Monday, December 13, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 12

1862: அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது  யாஸு நதியில் யூ.எஸ்.எஸ். கெய்ரோ எனும் கப்பல் பொறிவெடியில் சிக்கி மூழ்கியது. இலத்திரனியல் பொறிவெடி மூலம் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது ஆயுதக் கப்பல் இது.
1901: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடாக முதலாவது வானொலி சமிக்ஞையை மார்கோணி பெற்றார்.

1911: இந்தியத் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1911: பிரிட்டனின் 5 ஆம் ஜோர்ஜ் மனர், இந்தியாவின் மன்னராகவும் பதவியேற்றார்.

1940: பிரிட்டனின் ஷீபில்ட் நகரில்  ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சினால் பிரிட்டனில் 70 பேர் பலி.
1942: கனடாவின் நியூபவுண்லாந்தில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட  தீயினால் சுமார் 100 பேர் பலி.
1963: பிரிட்டனிடமிருந்து கென்யா சுதந்திரம் பெற்றது.
1979: கொலம்பியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 259 பேர் பலி.
1985: கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 256 பேர் பலி.

2000: ஜோர்ஜ் புஷ், அல் கோர் ஆகியோருக்கிடையிலான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சர்ச்சை தொடர்பாக அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கூகுள் தரும் புதிய வசதி - Google Scribe

வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத்திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.

ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின் பெயர் http://scribe.googlelabs. com.

இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்.

அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது.
இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவுகளுக்கும் சொற்கள் கிடைக்கின்றன.

அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும்.

கணணி செய்தி சூரிய சக்தியில் வயர்களற்ற கணினி 'கீபோர்ட்' : லொஜிடெக் அறிமுகம்

லொஜிடெக் (Logitech) நிறுவனம் அண்மையில் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற கீபோர்ட்டை (K750) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற (Wireless) கீபோர்ட்கள், பற்றரிகளின் மூலமே இயங்கி வந்தது. ஆனால் லொஜிடெக்கின் புதிய கீபோர்ட்கள் சூரிய ஒளியின் மூலம் இயங்குகிறது.

ஒரு தடவை முற்றாக 'சார்ஜ்' செய்தால், சுமார் 3 மாத காலம் வரை தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த முடியுமென லொஜிடெக் உறுதியளிக்கின்றது.
இது 80 அமெரிக்க டொலர்களில் விற்பனையாகிறது.

கணினியை பராமரிக்க எளிய வழிமுறைகள்

இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.

நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனற்றதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.

ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.
சில இணையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது.

எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபிடித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வழிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும்.
நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.
கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.
கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒப்றேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.

எப்படிச் செய்வது?
உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.
அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம்.

Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.
Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும்.

சில ஒப்றேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்கும். அதற்கும் Yes பொத்தானை அழுத்தவும்.

இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செய்வதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள டிஜிட்டல் மின்நூலகம்

வரலாற்று தகவல்களைப்பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்வதற்கு வசதியாக உலக டிஜிட்டல் மின் நூலகம் உள்ளது.
காலத்தால் என்றும் அழியாத பொக்‌ஷங்களான வரலாற்று தகவல்களை பாதுகாப்பான முறையில் சேமித்து நமக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில்
இலட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை ஒன்லைன் மூலம் படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக உலக டிஜிட்டல் மின் நூலகம் உள்ளது.

அதற்கான இணையதள முகவரி : http://www.wdl.org
இந்ததளத்திற்கு செல்வதன் மூலம்,  நாம் எந்த நாட்டின் வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வரும் திரையில் அந்த நாட்டைப்பற்றிய அனைத்து வரலாற்று புத்தகங்களும் வரும் இதில் நமக்கு பிடித்த புத்தகங்களை எளிதாக தேடிப்படிக்கலாம்.

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் 'modern messaging system'

பல நாள் கேள்விக்கு விடை கிடைத்திவிட்டது. ஃபேஸ்புக் இணைய தளம் புதிதாக அறிவித்திருக்கும் சேவையினை “modern messaging system” என அழைக்கிறது. இது மின்னஞ்ஞல் அல்ல. மின்னஞ்ஞல் எனும் வரைவிலக்கணத்துக்கு அப்பால் பட்டது. மின்னஞ்ஞல் சேவையும் இதில் உள்ளடங்கும்.

