏன் ஒரு செயல்பாட்டிற்கென அமைக்கப் பட்ட பட்டனைக் கூட இதில் அமைத்திடலாம்.

15. ஆட் ஆன் நேரம்:
உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு இயக்கத்திற்குக் கிடைக்க அதிக நேரம் ஆகிறதா? இதனுடன் இணைந்த ஆட் ஆன் தொகுப்பே இதற்குக் காரணம். Tools>Manage Addons சென்று ‘Load time’ என்பதில் ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பிற்கான நேரம் பார்க்கலாம். பின்னர், அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் புரோகிராமினை, தேவை இல்லை என்றால் நீக்கிவிடலாம்.

உலகின் அதிகூடிய எடையுள்ள பூசணிக்காய்! பழைய கின்னஸ் சாதனையை முறியடித்தது (காணொளி மற்றும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்திலுள்ள நியூரிச்மன்ட் நகரத்தில் கிரிஸ் ஸ்டீவன் என்பவரால் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்ட பூசணியே (pumpkin) இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

உலகிலேயே அதிக எடையுள்ள பூசணிக்காயாக 821 கிலோ உள்ள (pumpkin) பூசணி என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த வருடம் ஓஹியோவில் விளைந்த அதிக எடையுள்ள பூசணிக்காயின் சாதனையை இந்தப் பூசணி முறியடித்துள்ளது.

 புதிய உலக சாதனை படைத்த பூசணிக்காயின் சுற்றளவு 4.74 மீற்றர்களாகும். இந்தப் பூசணி இவ்வளவு பெரிதாக காய்த்தற்கு சரியான சூரியஒளி, மழை, இயற்கை உரம், போன்றனவே சாதனையின் இரகசியம் என்கிறார் கிரிஸ் ஸ்டீவன்.

Add caption

வரும் 2012ல் விண்டோஸ் 8

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது மக்களிடையே பரவலாகி, அதனுடன் பழகி இயங்கத் தொடங்கி விட்டோம். இந்நிலையில் விண்டோஸ் 8 என்னும் அடுத்த இயக்கத் தொகுப்பு குறித்த குறிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த தொகுப்பு வெளியிடப்படலாம் என உத்தேசமாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.இதுவரை வெளியான இயக்கத் தொகுப்புகளில், மிக வேகமாக விற்பனையாகும் தொகுப்பு என்ற பெயரைப் பெற்ற விண்டோஸ் 7 தொகுப்பு வெளியாகி ஓராண்டு ஆனதற்கான வெற்றி குறித்து தகவல் தருகையில், விண்டோஸ் 8 குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. http://www.winrumors.com/microsoft-windows-8-about-two-years-away/ என்ற தளத்தில் இந்த செய்தி காணப்பட்டது. ஆனால் சில நாட்களில் இந்த செய்தி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.மேற்கொண்டு எந்த செய்தியையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை. தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், 128 பிட் அமைப்பில் இயங்கும் சிஸ்டம் ஒன்றைத் தயாரித்து வருவதாகப் பல நாட்களுக்கு முன்பே பேசப்பட்டது. அநேகமாக, இதுவே விண்டோஸ் 8 ஆக இருக்கலாம். இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் தன் ஓ.எஸ். எக்ஸ் மற்றும் மொபைல் ஐ.ஓ.எஸ். ஆகியவற்றை இணைத்து ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஒன்றைத் தர இருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. இதனைக் கேள்விப்பட்ட மைக்ரோசாப்ட், நிச்சயமாய் அதனை உணர்ந்து, வரப்போகும் தன் அடுத்த சிஸ்டத்தையும் அதற்கேற்ற வகையில் தயாரிக்க விரும்பலாம்.

