Wednesday, December 29, 2010

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்.. ?

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்.

இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.

இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.

அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.


விண்டோஸ் 7 அற்புத வசதிகள்

விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட் 
 (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில்
  “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால், Start  மெனு சென்று  My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில்,  Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும். இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது. பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI  dots per inch)  அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர்  Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply  மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில் http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ஞீடிணச்ட்ச்டூச்ணூ என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 28

1612: இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி, நெப்டியூன் கிரகத்தை அவதானித்த முதல் வானியலாளரானார்.
1832: ஜோன் சி கல்ஹோன், அமெரிக்க உப ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய முதல் மனிதரானார்.
1836: மெக்ஸிகோவின் சுதந்திரத்தை ஸ்பெய்ன் அங்கீகரித்தது.
1879: ஸ்கொட்லாந்தில் ரயில் பாலமொன்று  உடைந்து 75 பேர் பலி.
1885: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பாம்பாயில் ஸ்தாபிக்கப்பட்டது.
1908: இத்தாலியின் சிசிலி தீவின் மெசின்னா நகரில் 7.2 ரிக்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 75 ஆயிரம் பேர் பலி.
1918: சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொன்ஸ்டன்ஸ் மார்கிவிக் பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் எம்.பியானார்.
2009: பாகிஸ்தானின் கராச்சி நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி.

உங்களது Internet Explorer வேகமாக இயங்கவைப்பது எப்படி?

Hacker எனப்படும் புள்ளுறுவிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மென்பொருள்களில் Internet Explorerம் ஒன்று.

உங்களின் அனைத்து add-on எனப்படும் துணைக் கருவிகளை முழுமையாக நீக்குவதன் மூலம் தங்களின் இணைய உளவியை 40%ற்கும் மேல் விரைவாகச் செயல்பட வைக்கலாம்.
ஏன் என்றால், அனைத்து  add-on  மென்பொருள்களும் உங்களுக்கு தெரியாமலேயே இணைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ளும். இதனால், உங்களுக்கு அனைத்து வளைபக்கங்களும் மெதுவாகப் பதிவிறக்கம் ஆவது போல் தோன்றும்.

Tools -> Manage Addons -> Toolbars



அங்கு சென்று Adobe Flash, Java & AVG/BitDefender or any Anti-Virus toolbars தவிர மற்ற அனைத்து தேவை இல்லாத கருவிப்பெட்டிகளை (Toolbars) செயல்நிலை நிறுத்தம் செய்யவும். (Disable).



1. Yahoo

2. Ask

3. MSN Toolbar

4. Google Toolbar

5. Any toolbar you never used after installation.

பென் டிரைவில் இருக்கின்ற ஆவணங்கள் இல்லை என காட்டினாள் என்ன செய்வது?

நீங்கள் வைரஸ்கள் நிறைய உள்ள பென்ரைவினை சுத்தமாக்கும் போது அல்லது உங்கள் பென் டிரைவினை கணினியில் செலுத்தியதும் சில வேளைகளில் ஒன்றும் இல்லாத ஐகான்களாகவெ காணப்படும். பென் டிரை வடிவிலான ஐகான்கள் காணப்படும் இப்படி இந்த ஐகான்களை திறந்து பார்த்தால் உள்ளெ ஒன்றும் இருக்காது.

பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் ஐகான்களாக மாறிவிடுகின்றன. அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை. தற்போதைக்கு காட்டும் போது ஐகானாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?

1. Start - > Run
செல்லவும்
2.
அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3.
பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
அடித்து எண்டர் தட்டவும்.

attrib -h -r -s /s /d X:\*.*
இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.
இறுதியாக உங்கள் கணிணியை சிறந்த Malware மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்

அழிக்க முடியாத பைல்களை எவ்வாறு நீக்கலாம்?


File களை அதி வேகமாக Copy பண்னுவது எப்படி?

Youtube ல் பிடித்த வீடியோக்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது?

Pendrive, Hard disk, Memory Card இவற்றில் இருந்து பெறுமதிமிக்க தகவல்களை அழித்து விட்டிர்களா?


3G மற்றும் GSM கைத்தொலைபேசி சிம் கார்டில் அழித்த தகல்களை மீட்பது எப்படி?