Wednesday, January 12, 2011

சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு; நாசா விஞ்ஞானிகள் தகவல்

விண்வெளியில் கிரகங் களை ஆய்வு செய்வதற் காக அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கெப் லர்-10 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியில் உள்ள கிரகங் களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

சமீபத்தில், கெப்லர்-10 செயற்கை கோள் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்து அனுப்பியுள்ளது. அது சூரிய கும்பத்தை விட்டு வெளியே உள்ளது. பூமியை போன்று தோற் றம் கொண்டது. இது முழு வதும் பாறைகளால் ஆனது. அது நட்சத்திர கூட்டங்களை சுற்றி வருகிறது. இந்த கிரகத் துக்கு கெப்லர்-10பி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதாவது 1371 டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் வெப்பம் உள்ளது. “எனவே, இங்கு மனிதர்கள் வாழ முடியாது. எனவே தான் இது உயிரினங்கள் வாழ தகுதியற்றது. இந்த தகவலை நாசா விஞ்ஞானிகள் நாசா விண்வெளி நிறுவனத்தின் கெப்லர் திட்ட விஞ்ஞானி டக்ளஸ் ஹட் ஜின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கிரகத்தில் கார்பன் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் இல்லை. எனவே, இங்கு ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ. மூலக்கூறுகள் தோன்ற வாய்ப்பு இல்லை. ஆகவே பூமியை போன்று இங்கு உயிரினங்கள் வாழ முடியாது. என்று நாசா வின் மற்றொரு விஞ்ஞானி நடாலி படால்கா தெரிவித் துள்ளார்.

விஷம் கக்கும் “”தங்கத் தவளை”

நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர்.

“தாவும் தங்கத் தவளை’ என்று அழைக்கப்படும் இந்த, “கோல்டன் டார்ட் பிராக்’ கொலம்பியா கடலோரத்தில் உள்ள அடர்ந்த மழைக் காடுகளில் அதிகமாக வாழ் கின்றன. அக்கால கொலம்பிய மக்கள், இத்தவளையின் விஷத்தை பிரித்தெடுத்து, அதை ஈட்டி, அம்பு முனைகளில் தடவி வேட்டைக்கு பயன்படுத்தி யுள்ளனர். எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், தவளை விஷம் தடவப்பட்ட அம்பு தாக்கியவுடன் மயங்கி விழுந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் விஷத்தன்மை கொண்ட தவளைகள் 100 வகை உள்ளன.

இவற்றில், “கோல்டன் டார்ட் பிராக்’ வகை தவளைகள் தான் பெரியவை. கொலம்பியா காடுகளில் உள்ள குறிப்பிட்ட சில தாவரங்கள், ஈக்கள், வண்டுகள், எறும்புகள், கரையான்கள் ஆகியவையே இவற்றின் முக்கிய உணவு. இத்தவளைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதற்கு, மனிதர்களால் தொடர்ந்து மழைக்காடுகள் அழிக்கப்படுவதே காரணம். இன்றைய நிலையில் இந்த தவளை இனம், வேகமாக அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தாவும் தங்கத் தவளைகள் பெரும்பாலும் மஞ்சள் வண்ணத்தில் தோற்றமளிக் கின்றன. இருப்பினும், ஆரஞ்சு, இளம்பச்சை உள்ளிட்ட வண்ணங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்த தவளைகள் வாழும் இடத்திற்கேற்ப அவற்றின் நிறங்கள் மாறுபடுவதாகவும், இதன் மூலம் இத்தவளைகள் தங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள் கின்றன என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. “தாவும் தங்க தவளை’ களின் விஷத் தன்மை குறித்து ஒரு சோதனை மேற் கொள்ளப் பட்டது. அதில், அத்தவளைகளின் இயற்கை யான வசிப்பிடங்களில் இருந்து மாற்றி, வழக்கமான உணவிற்கு பதில் வேறு உணவுகளை கொடுத்தனர்.

குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் சோதனை செய்ததில், அந்த தவளைகள் விஷத்தன்மை மிகவும் குறைந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, அடர்ந்த காடுகளில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட தாவரங்கள் மற்றும் சிறு பூச்சிகளை உட்கொள்வதால் மட்டுமே இத்தவளைகள் கொடிய விஷத்தை பெறுகின்றன என்று நம்பப்படுகிறது. தற்போது, இத்தவளைகளின் விஷத்தை கொண்டு சக்தி மிக்க வலி நிவாரண மருந்தை கண்டுபிடித்துள்ளனர்

எந்த கீ அழுத்தப்பட்டுள்ளது ?

வேகமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி, தகவல் ஒன்றைத் தேட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கையில், பாஸ்வேர்ட் தவறு என்றும், மீண்டும் முயற்சிக்கவும் என்ற செய்தியும் கிடைக்கும். சரியாகத்தானே கீ பிரஸ் செய்தோம் என்று பார்க்கையில், கேப்ஸ் லாக் அழுத்தியவாறு இருப்பதனைப் பார்த்து, அட! சே! என்று சொல்லியவாறே, கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி அதனை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பாஸ்வேர்ட் டைப் செய்வோம்.

கேப்ஸ் லாக் கீயில் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியும். ஆனால் நாம் அவசரத்தில் கவனிப்பதில்லை. மேலும் டேபிளின் கீ போர்டு பலகையில் கீ போர்டு வைத்து இயக்கும் போது, நமக்கு அதன் மேலாக உள்ள கேப்ஸ்லாக், ஸ்குரோல் லாக் வரிசை தெரியும்படி கீ போர்டினை இழுப்பதில்லை.

டெக்ஸ்ட் டைப் செய்கையில், மானிட்டர் திரையில் காட்டப்படும் எழுத்துக்களை வைத்து கேப்ஸ் லாக் கீ அழுத்தப்பட்டிருப்பதனை உணர்ந்து, திருத்திக் கொள்ளலாம். பாஸ்வேர்ட்களை அமைக்கையில் அந்த எழுத்துக்கள் திரையில் காட்டப்படாததால், நமக்கு சிக்கல்கள் எழுகின்றன. இந்த சிக்கல்களுக்குத் தீர்வுகள் தரும் வகையில் உள்ள புரோகிராம் ஒன்றினை அண்மையில் காண நேர்ந்தது. இதன் பெயர் கீ போர்ட் இன்டிகேட்டர் (Keyboard Indicator) என்பதாகும்.

இந்த புரோகிராம் இத்தகைய கீகள் எந்த நிலையில் உள்ளன என்பதைத் திரையில் காட்டும். கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக் மற்றும் நம் லாக் கீகளின் அப்போதைய நிலையை சிஸ்டம் ட்ரேயில் காட்டும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த புரோகிராமினைப் பயன்படுத்துகையில், ஸ்டேட்டஸ் பாரில் இந்த கீகள் குறித்த தகவல்கள் காட்டப்பட வேண்டுமாயின், அதனை கன்பிகர் செய்திட வேண்டும்.

கீகள் அழுத்தப்பட்ட நிலையில் இருந்தால் சிவப்பு வண்ணத்திலும், அழுத்தப்படாத நிலையில் இருந்தால், ஊதா நிறத்திலும் காட்டப்படும். மேலும் இதற்கான ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்றாலும், இந்த கீகளின் நிலை தெரியவரும். கீயின் நிலை மாறுகையில் விளக்கின் நிறம் மாறுவதுடன், அது குறித்த சிறிய செய்தி ஒன்றும் நமக்குத் திரையில் காட்டப்படுகிறது.

