Wednesday, December 15, 2010

வார்டு அறையில் சுற்றுகிறது வேலூர் ஆஸ்பத்திரியில் நுழையும் மர்ம உருவம்; செல்போன் படத்தால் பேய் பீதி

வேலூரில் ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய் நுழைவது போன்ற படக்காடசி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம்
நுழைவது போன்ற படக்காடசி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது.

வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பினார்.

சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரி கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து அறையை விட்டு வெளியேறுகிறது.இந்த படக்காட்சி பார்ப்பவர்களை பீதியில் உறைய வைக்கிறது. மேலும் இந்த காடசியை பார்க்கும் போது சிலரின் உரையாடல்களும் கேட்கிறது. கம்ப்யூட்டரில் கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட சந்தேகம் ஏற்படுகிறது.

பேய் வருவதை படம் எடுத்து அதனை தெளிவு படுத்தும் முயற்சியில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் அதனால் தான் அவர்களின் குரல் கேட்கிறது. பேய் வருவது உண்மை தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஏதாவது ஆஸ்பத்திரி குறித்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக விரோதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் பரவி வரும் ஆஸ்பத்திரி பேய் இருக்கா இல்லையா?

அல்லது பேய் வருவதற்கான அறிகுறியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. திருவண்ணா மலையில் சித்தர் பரந்ததாக கடந்த ஆண்டு வீடியோ காட்சி பரவியது. அதுபோல வேலூரில் பேய் படக்காட்சி பார்ப்பவர்களை கலங்கடித்து வருகிறது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 14

1287: நெதர்லாந்தில் கடல்நீர் பாதுகாப்பு மதிலொன்று உடைந்ததால் சுமார் 50000 பேர் பலி.

1812: ரஷ்யா மீதான பிரெஞ்சு படையெடுப்பு முடிவடைந்தது.
1903: ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் விமானம் மூலம் முதல் தடவையாக சோதனை பறப்பை மேற்கொண்டனர்.

1955: இலங்கை உட்பட 16 நாடுகள் ஐ.நாவில் இணைந்தன.
1972: சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற கடைசி விண்கலமான அப்பலோ 17 பூமிக்குத் திரும்பியது.
1995: பொஸ்னியா, சேர்பியா, குரொஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பாரிஸ் நகரில் சமாதான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.
 

இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்

நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.

இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.
இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.
என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம்,

இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.

இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.

கூகுளின் புதிய கூகுள் கேம்ப்

ஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும்.
கூகுள் மேப்ஸை உலகின் எந்த நாட்டிலிருந்தும் பெறலாம். எந்த நாட்டிற்கும், நகரத்திற்கும், தெருவிற்கும் வழி காட்டும் வகையில் மேப்களும், வழி காட்டுதல்களும் நமக்கு கூகுள் மேப்ஸ் தருகிறது. இதற்குத் தேவை எல்லாம் சற்று வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.
இணைய இணைப்பு இல்லாதபோது கூகுள் மேப்ஸ் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது?

இந்த இடத்தில் தான் நமக்கு ஜிமேப் கேட்சர் (Gmap Catcher) என்னும் அப்ளிகேஷன் நமக்கு உதவுகிறது. இதனை http://code.google.com /p/gmapcatcher என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திலிருந்து டவுண்ட்லோட் செய்து, பின் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். பின் அதனை இயக்கவும்.
இது இயங்குகையில், நீங்கள் எந்த ஊருக்கான மேப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த ஊரின் பெயரை என்டர் செய்திட வேண்டும்.
பின்னர் ஆன்லைனில் சென்று குறிப்பிட்ட மேப்பைப் பெற, இந்த புரோகிராம் உங்கள் அனுமதி கேட்கும். இதற்கு 'Yes' என்பதில் கிளிக் செய்திட, உடனே அந்த நகரத்திற்கான மேப் ஜிமேப் கேட்சர் விண்டோவில் கிடைக்கும்.

இதன் பின்னர் அதனை டவுண்லோட் செய்திட நாம் கட்டளை கொடுத்தவுடன், அந்த மேப் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்கள் சிஸ்டத்தில் சேவ் செய்யப்படும். மேப்பிற்கான பூகோள ரேகைக் குறியீடுகள் (latitude, longitude) ஏரியா, ஸூம் செட்டிங்ஸ் ஆகிய தகவல்களும், மேப்புடன் பதியப்படும்.

இது டவுண்லோட் செய்யப்பட்டுவிட்டால், இந்த மேப்பினை அடுத்துப் பார்க்க, இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. இல்லாமலேயே ஜிமேப் கேட்சர் உதவியுடன் காணலாம்.
ஜிமேப் கேட்சர் புரோகிராமினை விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலும் இயக்கலாம்.

