Friday, December 17, 2010

மோனலிசா ஒவியத்தின் புன்னகையின் இரகசியம் அறியப்பட்டுள்ளது

உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா ஒவியத்தின் மயக்கும் புன்னகைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து விட்டனர். மோனலிசா ஓவியத்தில் காணப்படும் புன்னகை உலக மக்களை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.

மோனலிசா ஓவியத்தை நேரே பார்க்கும் போது அது புன்னகை செய்வதாக எமக்கு தென்படுவதில்லை, ஆனால் ஒரு பக்கத்தில் இருந்து அந்த ஓவியத்தை உற்று நோக்கினால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.

இந்தத் தோற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டாவின்சி எந்த வகையான நுணுக்கத்தைக் கையாண்டு இந்த ஓவியத்தை வரைந்திருப்பார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.

மோனலிசா ஓவியத்தின் மீது 'எக்ஸ்ரே' கதிர்கள் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டதில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. டாவின்சி காலத்தில் மூன்று விதமான அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றான 'புமாட்டோ', முறையைப் பயன்படுத்தியே டாவின்சி, மோனலிசாவின் புன்னகையை உருவாக்கியுள்ளார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் மோனலிசாவின் இதழ்களின் மீது பல்வேறு வர்ணங்களை 40 அடுக்குகளாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னகை இருக்கும் இடத்தில் மட்டும் டாவின்சி, தூரிகையைப் பயன்படுத்தாமல் தன் கைவிரல்களைப் பயன்படுத்தியுள்ளதும் 'எக்ஸ்ரே' ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 16

1431: இங்கிலாந்தின் 6 ஆம் ஜோர்ஜ் மன்னர் பிரான்ஸின் மன்னராக பாரிஸில் முடிசூட்டப்பட்டார்.
1946: ஐ.நாவில் தாய்லாந்து இணைந்தது.
1950: கொரிய யுத்தத்தில் சீனப்படைகள் வடகொரிய படையினருடன் இணைந்ததையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார்.
1971: பங்களாதேஷ் பிரிவினை யுத்தத்தின்போது இந்தியப் படையினரும் பங்களாதேஷின் முக்தி பாஹினி கெரில்லாக்களும் பாகிஸ்தான் படையினரை தோற்கடித்தனர். 93000 பாகிஸ்தான் படையினர் சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பொறுப்பான ஜெனரல்; ஏஏ.கே.நியாஸியும் இந்திய இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் ஜகித் சிங் அரோராவும் கையெழுத்திட்டனர்.

1986: சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கஸகஸ்தான் பிராந்தியத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.
1991: கஸகஸ்தான் சுதந்திர தனி நாடாகியது.