Saturday, January 8, 2011

கணனித் திரையில் திறந்தவற்றை பிறருக்குத் தெரியாமல் மறைக்க- Free Software

லுவலகத்தில் அலுவலக வேலைதவிர்ந்த நமது  சொந்த வேலைகள் ஏதாவது செய்துகொண்டிருக்கும் போது . அப்போது பார்த்து திடீரென்று  வேறு ஒருவர் வந்தால்  அவருக்கு நாம் என்ன மென்பொருள் உபயோகிக்கின்றோம் என்று தெரியக் கூடாது என்றால், ஒரே ஒரு கீயை அழுத்துவதன் மூலம்  நாம் மறைக்க நினைக்கும் மென்பொருளை ஒரு நொடிப்பொழுதில்  மறைத்து விட  ClickyGone   என்ற மென்பொருள் நமக்கு உதவுகிறது. 

இதன்  மூலம் அந்த மென்பொருளைக் கணினி திரையில் எங்கேயும் தெரியாத வண்ணம் செய்து விட முடியும். டாஸ்க் பார் மற்றும்  ட்ரே என்று எங்கேயும் காணக் கிடைக்காது. மீண்டும் இன்னொரு கீ அழுத்தினால் மீண்டும் வரச் செய்து விடலாம். 

எந்தெந்த மென்பொருளுக்கு எந்தெந்த கீ என்றும் முன்கூட்டியே அக்டிவேட் செய்தும்  வைத்துக் கொள்ளலாம் (இன்னும் நிறைய வசதிகள் உள்ளன).


வெறும் 1.74 MB கொள்ளவு கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே இதை இங்கிருந்து தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள்.

வரலாற்றில் இன்று: ஜனவரி 08

1297: மொனாக்கோ சுதந்திரம்பெற்றது.

1811: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் சார்ள்ஸ் டெஸ்லான்ட்ஸ் என்பவர் தலைமையில் கறுப்பின அடிமைகள் மேற்கொண்ட கலகம் முறியடிக்கப்பட்டது.

1835: அமெரிக்காவின் தேசிய கடன் தொகை முதல் தடவையாக பூச்சியம் ஆகியது.

1912: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1973: நெதர்லாந்தில் ரயில் விபத்தில் 93 பேர் பலி.

1973: அமெரிக்க வாட்டர்கேட் விவகாரத்தில் வாட்டர்கேட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்திற்குள் சட்ட விரோதமாக புகுந்த 7 நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பமாகின.

1978: வெளிநாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமாக, வங்காளத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ விடுதலை செய்தார்.

1989: பிரிட்டனில் வீதியொன்றில் விமானம் விழுந்ததால் 47 பேர் பலி.

1996: ஸயர் நாட்டில் விமானமொன்று கோளாறுக்குள்ளாகி சந்தையொன்றில் விழுந்ததால் 350 பேர் பலி.
 

கலர் புகைப்படங்களை கருப்புவெள்ளை படங்களாக மாற்ற அருமையான மென்பொருள்

நமக்கு பிடித்த பலவற்றை புகைப்படங்களாக சேமித்து வைத்திருப்போம். சில படங்களை பார்க்கும் போது கலர் புகைப்படத்தை விட கருப்பு வெள்ளை படமாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் எனத்தோன்றும். அவ்வாறு நாம் கலர் புகைப்படத்தை கருப்புவெள்ளை படமாக மாற்ற நினைத்தாலும் அந்த புகைப்படத்தினை போட்டோசாப் போன்ற எதாவது ஒரு போட்டோஎடிட்டிங்  மென்பொருளின் உதவியுடன் மட்டுமே செய்ய முடியும். அவ்வாறு இல்லாமல் நாம் நினைத்த புகைப்படத்தை ஒரு நொடியில் கருப்புவெள்ளை புகைப்படமாக மாற்றினால் எவ்வளவு அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட மென்பொருள் தான் Black And White Photo Maker.

மென்பொருளை தரவிறக்க:-சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் இந்த மென்பொருளானது ப்ரீவேர் மென்பொருளாகும். இந்த மென்பொருளை ஒப்பன் செய்து எந்த புகைப்படத்தை கருப்புவெள்ளை புகைப்படமாக மாற்ற நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்யவும் பின் அளவு (Size) யை தேர்வு செய்யவும். பின் உங்களுக்கு எந்த பார்மெட்டில் புகைப்படம் வேண்டுமோ அதை தேர்வு செய்யவும், நீங்கள் குறிப்பிடும் இடத்தில் புகைப்படமானது சேமிக்கப்படும்.

சிறப்புகள்:
  • எந்த அளவில் வேண்டுமானலும் புகைப்படத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
  • Clipboard-களையும் இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.
  • இந்த மென்பொருளானது JPEG, BMP, GIF, PNG, TGA, ICO மற்றும் பல இமேஜ் பைல் பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.
  • வேண்டிய அளவில் புகைப்படத்தை தேர்வு செய்து கருப்புவெள்ளை புகைப்படமாக மாற்றிக்கொள்ள முடியும்.

வரலாற்றில் இன்று: ஜனவரி 07

1610: கலிலியோ கலிலி ஜூபிட்டர் கிரகத்தின் நான்கு பெரிய சந்திரன்களை முதல் தடவையாக அவதானித்தார்.

1782: அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கியான அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
1785: பிரான்ஸை சேர்ந்த ஜீன் பியரி பிளங்கர்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் ஜெவ்ரி ஆகியோர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸுக்கு பலூனில் பறந்தனர்.

1797: இத்தாலியின் நவீன தேசிய கொடி பாவனைக்கு வந்தது.
1919: சேர்பியாவுடன் மொன்டேநீக்ரோ இணைப்பதற்கு எதிராக மொன்டேநீக்ரோ கெரில்லாக்கள் கிளர்ச்சி செய்தனர். இப்போராட்டம் தோல்வியில் முடிவுற்றது.

1927: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடான முதலாவது தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1950: அமெரிக்காவின் டெவன்போர்ட் நகர வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலி.
1952: அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அமெரிக்காவிடம் ஐதரசன் குண்டுகள் இருப்பதாக அறிவித்தார்.

1954: நியூயோர்க் நகரில் ஐ.பி.எம். தலைமையகத்தில் கணினி மூலம் மொழிபெயர்ப்பு செய்துகாண்பிக்கப்பட்டது.

1959: கியூபாவில் பிடெல்காஸ்ட்ரோவின் அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரித்தது.
1972: ஸ்பெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 104 பேர் பலி.

1980: 3 வருடங்கள் அதிகாரத்தை இழந்திருந்த இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியது.
 1990: இத்தாலியின் பைஸா சாய்ந்த கோபுரம் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

1999: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மீதான நாடாளுமன்ற குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.