Facebook இன் புதிய வரவு : குரல்வழி மற்றும் முகம் பார்த்து அரட்டை வசதி அறிமுகம்

அதிரடியாக வளர்ந்து வரும் சமூக வலைப்பின்னல் ஆகிய Facebook நீண்டகாலமாக பரீட்சார்த்த நிலையில் இருந்த குரல்வழி மற்றும் முகம்பார்த்து அரட்டை(Voice and Video chat) பண்ணும் தொழில்நுட்பத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னமும் Beta நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FriendCam Video Chat என்னும் பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருளானது இணைய உலகில் Skype க்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.
இருந்தபோதிலும் இந்த மென்பொருளானது சில அடிப்படை பிரச்சனைகளை இன்னும் நிவர்த்திசெய்யவில்லை. Beta நிலையிலுள்ளமையினால் இது காலப்போக்கில் சரிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இணைப்பு

கூகிளிடமிருந்து புதிய இரண்டு சேவைகள்

கூகிள் மெப்ஸ்(google maps), கூகிள் பஸ்(google buzz), ஜிமைல்(gmail) என்பவற்றின் கலவையாகவே இந்த புதிய சேவை அமைந்துள்ளது.
நமது நண்பர்களின் ஊரையோ அல்லது அவர்களின் வீட்டுக்கு செல்லும் பாதையையோ அல்லது அவர்களின் வீட்டையோ தேடி அலைய வேண்டிய சிரமத்தை கூகிள் மெப்ஸ்(maps) நமக்கு போக்கியது. தற்போது குறித்த ஒரு அமைவிடத்தை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையை கூகிள் இலகுவாக்கித்தந்துள்ளது.

முன்பெல்லாம் ஒரு இடத்தை கூகிள் மெப்ஸ்(maps) மூலம் நமது நண்பர்களுக்கு காட்ட வேண்டுமானால், அந்த மெப் ன் லின்க்கினை(link) எடுத்து மைல்(mail) பண்ணுவோம்.அந்த லின்கினை கிளிக்(click) செய்து அந்த இடத்தை பார்க்கக் கூடியதாக இருந்தது ஆனால் தற்போது எமது inbox ல் வைத்தே பார்க்க கூடியதாக இருக்கும். இதனை செயற்படுத்த gmail setting ற்கு சென்று Labs என்பதை க்ளிக் செய்து Google Maps previews in mail என்பதை enable செய்து save பண்ணிக்கொள்ளவும்.

அடுத்தது google buzz ல் மெப்ஸ் இனை சேர்த்துக்கொள்ளல். நீங்கள் பகிரப்போகும் மெப்ஸ் ன் லின்கினை எடுத்து paste செய்து கொண்டால் போதும். google maps இனி google buzz இலும் தெரியும்.

ஜோர்ஜியாவில் இராட்சத கோழி முட்டை

வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு கோழி இராட்சத முட்டை ஒன்றை இட்டுள்ளது. ஜோர்ஜியாவில் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முர்மான் மொடெபாட்ஸா என்பவர் தம் வீட்டில் வளர்த்து வந்த கோழியே இந்த இராட்சத முட்டையை இட்டுள்ளது.

இதன் நீளம் 82 மிமீ( 3 1/4 அங்குலம்), அகலம் 62மி.மீ. (2 1/2 அங்குலம்), நிறை 170 கிராம்(6 அவுன்ஸ்).
முர்மானின் குடும்பத்தினர் இந்த இராட்ச முட்டையை கின்னஸ் புத்தகத்தில் பதிவதற்காகக் கையளித்துள்ளனர்.

பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை

சென்ற வாரம் பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பலர் ஏமாற்றப்பட்டு, ஒரு விளம்பர சதிக்கு ஆளானார்கள். உலகெங்கும் உள்ள பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.
பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர் ஒருவர் அனுப்புவது போல மெசேஜ் ஒன்று வருகிறது. அதில், இந்த இடத்தில் கிளிக் செய்தால், இதுவரை நீங்கள் பார்க்காத பாலியியல் படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு லிங்க் கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிக்கு ‘distracting beach babes’ என்று பெயர் தரப்பட்டுள்ளது. சிறிய அளவில், அரைகுறை ஆடையுடன், ஒரு படம் காட்டப்படுகிறது. இதனால் கவனம் திருப்பப்பட்டவர்கள், இந்த படத்தில் கிளிக் செய்கையில், படம் இயக்கப்படாமல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு, இந்த படம் இயக்குவதற்கான சாப்ட்வேர் உங்களிடம் இல்லை என்றும், அதற்கான சாப்ட்வேர் பெற இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. பின்னர் வருமானம் கிடைக்கும் விளம்பர அட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பதியப்படுகிறது. அத்துடன் மற்ற பேஸ்புக் நண்பர்களுக்கு இதே முறையில் செய்தி அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் தளம், தன் தளத்தின் பாதுகாப்பு வழிகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இது போல ஏதேனும் பொய் விளம்பரங்கள் கிடைக்கையில், தகுந்த எச்சரிக்கை செய்திகளை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்த அப்ளிகேஷனுக்கான லிங்க்கில் கிளிக் செய்தவர்கள், தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

