Thursday, January 20, 2011

Top Ten Programmes


சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் சென்ற 2010ல் டவுண்லோட் செய்யப்பட்டன. அவற்றில் முன்னணி அப்ளிகேஷன் கள் என்ன என்ன என்று இப்போது பட்டியலிடப் பட்டுள்ளன. பலரின் பயன்பாட்டிற்கு உள்ளான இந்த புரோகிராம்களை நீங்கள் பயன்படுத்தினீர்களா? இல்லையெனில் இனிமேலாவது தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாமே!

1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச தொகுப்பு ( AVG AntiVirus Free edition): இந்த இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் செயல்பாடு பல நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாய் இருந்தது. இன்னும் தொடர்கிறது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை இந்த தளத்திலிருந்து டவுண்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை 8,43,17,112. கிடைக்கும் தள முகவரி http://download.cnet.com/AVGAntiVirusFreeEdition2011/30002239_410320142.html

2.அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் (Avast Free Anti Virus): 5,26,48,408 முறை டவுண்லோட் செய்யப்பட்ட வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு. கிடைக்கும் தள முகவரி: http://download.cnet.com/AvastFreeAntivirus/30002239_410019223.html

3. அவிரா ஆண்ட்டி வைரஸ் பெர்சனல் (Avira Anti Virus Personal): இதுவும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் புரோகிராம். இது 4,21,65,868 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் தள முகவரி : http://download.cnet.com/AviraAntiVirPersonalFreeAntivirus/30002239_410322935.html

4.யு-ட்யூப் டவுண்லோடர்(YouTubeDownloader): அனைவரும் ரசிக்கும் யு-ட்யூப் வீடியோ படங்களைக் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருவதில் பல புரோகிராம்கள் இருந்தாலும், இந்த புரோகிராமினைப் பலரும் விரும்பி டவுண்லோட் செய்துள்ளனர். எண்ணிக்கை: 3,00,68,100. செல்ல வேண்டிய தள முகவரி : http://download.cnet.com/YouTubeDownloader/ 30002071_410647340.html

5. மால்வேர் பைட்ஸ் (Malwarebytes AntiMalware): மால்வேர் தொகுப்புகளுக்கு எதிரான இந்த புரோகிராம் 2,57,99,006 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் தள முகவரி: http://download.cnet.com/ MalwarebytesAntiMalware/30008022_410804572.html

6. ஆட் அவேர் பிரி இன்டர்நெட் செக்யூரிட்டி (AdAware Free Internet Security): விளம்பரங்களாக வந்து நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பினை விலை பேசும் புரோகிராம்களைத் தடுக்கும் புரோகிராம். இது 2,03,75,957 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. இதனைத் தரவிறக்கம் செய்திடச் செல்ல வேண்டிய முகவரி: http://download.cnet.com/AdAwareFreeInternetSecurity/30008022_410045910.html

7.அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் பிரி (Advanced SystemCare Free) சிஸ்டம் சரியாக இயங்க பாதுகாப்பு தரும் புரோகிராம். இது 1,95,44,950 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் முகவரி : http://download. cnet.com/AdvancedSystemCareFree/30002086_410407614.html

8.விண் ஆர்.ஏ.ஆர். ( (Win RAR): பைல்களைச் சுருக்கித் தரும் புரோகிராம். இது சிநெட் தளத்திலிருந்து 1,94,31,244 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. பெறுவதற்குச் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://download.cnet.com/WinRAR32bit/30002250_410007677.html

9.டீம் வியூவர் (Team Viewer): இந்த புரோகிராம் மூலம் நீங்கள் அனுமதி அளிக்கும் இன்னொரு கம்ப்யூட்டரில் எவ்வளவு தூரத்திலிருந்தும் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அதனை இயக்கவும் செய்திடலாம். 1,57,22,955 முறை இது டவுண்லோட் செய்யப் பட்டுள்ளது. இதனைப் பெறச் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://download.cnet.com/ TeamViewer/30007240_410398150.html

10.கேம் பிராக் வீடியோ Chat (Camfrog Video Chat): இந்த புரோகிராம் வீடியோ மூலம் தொடர்பு கொள்ள உதவிடுகிறது. இது 14155432 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. இதனைப் பெற செல்ல வேண்டிய முகவரி: http://download.cnet.com/CamfrogVideoChat/30002348_410265538.html மேலே தரப்பட்டுள்ள புரோகிராம்கள் சார்ந்த தகவல்கள் அனைத்தும், தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள இணைய தள இதழின் பக்கங்களில் இருந்து டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இவை தவிர, இந்த புரோகிராம்களை வழங்குபவர்களின் இணைய தளம் மற்றும் பிற தளங்களிலிருந்தும் இவை டவுண்லோட் செய்யப்பட்டிருக்கலாம்.

கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்

அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!...ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்...பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும்....

இதற்க்கு தீர்வுதான் என்ன....பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம்...

நான் தற்போது கூற இருப்பது வைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்கும் பத்து வழிகளை தான்..

