Thursday, January 6, 2011

4 லட்சம் ஆண்டு முந்தைய மனிதனின் பல் கண்டுபிடிப்பு

டெல்அவிவ்: இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது ரோஷ்ஹாஆயின். இங்கு உள்ள மிக பழமையான கீசெம் குகையில் டெல்அவிவ் பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சியாளர்கள் அவிகோபர், டாக்டர் ரான்பர்கி தலைமையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 மனித பற்கள் உள்ளிட்ட ஏராளமான புதைபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நெருப்பை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள், வேட்டையாடியதற் கான சான்றுகளாக ஆயுதங்கள், அசைவ உணவுகளை சமைத்து உண்பதற்கு ஏதுவாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், கத்தி உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன. பற்களை ஆராய்ந்ததில் அவை 4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிக மனிதர்களின் பற்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது: நாகரிக மனிதன் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆவதாகவும் அவர்கள் ஆப்ரிக்காவில்தான் முதலில் தோன்றினர் என்றுமே இன்றளவும் நம்பப்படுகிறது.

ஆனால் நாகரிக மனிதன் தோன்றி 4 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்பதையும் அவர்கள் இஸ்ரேலில்தான் முதன் முதலில் தோன்றினர் என்பதையும் தற்போதைய கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தி உள்ளது. 2000 ம் ஆண்டில் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த பற்களை வைத்து மார்பாலஜி, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தியதில் அவை 4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதியாகி உள்ளது.

No comments:

Post a Comment