ஃபேஸ்புக் இணைய தளம் ஒரு புதிய மின்னஞ்ஞல் சேவையினை அறிமுகப்படுத்தப் போகிறது என உலகமே எதிர்பார்த்திருந்த வேளையில் , அது மின்னஞ்ஞல் அல்ல அதைவிட ஒரு படி மேலான தொடர்பாடல் முறையொன்று என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

இந்த “modern messaging system” மூன்று வகையான எண்ணக்கருக்களை கொண்டுள்ளது.
01. seamless messaging
02. cross-platform conversation history
03. the social inbox.

நீங்கள் விரும்பும் சமயத்தில் உங்களுக்கு @facebook.com எனும் மின்னஞ்ஞல் முகவரி உங்களுக்கு தரப்படும். இங்கு சம்பிரதாயமான மின்னஞ்ஞல் முறை காணப்படாது. யாருடன் வேண்டுமானாலும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த மெசேஜின் முறைமை அமைய இருக்கிறது. மேலும் எமக்கு வரும் தகவல் அனுப்பப்படும் நபரினை பொறுத்து ஒரு சிறப்பான வகைப்படுத்தலும் இங்கு இடம்பெற இருக்கிறது.
சுருக்கமா சொன்னா, ஒரு கூலான தொடர்பாடல் முறையாக இந்தப் புதிய Messaging system அமையவிருக்கின்றது. இந்தப் புதிய சேவையானது இன்னும் சில மாதங்களில் பாவனைக்கு வர காத்திருக்கிறது. பரீட்சாத்தமாக கேட்பவர்க்கு மட்டுமே ஃபேஸ்புக் இந்த புதிய சேவையை தர இருக்கிறது. அதாவது இன்விடேசன் முறைமை.

வெகுவிரைவில் டுவிட்டரின் மற்றுமொரு பரிமாணம்

டுவிட்டர் சமூக வலைப்பின்னல் தளமானது வெகு விரைவில் செய்திச் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த இணையத்தளத்தில் பல லட்சக்கணக்கான குறுந்தகவல்கள் தினமும் பரிமாறப்படுவதால் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் சிரமமிருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
டுவிட்டர் இணையத்தள ஸ்தாபகர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“டுவிட்டர் செய்திச் சேவையினூடாக உலகில் எந்தப் பாகத்திலும் நடக்கும் செய்திகளையும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் இணையத்தளமானது செய்திச் சேவை தொடர்பாகவும் தனது பாவனையாளர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் தற்போது பரீட்சார்த்தமாக ஆராய்ந்துவருகிறது.
சுமார் 190 மில்லியன் எண்ணிக்கையிலான இணையப்பாவனையாளர்கள் டுவிட்டர் கணக்கினை தன்னகத்தே கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி செக்கன் ஒன்றுக்கு சராசரியாக 750 டுவிட்டர் தகவல்கள் தரவேற்றப்படுகின்றன. இவ்வருட ஜூன் மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாளொன்றில் 65 மில்லியன் டுவிட்டர் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன.
இதனால் முன்னிலையிலுள்ள சமூக வலைப்பின்னல் இணையத்தளங்களில் பேசப்படும் ஒன்றாக டுவிட்டர் மாறிவருகிறது.
இந்நிலையில் டுவிட்டர் இணையத்தளமானது செய்திச்சேவையை ஆரம்பிக்குமானால் ஏனைய தளங்களைவிட மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பிந்திக் கிடைத்த தகவலின்படி, டுவிட்டர் இணையத்தளத்தின் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைப்பின்னல் இணையத்தளத்துக்கு செய்திச்சேவை செய்யவேண்டிய தேவை தற்போது இல்லை என்றும் அது சரியான தீர்வாக அமையாதென்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரினதும் மாறுபட்ட கருத்துக்கள், தலைமையின் போட்டித் தன்மையை வெளிப்படுத்துவதாக இணையப் பாவனையாளர்கள் கூறியுள்ளதுடன் இந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனோமதேய திருடர்களிடமிருந்து தப்பித்து கொள்ள

