Tuesday, December 21, 2010

Hpன் Palm pre 2 உத்தியோகபூர்வமாக அறிமுகம்

Hp நிறுவனம் தனது புதிய  Palm pre 2 ஸ்மார்ட் செல்பேசியினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளது.

உலகிலேயே ஜிகாஹேர்ட்ஸ் processor உடன் வெளிவரும் முதலாவது ஸ்மார்ட் தொலைபேசி இதுவாகும். HP webOS 2.0 இயங்கு தளத்துடனும் 5 மெகா பிக்ஸல் கமெராவுடன் இந்த புதிய Palm pre 2 ஸ்மார்ட் செல்பேசி வெளிவருகிறது.
 இந்த புதிய வகை செல்பேசி தொடர்பான முழுமையான விபரங்களை அறிய HP Palm இணைய தளத்தை நாடவும்.

தற்போது நீங்கள் Delete செய்த ஜிமைல் முகவரிகளை மீளப் பெறலாம்

ஜி-மைல் பாவனையாளர்களை அடிக்கடி கூகிள் சந்தோசப்படுத்திவருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் தற்போதும் ஒரு சிறிய முக்கியமான வசதியினை ஜி-மெயில் தந்துள்ளது. தற்போது நீங்கள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப்பெறக்கூடியதாக கூகிள் ஒரு புதிய வசதியினை ஏற்படுத்தித் தந்துள்ளது.

இந்த புதிய வசதியினைக் கொண்டு , நீங்கள் 30 நாட்களுக்குள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரியினை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு உங்கள் மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப் பெற வேண்டுமாயின் ஜி-மைலில் காணப்படும் ‘contacts’ பிரிவிற்குள் சென்று ‘More actions’ பகுதியினை க்ளிக் செய்து அங்கு காணப்படும் “Restore contacts” என்பதனை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் அழிந்த மின்னஞ்ஞல்களை மீழப் பெற்றுக்கொள்ள முடியும்.


தவறுதலாக நீங்கள் ஏதேனும் முகவரிகளை அழித்திருந்தால் கவலைப்பட வேண்டாம். இந்த Restore முறையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

கூகிள் தேடுபொறியில் புகுத்தப்பட்டிருக்கும் புதிய பாதுகாப்பு கருவி

கூகிள் தனது தேடு பொறியில் பல வசதிகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பது உலகறிந்த விடயம். அந்த வரிசையில் கூகிள் தேடலில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய வசதியினைக் கொண்டு பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான இணைய தளங்களை அறிய முடியும்.

ஏதேனும் ஒரு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது அந்த இணைய தளமானது ஸ்பாம் களை கொண்டிருந்தாலோ அது தொடர்பான அறிவித்தலானது கூகிள் தேடல் முடிவில் “This site may be compromised.” எனும் அறிவித்தல் தோற்றுவிக்கப்படும். இந்த அறிவித்தல் மூலம் நாம் குறித்த இணைய தளத்திற்கு செல்வதா இல்லையா எனும் தீர்மானத்தை இலகுவில் எடுத்துக் கொள்ளலாம்.

 எனவே நீங்கள் இணைய தளங்களை கூகிளில் தேடும் போது இந்த பாதுகாப்பு அறிவித்தல் இருக்கிறதா என பார்த்துவிட்டு அந்த இணைய தளத்தினை பார்வையிடுங்கள்.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 20

1606: அமெரிக்காவின் முதலாவது நிரந்தர ஆங்கில குடியிருப்பாளர்களை ஏற்றிக்கொண்;டு 3 கப்பலக்கள இஙகிலாந்திலிரந்து புறப்பட்டன.
1917: சோவியத் யூனியனில் 'செக்கா' எனும் இரகசிய பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
1924: லான்ட்ஸ்பேர்க் சிறையிலிருந்து அடோல்வ் ஹிட்லர் விடுவிக்கப்பட்டார்.
1942: ஜப்பானிய விமானங்கள் கல்கத்தாவில் குண்டுவீசின.
1946: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 1300 பேர் பலி. 38000 வீடுகள் சேதம்.
1973: ஸ்பெய்ன் பிரதமர் அட்மிரல் லூயிஸ் பெலான்கோ கார் குண்டுத் தாக்குதலில் பலியானார்.
1987: பிலிப்பைன்ஸில் டெப்ளாஸ் நீரிணையில் எண்ணெய்தாங்கிக் கப்பலொன்றுடன் பயணிகள் கப்பலொன்று மோதியதால் சுமார் 4000 பேர் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. 1749 பேர் பலியானதாக உத்தியோகபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன
1989: பனாமாவில் மனுவில் நொரீகா தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா துருப்புகளை அனுப்பியது.
1995: அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் இடம்பெற்ற விமானவிபத்திழல் 160 பேர் பலி.
1999: மெக்கோவ் தீவு போர்த்துகலிடமிருந்து சீனாவிடம் கையளிக்கப்பட்டது.
2007: இரண்டாம் எலிஸபெத் அரசியார் பிரிட்டனில் அதிக வயதில் ஆட்சியிலிருந்தவர் எனும் சாதனைக்குரியவரானார். அவருக்குமுன் விக்டோரியா மகாராணியார் 81 வருடங்கள் ,7 மாதங்கள், 29 நாட்கள் உயிர்வாழ்ந்தார்.

ஜிமெயிலில் அற்புதமான புதிய வசதி

கூகுள் தேடுதல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்கையில், நாம் ஏதேனும் எழுத்துப் பிழை ஏற்படுத்தினால், உடனே கூகுள் “Did you mean” எனக் கேட்டுச் சரியான எழுத்துக்களுடன் அந்த தேடலுக்கான சொல் அல்லது சொல் தொடர்களை அமைக்கும்.அல்லது இப்படி அமைத்துத் தான் தேட விரும்புகிறீர்களா? என்று பொருள்பட நமக்கு சில காட்டப்படும். பெரும்பாலும், கூகுள் அமைத்திடும் சொற்கள் சரியாகவே அமையும். இதன் மூலம் நாம் தவறு செய்தாலும், சரியான தேடலுக்கு இது உதவிடுகிறது.

இப்போது இந்த வகை உதவி, ஜிமெயில் தேடலுக்கும் வழங்கப்படுகிறது. 
இமெயில் இன்பாக்ஸ் அல்லது மற்ற பெட்டிகளில் நாம் காண விரும்பும் டெக்ஸ்ட் உள்ள இமெயில்களைப் பார்த்திட, சில சொற்களை அமைத்துத் தேடுகையில், இதுதானா நீங்கள் தேடுவது என, வேறு சில சொற்களும் காட்டப்படுகின்றன.

சொற்களில் எழுத்துப் பிழை இருக்கையில், சரியான எழுத்துக்களுடன் சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் நம் தவறுகள் திருத்தப்படுகின்றன. தேடல்கள் விரைவு படுத்தப்படுகின்றன.