பேஸ்புக் தளத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகையில் அது குறித்து ஆய்வு செய்து தகவல்களைத் தரும் சோபோஸ் குரூப் (Sophos)  என்ற முகவரியில், தள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும், தகவல்களையும் தந்துள்ளது.

வருகிறது ஐ போன் 4

அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனமே ஐபோனையும் அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும். மேல் நாடுகளில், வெளியான பின், இந்தியாவிலும் விற்பனைக்கு இது செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

1.வடிவம்:
புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது.
போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம்.

2. மைக்ரோசிம்:
இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம்.

3.டிஸ்பிளே:
ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை‘Retina Display’ என அழைக்கின்றனர்.
இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

4. கேமரா:
இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.

5.சிப்:
ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது.

6. கூடுதல் உதிரி வசதிகள்:
பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது.
இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம்.
தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது.
இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர்.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 13

1937: சீனாவின் நான்கிங் நகரைக் கைப்பற்றிய ஜப்பானிய படையினரின் பல வாரகால வெறியாட்டம் ஆரம்பமாகியது. ஜப்பானிய படையினரால் 20000 பேர் கொல்லப்பட்டதுடன் 80,000 பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.
1959: பேராயர் மாகாரியோஸ் சைப்ரஸின் முதல் ஜனாதிபதியானார்.

1988: பலஸ்தீனத் தலைவர் யஸீர் அரபாத், அமெரிக்காவுக்குச் செல்ல விஸா வழங்கப்படாததால் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. பொதுச்சபையில்  உரையாற்றினார்.

2001: இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதலாளிகள் உட்பட 15 பேர் பலி.

2003: ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் திக்ரித் நகரில் வைத்து அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட் 9 கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?
1. Boot Sector Viruses:
அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.

2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:
இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.

3. Stealthy Virus:
இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.

4. MultiPartite:
இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.

5. Polymorphic:
பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.

6. Macro
மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.

எலிகளை விழுங்கும் தாவரம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.இந்த செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செடி, கொடிகள் அடங்கிய தாவரங்கள் சுத்தமான சைவம்தான். அவைகளுக்கு உணவே, சூரிய ஒளி, தண்ணீர், உரங்கள் தான். அதுவும் வேர்கள், இலைகள் மூலம் உணவை கிரகித்துக் கொள்ளும். ஆனால், அசைவ உணவை சாப்பிடும் தாவரம் பற்றிய தகவல் இப்போது தான் வெளியே வந்துள்ளது.

பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ராபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப் பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போதுதான், இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்த போதுதான், இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர்.

இது குறித்து மெக்பெர்சன் கூறியதாவது:
இந்த கண்டுபிடிப்பு மிக, மிக முக்கியமானது. 21ம் நூற்றாண்டு வரை, இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம், அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சர்.டேவிட் அட்டன்பரோ. எனவே, அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி, இந்த தாவரம், “நேபன்தஸ் அட்டன்பரோகி’ என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு, பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.
இந்த செடியின் இலைகள் தான், அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான என்சைம்களில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர், அந்த என்சைம்களே எலிகளை கொன்று விடுகிறது. எலிகள் மட்டுமல்ல, பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவர இயலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது.  இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில், மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர், சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்.

பேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'

சோசியல் நெட்வொர்க் இணையதளங்களில், ஆரம்பித்த சில நாட்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கிற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் 'கூகுள் மீ' என்ற பெயரில் புதி‌ய இணையதளத்தை துவக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த டிக் நிறுவனர் கெவின் ரோஸ், இந்த செய்தியை நம்ப முடியவில்லை எனினும், நம்பத்தகுந்த இடத்திலிருந்து இந்த தகவல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இணையதளங்களான மாஷபிள் மற்றும் டெக்கிரஞ்ச் உள்ளிட்ட தளங்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

கூகுள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே, விரைவில் 'கூகுள் மீ' இணையதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள், தென் ஆப்ரிக்காவின் டப்ளின் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக டெக்கிரஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.