Thursday, January 6, 2011

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!


வரலாற்று ஆசிரியர்களையும், தொல்லியல் நிபுணர்களையும் இன்று வரை வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருப்பவை, எகிப்தில் உள்ள பிரமாண்ட பிரமிடுகள். இவற்றை ஒட்டியுள்ள `ஸ்பிங்க்ஸ்’ (சிங்கத்தின் உடலும், மனிதத் தலையும் கொண்ட மகா உருவம்) போன்ற அமைப்புகளும் ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்க்க வைக்கின்றன.

`கிஸா’ பிரமிடு பகுதியில் கட்டப்பட்ட 3 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான ஒரு மண் சுவரை தற்போது தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்தச் சுவர், கிஸா பிரமிடையும், கிரெட் ஸ்பிங்ஸையும் மணல் வீச்சில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கட்டப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்து. இரண்டு பகுதிகளாகக் காணப்படும் அந்தச் சுவர், நான்காம் துட்மோஸ் அரசர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


கி.மு. 14-ம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட 8-வது பாரோ மன்னர் அவர். சுவரின் இரண்டு பகுதிகளும் சுமார் மூன்றடி உயரம் இருக்கின்றன. ஒரு பகுதி, வடக்கு- தெற்கு திசையில் 86 மீட்டர்கள் நளமும், மற்றொரு பகுதி கிழக்கு- மேற்கு திசையில் 46 மீட்டர்கள் நீளமும் இருக்கின்றன. இங்கு இதுபோல மறைந்து கிடக்கும் மேலும் பல ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வில் தொல்லியல் நிபுணர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Hard Disk னை விருப்பபடி பிரிக்க - Free Disk Manager

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் Hard Disk ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C: D: E:) என தனித்தனி பகுதியாக Hard Disk பிரித்து வைத்திருப்போம். முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த Hard Disk னை மீண்டும் மறுசீரமைக்க முடியாது என நம்மில் சிலர் நினைப்போம் ஆனால் இவ்வாறு பிரித்த Hard Diskனை நம்முடைய விருப்பபடி பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஏன் நாம் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் கூடவே இதை நம்மால் செய்ய முடியும்.


இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருட்கள் நம்பக தன்மையற்றதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க வேண்டுமெனில். நாம் மென்பொருளை உரிய உரிமத்துடன் பெற வேண்டும். நாம் இதை பணம் செலுத்தி பெற வேண்டும். இல்லாமல் இலவசமாகவும் பெற முடியும். அப்படிப்பட்ட மென்பொருள்தான் Disk Manager.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்க சுட்டி1


இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Get Keycode என்ற Buttonனை அழுத்தவும். உடனே உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு பெயர் மற்றும் கீ இரண்டும் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் முதலில் சென்ற தளத்திலேயே மென்பொருளை தரவிறக்கி கொள்ள சுட்டியானது இருக்கும். பின் நீங்கள் மென்பொருளை நிறுவும் போது இந்த பெயர் மற்றும் கீயை உபயோகித்து நிறுவிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன், ஏற்கனவே பிரிக்க Hard Diskனை நீங்கள் மீண்டும் Delete, Format,Re Size போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் Xp/Vista/7 போன்ற இயங்குதளங்களில் செயல்படக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது Fat32,Fat16,Ntfs போன்ற பைல் சிஸ்ட்டங்களை ஆதரிக்க கூடியது ஆகும். ஒரு Partition ல் உள்ள பைல்களை மற்றொரு Patrician க்கு மாற்றிக்கொள்ள முடியும். மேலும் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது.

வரலாற்றில் இன்று: ஜனவரி 05

1846: அமெரிக்காவின் ஓரிகன் பிராந்தியத்தை பிரிட்டனுடன் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.

1854: சான் பிரான்ஸிஸ்கோவில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 300 பேர் பலி.

1896: வில்லியம் ரொஞ்ஜன் கதிர்வீச்சொன்றை கண்டுபிடித்ததாக ஆஸ்திரிய பத்திரிகையொன்று செய்திவெளியிட்டது. இக்கதிர்வீச்சு எக்ஸ்றே கதிர் எனப் பிரபலமாகியது.

