Friday, January 14, 2011

பாதுகாப்பான Computing வழிகள்

1. திடீர் திடீரென எழுந்து வரும் Pop Up விளம்பரங்களிலிருந்து பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டாம். ஸ்பேம் மெயில்களில் வரும் விளம்பரங்கள் எல்லாம் வேறு எதற்கோ உங்களை மாட்ட வைத்திடும் விளம்பரங்களே.

2. உங்களுடைய இமெயில் முகவரி, இல்ல முகவரி, பேங்க் அக்கவுண்ட் எண், அதன்
இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பெயர், பாஸ்வேர்ட் மட்டுமின்றி, உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களின் மேற்படி தகவல்களையும் வெப்சைட்டில் தரும் முன் பலமுறை யோசிக்கவும். உங்கள் பணம் சார்ந்த தகவல்களை தரவே வேண்டாம்.

3. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க் கிழமையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வெப்சைட்டில் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட மறக்க வேண்டாம்.

4. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்து இயக்காமல் இன்டர்நெட் தளங்களை பிரவுஸ் செய்திட வேண்டவே வேண்டாம். அண்மைக் காலத்திய அப்டேட் வரை பெற்ற பின்னரே,கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும்.

5. பயர்வால் ஒன்றை இன்ஸ்டால் செய்திடாமல் இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்ள வேண்டாம்.

6. மற்றவர்களின் கிரெடிட் கார்ட் எண், பேங்க் அக்கவுண்ட் எண் இவற்றைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். இது வீணான பழியையும் கொண்டு வந்து சேர்க்கும்.

7. இணையத்தில் உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைப் பயன்படுத்துகையில், அந்த தளம் தோன்றுகையில் டாஸ்க் பாரின் சிறிய பேட் லாக் போன்ற படம் தெரிந்தால் மட்டுமே தரவும். அல்லது அதன் முகவரியில் அந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அடையாளத்தைத் தேடவும். பெரும்பாலும் இதன் முகவரிகள் https: என எஸ் (s) என்ற எழுத்தையும் சேர்த்துக் கொண்டு தொடங்கும்.

8.நைஜீரியா அல்லது மற்ற பிரபலமாகாத நாடுகளின் பேங்கர்கள் அல்லது பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உங்களுக்கு வரும் இமெயில்களைப் படிக்காமலேயே நீக்கிவிடுங்கள்.

9.இதனை பார்வேர்ட் செய்திடுங்கள் என்று வரும் மெயில்களை அலட்சியம் செய்துவிடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி கெட்ட பெயர் எடுக்காதீர்கள். எல்லாம் ஏமாற்றுவேலை.

10. உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் முக்கிய நாட்களின் தேதிகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்த வேண்டாம்.

இது என்ன பத்து கட்டளையா? என்று கேட்கிறீர்களா! இன்னமும் சில பாதுகாப்பிற்கான வழிகள் உள்ளன. ஆனால் குறைந்த பட்சம் இதனைப் பின்பற்றவும்.

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக  ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…

* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin)  இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.

 * தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

 * இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்.

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண


கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன.

தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.

இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.

அவற்றை இணையத்தில் தேடி உங்கள் கணினியில் நிறுவ வேண்டி வரும். சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.

இது முற்றிலும் இலவசம். தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த சுட்டிக்கு சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

இனி 'கணினியில் இந்த வீடியோ திறக்க மாட்டேன் என்கிறது' என்ற பிரச்னைக்கு முடிவு காட்டுங்கள். இணைய உலாவிகளில் பயர்பாக்ஸ் எப்படி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக உள்ளதோ அது போல் விண்டோஸ் மீடியா ப்ளேருக்கு மிகச்சிறந்த மாற்று விஎல்சி மீடியா பிளேயர். இது ஒவ்வொருவர் கணினியிலும் காட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்.
விஎல்சி மீடியா பிளேயர் வீடியோ பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் வீடியோக்களை வெட்டுவது, இணைய ஒளிபரப்புகளை பார்க்க, வீடியோ கன்வெர்ட் செய்ய, உங்கள் வீடியோக்களை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப, உங்கள் கணினி ஸ்க்ரீன் காட்சிகளை பதிவு செய்ய என பல விதங்களில் பயன்படுகிறது.