இணையம்,கணணி என்பவற்றின் உச்ச பயன்களை அனுபவிக்கும் நமது தனிப்பட்ட ரகசிய தகவல்களை கொள்ளையிடும் நோக்கில் கொள்ளையர்கள் நமது கணணிகளை குறிவைத்து Vvirus,Trojan,Worms,Spyware,Adware போன்ற எண்ணிலடங்கா ஆபத்தான மென் பொருள்களை ஏவி விடுகின்றனர்.
இவை நமது கணனியில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உட்கார்ந்து கொண்டு தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை கன கச்சிதமாக செய்ய வல்லன. ஆனால் இவற்றை அழிக்கவல்ல குறிப்பிட்ட விலைக்கு கிடைக்கும் Kaspersky ,Norton போன்றவற்றை நாம் இன்ஸ்டால் பண்ணி கொண்டால் நிம்மதியாக இருக்கலாம்.

சிலவேளைகளில் பணம் கொடுத்து வாங்கி எல்லாம் போட முடியாது பண்ணுறதை பண்ணிட்டு போங்கையா என இருப்பவர்களுக்கு என நல்ல நோக்கில் இலவசமாக அண்டி வைரஸ்கள் வருகின்றன. கவலை என்ன வென்றால் இப்படியானவர்களை குறிவைத்து இலவச அண்டி வைரஸ் எனும் பெயரில் வைரஸ் களை தான் அனுப்புராங்கையா. உதாரணமாக சில இணையதளங்களில் இருக்கும் "இலவச ஸ்கானிங்" என இருக்கும். எல்லாமே வைரஸ் தான்.
நம்பகத் தன்மையுள்ள அதிசக்தி வாய்ந்த பிரபல பத்து இலவச அண்டி வைரஸ் மென்பொருட்களை பார்ப்போம். செயற்திறனில் கட்டணத்துக்கு கிடைக்கும் அண்டி வைரஸ்களுக்கு நிகராக ஒப்பிட முடியாவிட்டாலும் சிறந்த முறையில் பாதுகாப்பினை வழங்க வல்லன.

இலவசமாக தரவிறக்கக்கூடிய AVG ஆனது Virus ,Spyware என்பவற்றில் இருந்து windows இனை பாதுகாப்பதோடு இதன் AVG Social Networking Protection சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு வழங்கும்.

இது கணனிக்கு இருக்கவேண்டிய ஆககுறைந்தத பாதுகாப்பினை வழங்கு வதோடு Virus ,Spy ware என்பவற்றுக்கெதிராக சிறந்த முறையில் செயற்பட வல்லது. 100 % இலவச திறன் கூடியதுமாகும்.

இது உங்கள் கணணியை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல viruses, worms, Trojans and costly dialers என்பவற்றில் இருந்தது பாதுகாக்க வல்ல ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

Malware இக்கு எதிரான இது எவ்வளவு தான் பெரிய malware ,spyware என்றாலும் அடியோடு அழித்து விடும். விரைவானதும் திறன் மிக்கதுமான இது கணனிக்கு நல்ல காவலன்.

இந்த கணணி பாதுகாப்பு மென்பொருள் real-time protection, advanced Genocode detection technology, rootkit protection, automatic updates, என பல சிறப்பியல்புகளை கொண்டுள்ள பயன் மிக்க ஒன்று.

விண்டோஸ் பக் இல் உள்ள வைரஸ் போன்றவற்றை துப்பரவு செய்து வேகம் உள்ள கணணியாக பேணுவதுடன் உங்கள் தனிபட்ட கோப்பு திருட்டுக்களிருந்தும் பாதுகாக்கிறது.

இது உங்கள் கணனியில் உள்ள spyware இனை தேடி அழிக்க வல்ல ஒரு பாதுகாப்பு மென்பொருள்.இலவசமான Spybot – Search & Destroy உம ஒரளவு நம்பகத்தன்மை உள்ளது.

இது நீங்கள் இணையத்தில் செய்யும் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக செய்ய உதவுகிறது. குறிப்பாக நீங்கள் விரும்பினால் அநோமதயராக வலம வரவும் உதவுகிறது.

இது சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து ரகசிய தகவல்களின் பாதுகாப்பு , அன்னியர்கள் ரகசியமாக கணனியில் ஊடுருவுதல் முறியடித்தல் என்பவற்றை உறுதி செய்கிறது.