Removable Driveகளான பென்டிரைவ், மெமரிகார்டை போன்றவற்றை பயன்படுத்தும் முன்பு கவனம் தேவை..ஏனெனில் அதிகமாக வைரஸ்கள் Removable Driveகள் போன்றவற்றால் தான் பரவுகின்றன. ஒவ்வொரு முறை தாங்கள் இந்த Removable Drive பயன்படுத்தும் போதும் அதை ஸ்கேன் செய்யவும். Removable Drive என தனி ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.

*தங்கள் நண்பர்கள் முலம் சிடிகளை பகிர்ந்துக்கொள்வதில் கவனம் தேவை. சிடிகளின் இருக்கும் வைரஸ்கள் அவ்வளவாக தங்களை அடையாளம் காட்டிவதில்லை..தங்கள் கணினியை ஒவ்வொரு முறையும் அணைக்கும் shutdown செய்யும் போதும்..சிடி டிரைகளில் இருந்து சிடிகளை நிக்கிவிடுங்கள். எனெனில் தாங்கள் கணினியை பூட் செய்யும் போது சிடிகளில் இருக்கும் வைரஸ் தங்கள் கணினியில் பாதிப்பை ஏற்ப்படுத்தகூடும்.

*அதே மாறி இலவசமாக கிடைக்கிறது என சந்தையில் கிடைக்கும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் அதிகம் தேவை...இலவசமாக சிடிகளில் பதிந்து தரப்படும் மென்பொருட்கள், தகவல்களில் தான் அதிக வைரஸ்கள் இடம் பெறுகின்றன..ஏன் நானே! இது மாறி பாதிக்கப்பட்டுள்ளேன்.

*இணையம் மூலம் பைல்களை பதிவிறக்கும் போது நம்பிக்கை வாய்ந்த தளங்களில் இருந்து மட்டும் பைல்களை பதிவிறக்கவும். அந்த தளமானது...தங்கள் தளத்தில் வைரஸ் எதுவும் இல்லை என உறுதியளிப்பு தரப்பட்டுள்ளதா என அறியவும். மேலும்.EXE or .COM போன்ற பைல்களை பதிவிறக்குவதில் அதிக கவனம் தேவை...

நம்பிக்கை வாய்ந்த தளங்களை காண இங்கு நம்பிக்கை வாய்ந்த தளங்கள் பதிவிறக்க கிளிக் செய்யவும்.

*இணையத் தளங்களில் பார்வையிடும் போது தோன்றும் பாப் அப் விண்டோக்களை கிளிக் செய்வதில் கவனம் கொள்ளுங்கள்..மேலும் ஆன்லைன்யில் தங்கள் கணணியை  scan செய்யவா என சில அறிவிப்புகளை தாங்கள் கண்டுயிருக்கலாம்.இதில் தாங்கள் கிளிக் செய்தால் போதும்...தங்கள் கணினி ஸ்கேன் செய்வதும் போன்றும் வைரஸ்யிருப்பதும் போன்றும் தோன்றும். ஆனால் இங்கு தான் சில விசமிகளின் செயல் உள்ளது..இவ்வாறு தாங்கள் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யும் போது தங்கள் கணினிக்கு அவர்கள் Virus,Malware,Trojan ன்றவற்றை அனுப்பிவிடுகின்றன. ஆதாலல் இதை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்..

*தங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி Update ய்யவும்.தங்கள் நிறுவிய மென்பொருள் நிறுவிய தேதியின் நிலைமையும் பாதுகாப்பை மற்றும் பெற்றுயிருக்கும். அதன் பின்னர் பல சிறப்பு வசதிகளும், புதிய வைரஸ் தடுக்கும் திறனும் வெளியிடப்பட்டிருக்கும். தாங்கள் அப்கேர்ட் செய்வதில் புதிய திறனுடன் தங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பு இயங்கும். இதனால் வைரஸ் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். ஆண்டிவைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட்Update  செய்யவும்

*தங்கள் ஆன்டிவைரஸ் தொகுப்பை அதாவது மென்பொருளை கணினி இயங்கும் Start Up போதே தானாக இயங்க்கும் படி அமைத்திடவும்...மேலும் பூட் ஸ்கேன் செயல்படும் படி அமைத்துவிடவும்.

*தங்கள் கணினியில் விண்டோஸ் தரும் Firewall யை தவிர்த்து வேறு சில சிறந்த Firewall பயன்படுத்துங்கள்...ஏனெனில் விண்டோஸ் சிஸ்டம் தரும் Firewall  அவ்வளவாக பாதுகாப்பு தருவதில்லை. உதரணமாக ,Comodo ,Zone alarmபோன்றவை.

*தங்களுக்கு வரும் இ-மெயில் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்ய மறந்துவிடதிர்கள். தாங்கள் கணினிலியே இ-மெயில் மென்பொருள்களை பயன்படுத்தினால் கண்டிபாக ஸ்கேன் செய்ய வேண்டும். அதே மாறி தங்களுக்கு வரும் மெயில்களின் இணைந்து வரும் பைல்களை Attached Files கையாளுவதில் அதிக கவனம் தேவை நண்பர்களே!