1909: பனாமாவின் சுதந்திரத்தை கொலம்பியா அங்கீகரித்தது.
1940: எவ்.எம். வானொலி முதல்தடவையாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது.

1971: உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில்  மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

1976: கம்போடியாவின் பெயர் 'ஜனநாயக கம்பூச்சியா' என மாற்றப்பட்டது.
1993:  ஸ்கொட்லாந்துக்கு அருகில் எண்ணெய் தாங்கி கப்பலொன்று மூழ்கியதால் 84,700 தொன் எண்ணெய் கடலில் கசிந்தது.

Divx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் இலவசமாகDivx என்றால் என்ன?


Divx என்பது Digital video Express என்பதன் சுருக்கமாகும். இது Divx inc நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ வகைகளுள் ஒன்றாகும் (Video format). இதன் மூலம் நம்மால் பெரிய அளவிலான வீடியோ கோப்புகளை சிறிய அளவில் சுருக்கி வைத்துக்கொள்ள முடியும். முக்கிய விசயம் என்னவென்றால் இதனால் வீடியோவின் தரம் குறைந்து விடாது என்பது தான்.

Divx மென்பொருள் தொகுப்பில் கீழ்க்கண்ட மென்பொருள்கள் அடங்கியுள்ளன.

1. DivX plus player
2. DivX plus Converter
3. DivX plus Codec
4. DivX Web Player.

Divx player – Divx, avi, mp4,wmv,mkv போன்ற முக்கிய வீடியோ வகைகள் அனைத்தையும் இயக்க முடியும்.

Divx converter – இதன் மூலம் எந்த வீடியோ வகைகளிலிருந்தும் divx வடிவத்திற்கு
மாற்றிக்கொள்ளலாம்.

Divx codec – கணிணியில் divx வகையிலான வீடியோ படங்களை இயக்குவதற்கு
உதவும் நிரலாகும்.

Divx web player – IE, Firefox போன்ற Web Browser பயன்படும் ஒரு நீட்சியைப்போன்றது. இதன் மூலம் வெப் சர்வர்களில் வைக்கப்பட்டுள்ள படங்களை தெளிவாக காண முடியும்.

நம்மால் இதன் இலவச மென்பொருள் தொகுப்பு மட்டுமே சாதாரணமாக தரவிறக்க முடியும். தற்போது ஆன்லைனில் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை விற்பனை செய்யும் NewEgg நிறுவனத்தால் 20 டாலர் மதிப்புள்ள Divx plus Pro 8 ஐ இலவசமாக தரவிறக்க அனுமதித்துள்ளது.

தரவிறக்க முகவரி:http://promotions.newegg.com/Software/110410divx/install.html

4 லட்சம் ஆண்டு முந்தைய மனிதனின் பல் கண்டுபிடிப்பு

டெல்அவிவ்: இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது ரோஷ்ஹாஆயின். இங்கு உள்ள மிக பழமையான கீசெம் குகையில் டெல்அவிவ் பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சியாளர்கள் அவிகோபர், டாக்டர் ரான்பர்கி தலைமையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 மனித பற்கள் உள்ளிட்ட ஏராளமான புதைபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நெருப்பை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள், வேட்டையாடியதற் கான சான்றுகளாக ஆயுதங்கள், அசைவ உணவுகளை சமைத்து உண்பதற்கு ஏதுவாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், கத்தி உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன. பற்களை ஆராய்ந்ததில் அவை 4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிக மனிதர்களின் பற்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது: நாகரிக மனிதன் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆவதாகவும் அவர்கள் ஆப்ரிக்காவில்தான் முதலில் தோன்றினர் என்றுமே இன்றளவும் நம்பப்படுகிறது.

ஆனால் நாகரிக மனிதன் தோன்றி 4 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்பதையும் அவர்கள் இஸ்ரேலில்தான் முதன் முதலில் தோன்றினர் என்பதையும் தற்போதைய கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தி உள்ளது. 2000 ம் ஆண்டில் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த பற்களை வைத்து மார்பாலஜி, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தியதில் அவை 4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதியாகி உள்ளது.