இது கணணியை பாதுகாப்பதோடு இணையத்தின் நல்ல பக்கத்தினை மட்டுமே நாம் பார்க்க உதவுகிறது.அதாவது கசப்பான அனுபவங்களை தரவல்லவற்றை அழித்து விடும்.

பெண் துணையின்றி ஆண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்
குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றனர்.ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண் துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது “ஸ்டெம்செல்” மூலம் பல அரியவகை அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. “ஸ்டெம்செல்” சிகிச்சையின் மூலம் கொடிய நோய்கள் கூட குணப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அதிநவீன “ஸ்டெம் செல்” தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகள் மூலம் குட்டி எலிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். டெக்சாஸ் இனப்பெருக்க விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
 அதன் அடிப்படையில் மனிதர்களிலும் பெண் துணையின்றி ஆண்களே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போன்று ஆண்கள் இல்லாமல் பெண்களே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இது ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு வசதியாக அமையும்.

Google Earth 6.. துல்லியமான 3D வசதியுடன்கூகிள் நிறுவனத்தின் அற்புதத்தில் ஒன்றான Google Earth ன் புதிய பதிப்பான Google Earth 6 இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய பதிப்பின் மூலம் உலகத்தை இன்னும் உண்மையாக காணக்கூடியதாக உள்ளது.
இந்த புதிய பதிப்பில் முப்பரிமாண மரங்கள், உடன் இணைக்கப்பட்ட ஸ்ட்ரீட் விவ் மற்றும் மெருகூட்டப்பட்ட வரலாற்றுரீதியனா படங்கள் என பல்வேறு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக கூகிள் கூறுகிறது.


முப்பரிமாண மரங்கள்
இந்த புதிய கூகிள் ஏர்த் பதிப்பின் மூலம் மிகத்துல்லியமான முப்பரிமாண படங்களை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பூமியில் காணப்படும் மரங்கள் கூட மூன்று பரிமாணத்தில் காட்சியளிக்கிறது. இதன் மூலம் நிஜமான சுற்றுலா அனுபவத்தை கூகிள் ஏர்த் மூலம் பெறலாம் என கூகிள் உறுதியளிக்கிறது.

உடன் இணைக்கப்பட்ட Street view 
கூகிள் வழங்கிக் கொண்டிருக்கும் Street view சேவையானது இப்போது கூகிள் ஏர்த்துடன் ஒன்றினைக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இனி கூகிள் ஏர்த்தில் இருந்தவாறே பிரபல நகரங்களின் தெருக்களுக்கு சென்றுவரலாம்.

வரலாற்று புகைப்படங்கள்
கூகிள் ஏர்த்தின் முன்னைய பதிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வரலாற்று ரீதியான படங்களின் தொகுப்பினை இன்னும் இலகுவாக இந்த புதிய பதிப்பில் காணக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு வரலாற்று புகழ்மிக்க இடத்தினை அடையும் போது அந்த இடம் தொடர்பான வரலாற்று ரீதிய படங்களினை தோற்றுவிக்கும் வசதியே இது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் V அமெரிக்க ஜனாதிபதி: சுவாரசியமான வீடியோ கேம் அறிமுகம்! எங்கே உங்கள் ஆட்டத்தை ஆரம்பியுங்கள்...

ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத் தளத்திடம் சிக்கி உள்ளன.


ஒட்டுமொத்தமாக 300,000 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் வசம் உள்ளன. இவற்றை விக்கிலீக்ஸ் வெளியிட்ட வண்ணம் உள்ளது. இவை உலகம் பூராவும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில் Play Wikileaks என்கிற பெயரில் மிகவும் சுவாரஷியமான வீடியோ கேம் ஒன்று வெளிவந்து உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாவின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் உள்ள மடிக் கணனியில் இருந்து விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் Julian Assange 300,000 ஆவணங்களை திருட வேண்டும்-
ஆனால் பராக் ஒமாவின் கண்களின் மண்ணை தூவினால்தான் இது சாத்தியப்படும்-பராக் ஒபாமா அடிக்கடி நித்திரை கலைந்து எழுவார்- அவர் கண்ணில் Julian Assange பட்டால் அவ்வளவுதான - பாலியல் குற்றத்தை வெள்ளை மாளிகைக்குள் புரிந்தார் என பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டு விடுவார்.