Wednesday, January 5, 2011

வரலாற்றில் இன்று: ஜனவரி 04

கி.மு. 45: ரஷ்பினா சமரில் டைட்டஸ் லாபீனஸை ஜூலியஸ் சீசர் தோற்கடித்தார்.

1642: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், நாடாளுமன்ற அங்கத்தவர்களை கைது செய்வதற்கு படையினரை அனுப்பியதையடுத்து சிவில் யுத்தம் மூண்டது.

1762: ஸ்பெய்ன் மற்றும் நேப்பிள்ஸ் மீது பிரிட்டன் யுத்தப் பிரகடனம் செய்தது.

1865: நியூயோர்க் பங்குச் சந்தை தனது முதலாவது நிரந்தர தலைமையகத்தை நியூயோர்க் நகர வோல் ஸ்ரீட்டில் திறந்தது.

1948: பிரிட்டனிடமிருந்து பர்மா சுதந்திரம் பெற்றது.

1951: கொரிய யுத்தத்தில் சீன-வடகொரிய படைகள் சியோல் நகரை கைப்பற்றின.

2004: நாசாவினால் ஏவப்பட்ட மார்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

2007: அமெரிக்காவில் முதலாவது பெண் சபாநாயகராக நான்ஸி பெலோஸி தெரிவானார்.

2007: உலகின் மிக உயர்ந்த கட்டிடமான கட்டிடமான 'புர்ஜ் கலீபா' (2717 அடி) துபாயில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

நீங்கள் மறப்பதினை நினைவூட்டும் இணைய தளம்.(http://www.remime.com/)


மறதி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உள்ளதாகும். வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகளை நாம் மறந்து போகிறோம். நண்பர்களின் பிறந்த நாள், நண்பர்களின் திருமணம்,, என எத்தனையோ விடயங்களை நாங்கள் வாழ் நாட்களில் மறந்து விடுகிறோம்.


எம்முடன் இருப்பவர்களும் எமக்கு அதனை நினைவூட்ட மறந்துவிடுகின்றனர். ஆனால் நாம் அன்றாடம் உறவாடும் கம்ப்யூட்டரும் இணையமும் இந்த பணியை நமக்குச் சரியாக மேற்கொண்டு நம்மை பல இக்கட்டுகளிலிருந்து பாதுகாக்கின்றன. இதற்காகவே ஒரு இணையதளம் நினைவுபடுத்தும் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.  


இதன் பணிகளைப் பார்த்தால் நிச்சயம் இதனைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் முடிவு செய்வீர்கள். இந்த சேவை இலவசமாகக் கிடைக்கிறது என்பது இன்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.  http://www.remime.com என்பதே அந்த தளத்தின் முகவரி. இதில் Log On செய்து முதலில் உங்களுக்கென்று ஒரு கணக்கினை ஆரம்பியுங்கள். பின்னர் உங்கள் இமெயில் முகவரியை டைப் செய்து பாஸ்வேர்ட் ஒன்று உருவாக்கவும். முக்கியமாக எந்த நேர வளாகத்தில் (time zone) நீங்கள் உள்ளீர்கள் என்பதனைக் குறிப்பிடுவது முக்கியம்.

அங்கு தரப்பட்டிருக்கும் வேரிஃபிகேசன் சொல்லை (verification Words) டைப் செய்து Create My Account என்ற இடத்தில் என்டர் தட்டவும். பின் ஓரிரு நிமிடங்களில் நீங்கள் கொடுத்த இமெயில் அக்கவுண்ட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டு உங்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்படும். இனி மீண்டும் அந்த தளத்திற்குச் சென்று உள்ளே செல்லவும். உள்ளே நுழைந்தவுடன் அங்கு மூன்று டேப்கள் இருப்பதனைக் காணலாம். முதலாவதாக Home என்ற பிரிவு. இதில் பிறந்தநாள்கள், முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிந்து கொள்ள வசதி தரப்பட்டிருக்கும்.

