Wednesday, January 26, 2011

ஜி-மெயில் வழங்கும் புத்தம் புதிய வசதி

ஜி-மெயில் குழுவினர் புத்தம் புதிய வசதியொன்றினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இது தற்போதைக்கு ஜி-மெயிலின் பரீசோதனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எங்களால் வாசிக்காமல் விடப்பட்ட மின்னஞ்ஞல்களின் எண்ணிக்கையை ப்ரவுசரில்(Browser) சிறிய படமாக தோற்றுவிப்பதே இந்த புதிய வசதியாகும்.
இதனை உங்கள் ஜி-மெயில் கணக்கில் செயல்படுத்த முதல் Settings ஐ க்ளிக் செய்து பின்னர் Labs இனை க்ளிக் செய்து Unread message icon என்பதை enable செய்தால் போதும். இனி நீங்கள் எத்தனை Tab திறந்து வைத்து வேலை செய்தாலும் நீங்கள் வாசிக்காமல் இருக்கக்கூடிய மின்னஞ்ஞல்களின் எண்ணிக்கை ஜி-மெயில் ஐகனுக்கு(Icon) பக்கத்தில் தோற்றமளிக்கும்.

வானத்தில் புதிய சூரியன் தோன்றும்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!


தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது. பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை.

இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள்  சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை.

இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும்.


இது மற்றொரு சூரியன் புதிதாக தோன்றியதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படி இல்லாவிட்டால் அடுத்த 10 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் உண்டாகும். இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் "பிராட்கார்டர்" தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இன்று: ஜனவரி 26


1500: வின்சென்ட் பின்ஸோன் என்பவர் பிரேஸிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியரானார்.
 
1531: போர்த்துகலின் லிஸ்பன் நகரில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பலி.
 
1788: பிரித்தானிய தளபதி தலைமையில் அவுஸ்திரேலியாவுக்கு  முதல் தொகுதி  கைதிகளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் தற்போதைய சிட்னி துறைமுகப் பகுதியை அடைந்தன. இத்தினம் அவுஸ்திரேலிய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
 
1930: இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 26 ஆம் திகதியை பூரண சுவராஜ் தினமாக பிரகடனப்படுத்தியது.  20 வருடங்களின்பின் இந்தியா குடியரசாகியது.
 
1934: ஜேர்மன் - போலந்து மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
 
1950: இந்தியா குடியரசாகியது. ராஜேந்திர பிரசாத் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
1958: ஜப்பானிய கப்பலொன்று கவிழ்ந்தால் 167 பேர் பலி.
 
1965: இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப்பட்டது.
 
1980: இஸ்ரேல் - எகிப்து மோதல் தவிர்ப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.
 
1992:அமெரிக்க நகரங்களை ரஷ்யாவின் அணுவாயுதங்கள் இலக்குவைப்பதை ரஷ்யா நிறுத்தும் என அந்நாட்டு ஜனாதிபதி பொரிஸ் யெல்டசின் அறிவித்தார்.
 
1998: வெள்ளை மாளிகை பணிப்பெண் மோனிகா லுவின்ஸ்கியுடனான தகாத உறவுகள் வைத்திருந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மறுத்தார். 8 மாதங்களின்பின் அவர் இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
 
2001: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி.
 
2004: ஆப்கானிஸ்தானின் புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் கையெழுத்திட்டார்.