Friday, January 21, 2011

ஈ-மெயில்களில் உள்ள Attachementsகளை மட்டும் தனியே Download செய்ய

தற்போதைய நிலையில் ஈ-மெயில் சேவையினை பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகிறன. அவற்றில் ஜிமெயில், யாகூ, ஹாட்மெயில், போன்ற  நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். நாம் சாதரணமாக ஈ-மெயில் அனுப்பினாலும் கூடவே ஒரு அட்டாச்மெண்ட் பைலை சேர்த்தே அனுப்புவோம். அது நலம் விசாரிக்கும் ஈ-மெயிலாக இருந்தாலும் சரி, முக்கியமான அலுவல்களாக இருந்தாலும் சரி அட்டாச்மெண்ட் என்பது முன்பெல்லாம் முக்கியமான செயலுக்காக மட்டுமே அனுப்பபடும், ஆனால் தற்போதைய நிலையில் எந்த ஒரு ஈ-மெயிலாக இருப்பினும் கூடவே சேர்ந்து ஒரு அட்டாச்மெண்ட் பைல் அனுப்பபடுகிறது.  ஈ-மெயில் அனுப்பும் போது அதனுடன் சேர்ந்து அட்டாச்மெண்ட் பைல்களாக போட்டோ, வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட், போன்ற பல பைல்களும் ஈ-மெயில் மூலமாக பரிமாற்றம் செய்யப்படுகிறன. இவ்வாறு ஈ-மெயிலுடன் சேர்ந்துவரும் அட்டாச்மெண்ட் பைல்களை தனியே பதிவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அதுதான் Mail Attachment Downloader.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.பின் Start > Programs > GearMage > Mail Attachment Downloader என்பதை தேர்வு செய்து Mail Attachment Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் ஈ-மெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு எந்த இடத்தில் அட்டாமெண்ட்கள் பதிவாக வேண்டும் என்பதை குறிப்பிட்டுவிட்டு, Connect and Download என்ற பட்டனை அழுத்தி பதிவிறக்கி கொள்ள முடியும்.



 இந்த மென்பொருளின் சிறப்பம்சமாக உங்களுக்கு வேண்டிய பைல்களை மட்டும் தனியே தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மற்றும் குறிப்பிட்ட தேதிக்குள் உள்ள வேண்டிய அட்டாச்மெண்ட்களை மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியும். இதுபோன்ற பல்வேறு விதமான சிறப்பம்சங்களை இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது. ஈ-மெயில் அட்டாச்மெண்ட்களை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய இது ஒரு அருமையான வாய்ப்பாகும்.

PDF பைல்களை இமேஜ் பைல்களாக மாற்ற

PDF பைல்களை எப்படி நாம் இமேஜ் பைல்களாக மாற்றுவது என்று இங்கு காணபோகிறோம். இந்த வேலையை ஒரு சிறிய மென்பொருள் நமக்கு எளிதாக செய்து முடிக்கிறது.

இந்த மென்பொருள் பதிவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள் ஏனென்றால் நாம் ஏதேனும் PDF பைல்களை நம் பதிவில் சேர்க்க வேண்டுமென்றால் அதனை நேரடியாக சேர்க்க முடியாது அந்த பைல்களுக்கான Embeded உருவாக்க இன்னொரு தளத்தின் உதவியை நாட வேண்டிவரும். அதனால் நம் நேரம் தான் விரயம் ஆகும்.  அது மட்டுமில்லாமல் இன்னொரு தளத்தில் உறப்பினர் ஆக வேண்டும். இந்த குறையை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள்.
 
மென்பொருளின் பயன்கள்: 

  • மிகச்சிறிய அளவே உடைய(1.9mb) முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • மற்ற கன்வெர்ட் மென்பொருட்களை காட்டிலும் 87% வேகமாக இயங்க கூடியது.
  • பேட்ச் மோடில் இயங்க கூடியது.
  • இந்த முறையில் நாம் Jpg, Gif, Bmp, Tif, Png ஆகிய Formatகளில் மாற்றி கொள்ளலாம்.
  • தேவையான பக்கத்தை மட்டும் தேர்வு செய்து மாற்றும் வசதி உள்ளது. 
  • ஒரு போல்டரை அப்படியே கொடுத்து மாற்றும் வசதி.
  • Windows 2000, XP, Vista or 7 ஆகிய இயங்கு தளங்களில் வேலை செய்கிறது.
பயன் படுத்தும் முறை: 
  • உங்களுக்கு வரும் exe பைலை உங்கள் கணினியில் Install செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் ADD என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.
  • கடைசியில் கீழே/மேலே  உள்ள CONVERT என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் PDF பைல் நீங்கள் தேர்வு செய்த இமேஜ் வடிவில் வந்து இருக்கும்.
  • அவ்வளவு தான் நீங்கள் நேரடியாக உங்கள் இமேஜ் பைலை உங்கள் தளத்தில்  தரவேற்றி கொள்ளலாம்.

கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்.


நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.

இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.   இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
 
டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 
 
 
இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.  
Information Overview : 
 
 இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். 
 
இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம். 
 
Memory Optimization 
 
 இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
 
  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும். 
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும். 
  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.   

  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும். 
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள். 
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.

 

Bluetooth பயன்பாடும் பாதுகாப்பும்




வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.
பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.

குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாவகம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காம லேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.

ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.
இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப் படுவதில்லை.
இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.
புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்: அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன
.
மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல, போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும்.
கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன. உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம்.

அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம்.

உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.

உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் “Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.