இணையத்தில் ஒரு கணணி வியத்தகு இலவச இயங்குதளம்

ஆச்சரியப்பட கூடியவிதத்தில் இணையத்தில் கணணியை உருவாக்கியுள்ளார்கள் இணைய வல்லுனர்கள். இந்த இணையத்தில் கணணி என்பது (A computer in a web page) நீங்கள் கணணியை ஆரம்பித்து கடவுச்சொல் வழங்கி கணணி திறக்கும் போது கணணித்திரை (Desktop) எமது கண்களுக்கு எவ்வாறு புலப்படுகின்றதோ அவ்வாறு http://g.ho.st என்னும் இணையத்தளத்தில் இணையக்கணணி என்று அழைக்கப்படக்கூடிய விதத்திலே இவ் இணையத்தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையக்கணணி தளத்திலே 15GB கொள்ளளவுடைய G.ho.st Drive என்னும் சேமிப்பகம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 10GB கொள்ளளவுடைய மின்னஞ்சல் ஒன்றும் தருகின்றது. அத்துடன் ஆவணங்களை,தரவுகளை உருவாக்கக்கூடிய விதத்திலே Zoho Editor,Zoho sheets போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன. கணணித்தகவல்களை நிர்வகிக்ககூடிய விதத்திலே கட்டுபாட்டு தளம் (Control panel) போன்ற பல பகுதிகளும் காணப்படுகின்றன. கணணி ஒன்றுக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் பலவும் இதில் காணப்படுகின்றன. அத்துடன் மேலும் பல வசதிகளும் இதில் காணப்படுகின்றன. இது ஒரு முற்று முழுதான இலவசமான தளம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு சிறப்பான அம்சமாகும்.Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?


நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம்.

இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?

நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ் (anti-virus) ஒன்றை நிறுவுங்கள், அதுவும் எந்நாளும் update செய்து கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறன அன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது. ஆயினும் Microsoft நிறுவனத்தின் Microsoft Essentials மிகச்சிறந்த இலவச அன்டி வைரஸ் ஆகும். இது விரைவானதும், சிறிய அளவிலான memory யே தேவைப்படுகிறது, இது licensed வின்டோஸ் இயங்குதளங்களிலேயே பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்திப் பாருங்கள் "சிறந்த ஒரு அன்டி வைரஸ்" நீங்களே உணர்வீர்கள்......

இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.
04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.
05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது திறக்காது.

வைரஸ் தாக்கிய பென் ட்ரைவ் ஒன்றை திறப்பது எப்படி?

எப்பொழுதும் பென் ட்ரைவ்வை double கிலிக் செய்து திறக்காதீர்கள். இங்கு ஒரு இலகுவான வழியொன்றை தருகிறேன்.


01. Run command(Ctrl + R) திறந்து drive வின் எழுத்தை கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
இவ்வாறு open செய்யும் போது வைரஸ் நம் கணணிக்குள் உட்புகாது. இப்போது பென்டரைவரில் உங்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தலாம்.

வரலாற்றில் இன்று: ஜனவரி 13


1797: ஆங்கில, பிரெஞ்சு கடற்படைகளுக்கிடையிலான மோதலில் சுமார் 900 பேர் பலி.

1893: பிரிட்டனின் சுதந்திர தொழிற்கட்சியின் முதற்கூட்டம் நடைபெற்றது.

1915: இத்தாலியில் இடம்பெற்ற பூகம்பத்தால் 29,800 பேர் பலி.

1939: அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயினால் 20,000 சதுரகிலோமீற்றர் பரப்பளவான பற்றைகள் அழிப்பு: 71 பேர் பலி.

1942: ஆபத்துவேளையில் விமானத்திலிருந்து தானாக வெளியேறும் ஆசனம், இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜேர்மன் விமானியொருவரால் பயன்படுத்தப்பட்டது.

1953:யூகோஸ்லாவியாவில் ஜோசப் டிட்டோ ஜனாதிபதியாக தெரிவானார்.

1964: இந்தியாவின் கல்கத்தாவில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையிலான மோதலில் 100 பேர் பலி.

1964: பின்னாளில் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பராக பதவியேற்ற கரோல் வோஜ்டியேலா போலந்தின் கிராகோவ் பிராந்திய பேராயராக நியமிக்கப்பட்டார்.