இந்த செய்தியையும் திரையின் எந்த மூலையில் காட்டப்பட வேண்டும் என்பதனை நாம் செட் அப் செய்திட முடியும். இந்த மூன்று கீகளுக்கு மட்டுமின்றி, இன்ஸெர்ட் கீ அழுத்தப்பட்டாலும் இதே போல செய்தி காட்டப்படும். இதனால் நாம் நம்மை அறியாமல் இந்த கீகளை அழுத்தினால், கிடைக்கும் செய்தியைப் பார்த்து சுதாரித்துக் கொள்ளலாம்.

இந்த புரோகிராமினை http://sites.google. com/site/roidayan/projects/keyboardindicator என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். 32 மற்றும் 64 பிட் கம்ப்யூட்டர்களில் இது செயல்படும். ஆனால் மைக்ரோசாப்ட் தரும் டாட் நெட் பிரேம் ஒர்க் 2.0 இதற்குத் தேவைப்படுகிறது. எனவே இதனையும் முதலில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வரலாற்றில் இன்று: ஜனவரி 11

630: முஹம்மது நபிகள் நாயகம் மக்காவை வெல்வதற்கான 10 ஆயிரம் பேர் கொண்ட படைக்கு தலைமை தாங்கினார்.
1779: மனிப்பூரின் மன்னராக சிங் தாங் கோம்பா முடிசூடினார்.
 
1879: தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயே - ஸுலு யுத்தம் ஆரம்பமாகியது.
1922: மனிதர்களின் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக முதல் தடவையாக இன்சுலின் பயன்படுத்தப்பட்டது.
 
1923: முதலாம் உலக யுத்தத்திற்கான இழப்பீட்டை செலுத்த வலியுறுத்துவதற்காக ஜேர்மனியின் ருஹ்ர் பிராந்தியத்தை பிரெஞ்சு, பெல்ஜிய படைகள் கைப்பற்றின.
1942: கோலாலம்பூரை ஜப்பான் கைப்பற்றியது.
 
1962: பெருவில் ஏற்பட்ட  பனிப்பாறை சரிவினால் சுமார் 4000 பேர்பலி.
1972: கிழக்கு பாகிஸ்தான் தனது பெயரை பங்களாதேஷ் என மாற்றிக்கொண்டது.
 

Personal Folder களை பாதுகாக்க இலவச மென்பொருள்

நமது  Personal  அல்லது முக்கியமான போல்டர்களையும் , கோப்புகளையும் பிறர் தெரிந்தோ தெரியாமலோ அழித்து விடவோ அல்லது பார்த்து விடவோ வாய்ப்புண்டு. விண்டோஸில் Hide வசதியை பயன்படுத்தினாலும் அதையும் எளிதாக பார்த்து விடலாம்.

Password Folder என்னும் மென்பொருள் உங்கள் Personal போல்டர்களுக்கு Password வைத்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் Personal போல்டர்களை பிறரிடமிருந்து பாதுகாக்கலாம். இந்த மென்பொருள் எப்படி செயல் படுகிறது என பார்ப்போம்.

மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழே உள்ள விண்டோ தோன்றும்,இதன் மூலம் உங்கள் Password ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.பின்னர் தோன்றும் விண்டோவில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய போல்டர்களையும் , கோப்புகளையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள Lock & Exit என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த போல்டர்களும் , கோப்புகளும் நீங்கள் கொடுத்த Password மூலம் பாதுகாக்கபடும்.

போல்டர்களை மறைத்தல்(Hide),படிக்க முடியாமல் செய்தல்(Deny Read),எந்த மாற்றங்கள் செய்ய முடியாமல் தடுத்தல்(Deny Write) போன்ற மூன்று வழிகள் மூலம் உங்கள் போல்டர்களை பாதுகாக்கலாம்.நீங்கள் பாதுகாக்கும் போல்டரை யாராவது பார்க்க நினைத்தால் கீழே உள்ளது போல் பிழைசெய்தி வரும்.நீங்கள் மீண்டும் பாதுகாத்த போல்டரை பார்க்க நினைத்தால் மென்பொருளை திறந்து போல்டரை தேர்வு செய்து Unlock என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி Password Folder