கூகுளின் பெரிய செய்திகளை நீக்க…

இணையம் பயன்படுத்தும் யாவரும் இமெயிலுக்கென செல்வது ஜிமெயில் ஆகும். அதிக அளவில் மெயில்களைச் சேர்த்து வைத்திட ஜிமெயில் 7 ஜிபி இடம் தருவதனால், யாரும் வந்த மெயில்களை இன்பாக்ஸிலிருந்து நீக்குவதில்லை. இருந்தாலும், ஏதேனும் ஒரு நாளில், மொத்தமாகச் சேர்ந்த மெயில்களினால், கூகுளிலும் இடம் இல்லாமல் போய்விடலாம் அல்லவா?
 ஜிமெயில் தொடங்கிய நாள் முதல் அதனைப் பயன்படுத்தி வருபவர்கள் பலருக்கு, இந்த  சூழ்நிலை தற்போது ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில்  அதிக மெயில்கள் சேர்ந்து,  7 ஜிபி அளவை எட்ட  இருக்கையில்   not be able to senYou have run out of space for your Gmail account. You will d or receive any emails until you delete some items” என ஒரு செய்தி கிடைக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க, நம் ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள மெயில்களில், அதிக அளவு இடத்தைப் பிடித்திருக்கும் மெயில்களைக் கண்டறிந்தால், அவற்றை நீக்கிவிடலாமே!
தேவையற்ற இøணைப்புகள், போட்டோக்கள், இமேஜ், வீடியோ கிளிப்கள் என அதிகம் இடம் பிடிக்கும்  மெயில்களை எப்படிக் கண்டறிவது என்று இங்கு காணலாம். இதற்கு நமக்கு உதவுவது  FindBigmai  என்னும் சேவையாகும். இந்த சேவை, நம் ஜிமெயில் இன்பாக்ஸினை முழுமையாக ஸ்கேன் செய்து, எந்த எந்த மெயில்கள், அதிக அளவில் இணைப்புகளைக் கொண்டுள்ளன என்று காட்டும்.  அவற்றைத் தனியே வடிகட்டும். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.


1. முதலில்  http://findbigmail.com/  என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

2. அங்கு உங்கள் இமெயில் முகவரியைத் தரச் சொல்லி கட்டம் கிடைக்கும். பின்னர், அருகே உள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டில் நுழைய, உங்கள் அனுமதி கேட்கப்படும்.

3. அனுமதி கொடுத்தவுடன்,  FindBigmail   தன் பணியைத் தொடங்கும். பெரிய அளவிலான இணைப்புகள், படங்கள், டாகுமெண்ட்கள் மற்றும் பிற பைல்களைக் காட்டும். உங்கள் மெயில் இன்பாக்ஸைப் பொறுத்து, இந்த பணி முடிய 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் ஆகலாம்.  இந்த பணி நடக்கையில், நீங்கள் தொடர்ந்து உங்கள் இமெயில் பார்க்கும் பணியையும் மேற்கொள்ளலாம்.

4. தேடல் நடக்கும்போதே, எத்தனை மெயில்களில் அதிக அளவில் இணைப்புகள் உள்ளன என்ற செய்தி காட்டப்படும்.  இந்த தேடல் முடியும் வரை, உங்கள் பிரவுசரை மூடக் கூடாது.  முடிவில், மிகப் பெரிய மெசேஜ்களின் எண்ணிக்கை, ஓரளவில் இடத்தைப் பிடித்தி ருக்கும் மெயில்களின் எண்ணிக்கை என சார்ட் மூலம் காட்டப்படும். அதன் அருகே உள்ள லிங்க்கில் கிளிக் செய்தால், அவை பட்டியலி டப் படும்.  அவற்றில் கிளிக் செய்து, படித்துப் பார்த்து, தேவையில்லை என்றால், அவற்றை நீக்கிவிடலாம்.
 இந்த சேவை, பல புதிய லேபிள்களையும் உருவாக்கும். அவற்றில் அதிக அளவில் இடம் பிடிக்கும் டாப் 20 இமெயில்கள், பின்னர் அளவின் அடிப்படையில் இடம் கொண்டிருக்கும் இமெயில்களுக்கான லேபிள்கள் இருக்கும். இவற்றை ஜிமெயிலின் பக்கவாட்டில் இருக்கும் சைட்பாரில் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து, மொத்தமாகவும், தனித்தனியாகவும் அழிக்கலாம். மொத்தமாக அழிக்க, Settings > Labels  சென்று அழிக்கலாம்.
ஒவ்வொன்றாகவும் நீக்கலாம். இவற்றை அழிக்கையில், எவ்வளவு இடம் கிடைக்கிறது எனவும் காட்டப்படும்.  இவ்வளவும் முடிந்த பின்னர், பெரிய வீட்டில் இஷ்டத்திற்கு விளையாடும் குழந்தை போல, உங்கள் ஜிமெயிலை நீங்கள் பயன்படுத்தலாம்.