Sunday, December 12, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 11

1792: பிரான்ஸில் 16 ஆம் லூயி மன்னன் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

1907: நியூஸிலாந்து நாடாளுமன்றக் கட்டிடம் தீயினால் முற்றாக சேதமடைந்தது.

1917: ரஷ்யாவிடமிருந்து பிரிந்து லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1941: அமெரிக்காவுக்கு எதிராக அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான  ஜேர்மனியும் பெனிட்டோ முஸோலினி தலைமையிலான இத்தாலியும் யுத்தப்பிரகடனம் செய்தன. பதிலுக்கு அமெரிக்காவும் இந்நாடுகள் மீது யுத்தப் பிரகடனம் செய்தது.

1946: யுனிசெப் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1994: ரஷ்ய துருப்புகள் செச்சென்யா மீது படையெடுத்தன.

1998: தாய்லாந்து விமானமொன்று சூரத் தானி விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் 101 பேர் பலி.
 

டைட்டானிக் கப்பல் சிதைவுகளை.. வேகமாக அழிக்கும் புது பாக்டீரியா

டொரன்டோ: 1912ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், அட்லான்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி 2223 பயணிகளுடன் விபத்தில் சிக்கியது. இதில் 706 பயணிகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற அனைவரும் இறந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வை, 98 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதன் சிதைந்து போன எஞ்சிய பாகங்களின் மூலம் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

இவை அட்லான்டிக் கடல் பகுதியில் காட்சிப்பொருளாக வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் டைடானிக் கப்பலின் பாகங்கள் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. அதில் இருந்து சேகரிக்கப்பட்ட நுண்ணுயிரியின் டிஎன்ஏ பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஆரஞ்சு நிறத்தில் உள்ள புதிய வகை பாக்டீரியா இரும்பை வேகமாக அழித்து வருவது தெரிந்தது. இதனால் மிகவிரைவில் டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் முற்றிலும் அழிந்து தடயமின்றி போய் விடும் என்று கவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

டல்ஹொஸ் ஹாலிபாக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவில் உள்ள நோவா ஸ்காட்டியா பல்கலைக்கழகம், ஸ்பெயின் செவிலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து ஹென்ரீடா மான், பவ்லீன் கோர் ஆகியோர் தலைமையில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதில் கப்பலின் துருவை பொடியாக்கி அழித்து வரும் பாக்டீரியா முற்றிலும் புதிய வகை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது,

‘இரும்பு துருப்பிடித்து மண்ணுடன் கலப்பதுதான் இயற்கை நியதி. இது கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்களான பாக்டீரியாக்கள் மூலம் சாத்தியமாகிறது. இது மிகவும் மெதுவாகவே நடைபெறும். ஆனால் புதுவகை பாக்டீரியா, டைட்டானிக் கப்பல் பாகங்களை வேகமாக அழித்து வருகிறது.

அந்த புது பாக்டீரியா இரும்பை சிதைப்பதில் அதிக சக்தி வாய்ந்தது என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது. இரும்பை அழிக்கும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உள்ளன. இருப்பினும் புதிய பாக்டீரியா அதிவேகமாக செயல்படுகிறது. அதிக பட்சமாக இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை மட்டுமே இதன் சிதைந்த பாகங்கள் இருக்கும்Õ என்று கவலையோடு சொல்கிறார்கள்.