இவற்றின் கீழேயே அடுத்து வர இருக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் மற்றும் உங்கள் அக்கவுண்ட்டிற்கான லிங்க்குகளைக் காணலாம். தானாகவே நீங்கள் அடுத்து வர இருக்கும் நிகழ்ச்சிகள் (Upcoming Events) பட்டியலில் இருப்பீர்கள். My Account என்ற பகுதியில் கிளிக் செய்தால் நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்களை எடிட் செய்து மாற்றலாம். Birthdays என்ற பிரிவு மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

View All Birthdays, Add New Birthday, Import and Get Friend’s Birthday இதில் எனத் தரப்பட்டிருக்கும். Get Friend’s Birthday என்ற பிரிவின் மூலம் உங்கள் நண்பருக்கு இமெயில் மூலம் செய்தி அனுப்பி அவரின் பிறந்த நாளைக் காணலாம். Events என்ற பிரிவில் முக்கிய நிகழ்ச்சிகளைப் பதிந்து வைத்து அறிந்து கொள்ளலாம். புதிய நிகழ்ச்சிகளையும் சேர்க்கலாம். புதிய நிகழ்ச்சிகளைச் சேர்க்கையில் அது குறித்து ஒரு நினைவூட்டல் வேண்டுமா அல்லது அடுத்தடுத்து வேண்டுமா என்று குறிப்பிடலாம். இவ்வாறு தர வேண்டிய தகவல்களைத் தந்துவிட்டால் இந்த தளம் தானாக உங்களுக்கு அவ்வப்போது நீங்கள் செட் செய்ததற்கு ஏற்ப நினைவூட்டும் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கும். இது உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கு

கணனியின் உட்கட்டமைப்பு தகவல்களை அறிந்துகொள்ள ஒரு இலவச மென்பொருள்


கணனியின் உள்ளக கட்டமைப்புக்கள் மற்றும் அதன் வன்பொருட்கள்  பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவென பலவழிகள் உள்ளன.

அவ்வாறு பலவழிகள் இருகின்றபோதிலும் QuickSYS Informer என்னும் மென்பொருளானது கணனியின் உட்கட்டமைப்புகள்  பற்றிய தகவல்களை வழங்குவதோடு இந்த மென்பொருளானது மிக இலகுவான இடைமுகத்துடன் (Interface) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளானது
CPU usage;
Hard disk usage;
Memory usage;
Network adapter use; and
Battery life (for notebooks)

போன்றவற்றின் தகவல்களை அறிந்து கொள்ளகூடியவிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உங்கள் கணணி மெதுவாக வேலை செய்யும் நேரங்களில் அதன் குறைகளை அறிந்து கொள்ளக்கூடிய விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளினை windoows 2000, 2003, XP, Vista, or Windows 7 (32 and 64 bit versions)  போன்ற இயங்குதளங்கள் உள்ள கணனிகளில் நிறுவமுடியும் அத்துடன் 1.4MB இடவசதி போதுமானதாக உள்ளது.

3D ஐபோன்கள் விரைவில் அறிமுகம்

கண்ணாடிய அணிய அவசியமில்லாத 3டி ஐபோன்களை தயாரித்து விற்பனைக்கு விடஉள்ளது ஆப்பிள் நிறுவனம். தற்போதுள்ள 3டி வீடியோக்களும், படங்களும் பார்ப்பதற்கு அதற்கான பிரத்யேக கண்ணாடிகள் அவசியம் தேவை.

தற்போது ஆப்பிள் நிறுவனம் அதற்கான திரைகளை தயாரித்து அதன்வழியாக படங்களை காண்பிக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ஹாலோகிராம் சங்கேத குறியீடுகளை உபயோகித்து சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் ஐபோனிலும், கம்ப்யூட்டரிலும்பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

4000 வருடங்கள் வாழும் தாவரம்

கீழ் உள்ள படத்தில் காணப்படும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர்வாழும் உயிரியாக இது கருதப்படுகிறது.
இதன் பெயர் Redwood Tree ஆகும். இது கலிபோர்னிய காடுகளில் காணப்படுகிறது. இதன் தண்டு செங்கபில நிறமானது. இவை என்றும் பசுமையானது.
கம்பீரமாக வளரும் இத்தாவரம் 24 மீற்றர் சுற்றளவை கொண்டுள்ளது. 120 மீற்றர் உயரத்தையும் உடைய இத்தாவரம் 2400-4000 வருடங்கள் உயிர்வாழ்வதாக ஆய்வுகளினால் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் எடை  சராசரியாக 2000 தொன் என கணிக்கப்பட்டுள்ளது.

