Friday, January 28, 2011

இலங்கையில் புதிதாக நாணயத்தாள்கள்: முதல்தடவையாக ஐயாயிரம் ரூபா பெறுமதியிலும் பணநோட்டு

எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புழக்கத்தில் இருக்கும் நாணயத்தாள்களுடன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளொன்றையும் அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 
இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம் தற்போதைக்கு புழக்கத்தில்  இருக்கும் 20,50,100,500, 1000,2000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுக்கும் புதிதாக நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அதனுடன் இணைந்ததாக இலங்கையில் இதுவரை புழக்கத்தில் இல்லாத ஐயாயிரம் பெறுமதியான ரூபா நோட்டும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ரூபா நோட்டுகள் எதிர்வரும் சுதந்திர தினத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

இலங்கையின் அபிவிருத்தி, சுபீட்சம், கலைகள், பறவைகள் என்பன புதிய ரூபா நோட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

வரலாற்றில் இன்று: ஜனவரி 28

1547: 8 ஆம் ஹென்றி மன்னன் இறந்ததையடுத்து, அவரின் 9 வயது மகன் 6 ஆம் எட்வர்ட் மன்னனாக முடிசூடப்பட்டான். இங்கிலாந்தின் முதல் புரட்டஸ்தாந்து மன்னன் இவன்.

1624: கரிபியன் (மேற்கிந்திய) தீவுகளில் முதலாவது பிரித்தானிய குடியேற்றம் சென் கிட்ஸ் தீவில் ஸ்தாபிக்கப்பட்டது.

1820: ரஷ்ய ஆய்வாளர்கள் பாபியன் கொட்லியெப் வோன் பெலிங்சௌசென் மற்றும் மிகைல் பெட்ரொவிச் லாஸாரேவ் ஆகியோர் அந்தார்ட்டிக் கண்டத்தை கண்டுபிடித்தனர்.

1909: குவான்டனாமோ குடா கடற்படைத் தளம் தவிர, கியூபாவின் ஏனைய பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1915: அமெரிக்க கரையோர காவற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1932: சீனாவின் ஷாங்காய் நகரை ஜப்பான் தாக்கியது.

1933: பாகிஸ்தான் எனும் பெயரை சௌத்ரி ரெஹ்மட் அலி இயற்றினார்.

1986: அமெரிக்காவின் சலெஞ்சர் விண்கலம் ஏவப்பட்டபின் வெடித்ததால் 7 விண்வெளி வீரர்கள் பலியாகினர்.

2002: கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் பலி.

2020: பங்களாதேஷின் முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர்.