Wednesday, December 15, 2010

வார்டு அறையில் சுற்றுகிறது வேலூர் ஆஸ்பத்திரியில் நுழையும் மர்ம உருவம்; செல்போன் படத்தால் பேய் பீதி

வேலூரில் ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய் நுழைவது போன்ற படக்காடசி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம்
நுழைவது போன்ற படக்காடசி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது.

வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பினார்.

சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரி கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து அறையை விட்டு வெளியேறுகிறது.



இந்த படக்காட்சி பார்ப்பவர்களை பீதியில் உறைய வைக்கிறது. மேலும் இந்த காடசியை பார்க்கும் போது சிலரின் உரையாடல்களும் கேட்கிறது. கம்ப்யூட்டரில் கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட சந்தேகம் ஏற்படுகிறது.

பேய் வருவதை படம் எடுத்து அதனை தெளிவு படுத்தும் முயற்சியில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் அதனால் தான் அவர்களின் குரல் கேட்கிறது. பேய் வருவது உண்மை தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஏதாவது ஆஸ்பத்திரி குறித்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக விரோதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் பரவி வரும் ஆஸ்பத்திரி பேய் இருக்கா இல்லையா?

அல்லது பேய் வருவதற்கான அறிகுறியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. திருவண்ணா மலையில் சித்தர் பரந்ததாக கடந்த ஆண்டு வீடியோ காட்சி பரவியது. அதுபோல வேலூரில் பேய் படக்காட்சி பார்ப்பவர்களை கலங்கடித்து வருகிறது.

No comments:

Post a Comment