Nokia Video Converter With License Key

எத்தனையோ வீடியோ கன்வெர்ட்டர்கள் இருந்தாலும், ஒவ்வொன்றிலும் ஒரு குறைபாடு இருக்கிறது, அனைத்துக்கும் மேலாக இணையத்தில் இருந்து பதிவிறக்கும் மென்பொருட்கள் சில நம்பக தன்மையற்றதாக இருக்கிறது, நாம் வீடியோவினை கன்வெர்ட் செய்ய பலமென்பொருட்களை உபயோகிப்போம், குறிப்பாக மொபைல் போன்களுக்கு வீடியோவை கன்வெர்ட் செய்வது என்பது, அவ்வளவு சாதாரண் விஷயம் அல்ல நாம் 3gp மாற்றினாலும் சில வீடியோக்கள் மொபைல் போன்களில் Play ஆகாது, சில நேரத்தில் மொபைல் போனுக்கு ஒரு குறிப்பிட்ட வீடியோவை மாற்ற நினைத்து இணையத்தில் இருந்து ஒரு கன்வெர்ட்டரை பதிவிறக்கி இன்ஸ்டால் செயத பிறகு கீ கேட்டும், ஒரு சில குறிப்பிட்ட மென்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கன்வெர்ட் செய்ய அனுமதிக்கும்.

நாம் மொபைல் போன்களுக்கென சிறப்பான ஒரு வீடியோ கன்வெர்ட்டரை தேடி பார்ப்போம், அகப்பட்ட வீடியோ கன்வெர்ட்டரை எல்லாம் கணினியில் நிறுவி பார்த்து ஏமாற்றமே மிஞ்சும். இந்த அனைத்துவிதமான தொல்லைகளையும் தாண்டி அருமையான வீடியோ கன்வெர்ட்டர் தான் Nokia Video Converter.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் மென்பொருளை பதிய கீ கேட்டும். அப்போது கீழே உள்ள பெயர் மற்றும் கோடினை காப்பி  மென்பொருளை நிறுவிக்கொள்ளவும்.
Name:  WonderFox Giveaway
Code:  41DC2FFF3DBBE001FF40305BE5FF49C5A466FD8A

பின் நோக்கியோ வீடியோ கன்வெர்ட்டரானது, முழுமையாக உங்கள் கணினியில் பதியப்பட்டுவிடும். பின் நீங்கள் விரும்பியவாறு வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த கன்வெர்ட்டர் நோக்கியோ மொபைல்களுக்கென உள்ளது ஆகும்.

Pen Drive ல் இருக்கின்ற ஆவணங்கள் இல்லை என காட்டினால் என்ன செய்வது?

நீங்கள் வைரஸ்கள் நிறைய உள்ள பென்ரைவினை சுத்தமாக்கும் போது அல்லது உங்கள் பென் டிரைவினை கணினியில் செலுத்தியதும் சில வேளைகளில் ஒன்றும் இல்லாத Icons களாகவெ காணப்படும். பென் டிரை வடிவிலான Icons காணப்படும் இப்படி இந்த Icons களை திறந்து பார்த்தால் உள்ளெ ஒன்றும் இருக்காது.

பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் Icons களாக மாறிவிடுகின்றன. அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை. தற்போதைக்கு காட்டும் போது Icon னாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?

1. Start - > Run
செல்லவும்
2.
அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3.
பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
Enter  தட்டவும்.

attrib -h -r -s /s /d X:\*.*
இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.
4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.

இறுதியாக உங்கள் கணிணியை சிறந்த Malware 
மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்