Tuesday, January 25, 2011

இணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை Download செய்ய


இணையத்தில் நாம் வீடியோக்களை கண்டிருப்போம். இதில் ஒரு சில வீடியோக்களை நாம் கணினியில் டவுன்லோட் செய்ய நினைத்தால் அந்த தளங்களில் டவுன்லோட் செய்யும் வசதியை அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள். ஆகையால் இந்த வீடியோக்களை டவுன்லோட் செய்ய நாம் ஒருசில மென்பொருட்கள் அல்லது சில இணையதளங்களில் உதவியோடு டவுன்லோட் செய்வோம். இந்த வரிசையில் நாம் இன்று பார்க்கும் மென்பொருள் மிகவும் பயனுள்ளது.



மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் இருக்கும் சுமார் 280 தளங்களில் இருந்து நமக்கு தேவையான வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம். எந்த மென்பொருளிலும் இவ்வளவு தளங்களில் இருந்து டவுன்லோட் செய்ய முடியாது.
  • ஒரே நேரத்தில் 1 முதல் 20 வீடியோக்கள் வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • வீடியோக்களை தரவிறக்கும் போதே CONVERT செய்து கொள்ளும் வசதி.
  • 3.19 அளவே உடைய மிகச்சிறிய இலவச மென்பொருள்.
பயன்படுத்தும் முறை: 
  • கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 
  • இப்பொழுது இன்ஸ்டால் செய்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும் வீடியோவின் URL கொடுத்து அந்த DOWNLOAD என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யப்படும் எண்ணிக்கை இதில் 2 ஆக இருக்கும். இதனை மாற்ற SETTING க்ளிக் செய்து அதில் வரும் விண்டோவில் உங்கள் எண்ணிக்கை தேர்வு செய்யுங்கள். 
  •  இதில் அதிக பட்சம் 20 வீடியோக்களை ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யுமாறு தேர்வு செய்து கொள்ளலாம்.
  • டவுன்லோட் செய்யும் போதே வீடியோவை நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி உள்ளதால் டவுன்லோட் செய்து CONVERTER  மென்பொருள் கொண்டு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
  •  இதற்க்கு OUTPUT SETTINGS என்பதை க்ளிக் செய்து தேவையான பார்மட்டை செட் செய்து கொள்ளுங்கள்.
  • இது போன்று வீடியோக்களை நாம் மிக சுலபமாக இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். 280 தளத்திற்கும் மேலே இந்த மென்பொருள் மூலம் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இந்த பட்டனை அழுத்துங்கள் 





மென்பொருளை பற்றி மேலும் அறிந்து கொள்ள http://www.allvideodownloader.com

வரலாற்றில் இன்று: ஜனவரி 24

1941: கலிகுலா என அறியப்பட்ட ரோம மன்னன் கையுஸ் சீசஸ் படுகொலை செய்யப்பட்டான்.

1857: தெற்காசியாவின் முதலாவது பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1862:
ருமேனியாவின் தலைநகராக புகாரெஸ்ட் தெரிவுசெய்யப்பட்டது.

1918: ரஷ்யாவில் கிறகரியன் கலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1924: ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பர்க் என முன்னர்அறியப்பட்ட பெட்ரோகார்ட் நகரின் பெயர் லெனின்கிராட் என மாற்றப்பட்டது.

1939: சிலியில் இடம்பெற்ற பூகம்பத்தில் சுமார் 5000 பேர் பலியாகினர்.

1966: பிரான்ஸ், இத்தாலி எல்லையில் எயார் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால் 117 பேர் பலி.

1972: இரண்டாம் யுத்தத்தின் முடிவிலிருந்து குவாம் காட்டில் மறைந்திருந்த ஜப்பானிய படைவீரர் சோய்ச்சி யோகோஸ் கண்டுபிடிக்கப்பட்டார்.

1986: வொயேஜர் 2 விண்கலம்  யுரானஸ் கிரகத்தை 81500 கிலோமீற்றர் தொலைவில் கடந்து சென்றது.
1993: துரக்கிய பத்திரிகையாளர் உகுர் முக்கு, கார் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.

1996: ரஷ்யாவுக்காக உளவுபார்த்தாக குற்றம் சுமத்தப்பட்ட போலந்து பிரதமர் ஜோசப் ஒலெக்ஸி இராஜினாமாச் செய்தார்.

2003: அமெரிக்காவில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் செயற்பட ஆரம்பித்தது.