1964: ரொபர்ட் சி. வீவர், அமெரிக்காவில் அமைச்சராக நியமிக்கப்பட்ட முதலாவது கறுப்பினத்தவரானார்.

1972: கானாவில் ஜனாதிபதி எட்வர்ட் அகுபோ அட்டோவும் பிரதமர் கோபி புஸியாவும் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

1985: எத்தியோப்பியாவில் ரயில் விபத்தொன்றில் 428 பேர் பலி.

1990: டக்ளஸ் வைல்டர் என்பவர் அமெரிக்காவின் மாநிலமொன்றுக்கு (வேர்ஜீனியா) ஆளுநராகத் தெரிவான முதல் கறுப்பினத்தவரானார்.

1991: சுதந்திரம் கோரி போராடிய லிதுவேனியர்கள் மீது சோவியத் யூனியன் இராணுவம் தாக்கியது. 14 பேர் பலி, சுமார் 1000 பேர் காயம்.

2001: எல் சல்வடோரில் நடைபெற்ற பூகம்பத்தில்  நூற்றுக்கும் அதிகமானோர் பலி.

உங்கள் G-Mail Mail களை பாதுகாக்க

இன்று இணையத்தில் ஜிமெயில் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். அந்தஅளவுக்கு ஜிமெயில் பலரால் பயன்படுத்த படுகிறது.பல அவர்களுடைய பல தகவல்களை, கோப்புகளை,புகைப்படங்களை சேமித்து வைக்க ஜிமெயிலையே பயன்படுத்துகின்றனர்.நாம் ஜிமெயிலில் வைத்திருக்கும் மெயில்களை பாதுகாப்பது நமக்கு அவசியம்.

என்றாவது உங்கள் ஜிமெயில் கணக்கை திடீரென யாரவது முடக்கினாலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினாலோ உங்கள் மெயில்கள் அழிந்து போனாலோ அல்லது உங்களால் மெயில்களை பார்க்க முடியாமல் போனாலோ நமக்கு இழப்பு தான்.இதற்கு நாம் உங்கள் ஜிமெயில்களை பேக்அப் எடுத்து கொண்டால் கவலையின்றி இருக்கலாம்.

Gmail Backup என்னும் இலவச மென்பொருள் இதற்கு பெரிதும் உதவுகிறது.உங்கள் மெயில்களை பேக்அப் எடுத்து கொண்டு வேறு ஒரு ஜிமெயில் கணக்குக்கு கூட மாற்றி கொள்ளலாம்.இந்த மென்பொருளை பயன் படுத்துவதற்கு முன்னர் உங்கள் ஜிமெயில் கணக்கில் IMAP என்னும் வசதியை Enable செய்ய வேண்டும்.

இதற்கு Setting -> Forwarding and POP/IMAP செல்க. பின் Enable IMAP என்பதை தேர்வு செய்க

இதன் பிறகு நிறுவிய Gmail Backup மென்பொருளுக்கு சென்று உங்கள் மெயில் முகவரி,பாஸ்வோர்ட் கொடுத்து Directory என்பதை கிளிக் செய்து உங்கள் கணிணியில் பேக்அப் ஆக வேண்டிய இடத்தை தேர்வு செய்க.எந்த தேதியிலிருந்து மெயில்கள் வேண்டுமோ அதையும் குறிப்பிட்டு கொள்ளலாம். கடைசியாக Backup என்ற பட்டனை சொடுக்கினால் உங்கள் மெயில்கள் பதிவிறங்க ஆரம்பித்து விடும்.வேறொரு கணக்கில் இந்த மெயில்களை சேமிக்க விரும்பினால் அந்த கணக்கின் விபரங்களை கொடுத்து, கணிணியில் பேக்அப் இருக்கும் இடத்தை தேர்வு செய்து Restore என்ற பட்டனை சொடுக்கினால் மெயில்கள் அந்த கணக்கில் சேர்ந்து விடும்.

ஜிமெயிலில் இருக்கும் label வசதியையும் சேர்ந்து பேக்அப் எடுக்கும் வசதியை கொண்டுள்ளது.இந்த மென்பொருள் windows மற்றும் linux இரண்டுக்கும் கிடைக்கிறது.

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க