*தங்கள் கணினியில் தாங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று ஓர் சிறந்த வைரஸ் தொகுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். ஆன்டிவைரஸை நிறுவிட்டால் போதுமா! பின்னர்....கணினியை வாரத்திற்கு ஒரு முறையாவது முழு வைரஸ் ஸ்கேன் செய்திடவேண்டும்...

இலவச  சிறந்த Avast ஆண்டிவைரஸை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்...

இதலாம் சரி...தங்கள் கணினியில் வைரஸ் எப்படியோ நுழைந்து, கணினியை முடக்குவிட்டது...என்ன பண்ணுவிங்க..ம்ம் தெரிந்துக்கொள்ள இங்கு தங்கள் கணினியில் வைரஸ் வந்து விட்டதா! கிளிக் செய்யவும்...




உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்

நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.


1.Advance System Care Free 3.7.3
 
இந்த அபாயமான பைல்களை நம் கணினியில் இருந்து முற்றிலும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதும் இலவசமாக. இந்த மென்பொருளில் நம்முடைய கணினியின் பிரச்சினைக்குரிய பைல்களை கண்டறிந்து முற்றிலுமாக நீக்கு கிறது. இந்த அருமையான மென்பொருள் இலவசமாக கிடைப்பது ஆச்சரியமே. இந்த மென்பொருளில் Spyware, malware, Junk files ஆகியவைகளை முற்றிலுமாக நம் கணினியில் இருந்து நீக்குகிறது. இந்த மென்பொருள் நாம் நீக்கும் பைல்கள் தானாகவே பேக்கப் எடுத்து வைத்து கொள்வதால் நமக்கு தேவைபட்டால் திரும்பவும் அதை நிறுவி கொள்ளலாம்.



மென்பொருளை டவுன்லோட் செய்ய 

2. Ccleaner v3.02
 
இந்த மென்பொருளை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஏற்க்கனவே மூன்றுமுறை இந்த மென்பொருளை பற்றிய பதிவை இந்த தளத்திலேயே போட்டு இருக்கேன். நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள். நம்முடைய கணினியின் தேவையில்லாத பைல்களை நொடியில் கண்டறிந்து அனைத்தையும் நீக்கி விடும். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமான மென்பொருள் இது. இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய  


இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 

3. Wise Registry Cleaner Free 5.91
 
நம்முடைய கணினியில் சில மென்பொருட்களை நாம் நிறுவுவோம். பின்னர் இந்த மென்பொருளின் செயல்பாடு பிடிக்காமல் இதை நீக்கி விடுவோம். இப்படி நீக்கும் போது நம்முடைய கணினியில் உள்ள registryல் அந்த மென்பொருளின் பைல்கள் நீங்காமல் அப்படியே பதிந்து விடும். இதனால் நம் கணினியின் வேகம் மிகவும் பாதிக்க படுகிறது. இந்த பைல்களை நீக்க அருமையான இலவசமென்பொருள் தான் இந்த மென்பொருள். மேலே உள்ள இரண்டு மென்பொருளில் இந்த வசதி இருந்தாலும் யாரும் அந்த மென்பொருட்களை பயன்படுத்தி registry சுத்தம் செய்ய வேண்டாம். இதற்கென்று பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள இத மென்பொருளை பயன்படுத்தவும். இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய 
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 

இங்கு  கொடுத்துள்ள அனைத்து மென்பொருட்களும் லேட்டஸ்ட் பதிப்பு ஆகும். ஆகவே தற்போது தங்களிடம் இவைகளின் பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து மாற்றி கொள்ளுங்கள்.

கணினியில் எந்த மென்பொருள் இணையத்தை பயன்படுத்துகிறது?

இணையத்தை பயன்படுத்தும் போது தானகவே சிலநேரங்களில் அதன் வேகம் குறைவதை உணர்வீர்கள்.
நீங்களாக கணினிக்கு கட்டளைகள் வழங்காத போதும் அதில் நிறுவியிருக்கும் சில  புரோகிராங்கள் இணைய தொடர்பு கிடைத்ததும் அதை பயன்படுத்த தொடங்கும் போதே வேகம் குறைந்து சாதாரணமாக பார்க்கும் தளங்களை கூட பார்க்க முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கணினியில் இருந்து எந்த புரோகிராம் இணையத்தை பயன்படுத்துகிறது என்பதை கண்டறிந்து அவற்றை நிறுத்தினால் வேகத்தை அதிகமாக்கலாமல்லவா?

இந்த வசதியை தருகின்ற மென்பொருளே

TCPEye 1.0  ஆகும்.  இதை நிறுவியதும் கணினியில் இருந்து இணையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தும் சாப்வேர்களை லிஸ்ட் செய்கிறது.  முக்கியமாக அவை எந்த நாடுகளுக்கு தொடர்பை ஏற்படுத்துகின்றது, எந்த புரோட்டோகோலை பயன்படுத்துகிறது, ஐபி முகவரி போன்ற விபரங்களை பட்டியலிடுகிறது. (வேறு மென்பொருட்கள் இவ்வாறு நாடுகளை பட்டியலிடுவதில்லை)

இவற்றில் தேவையில்லை என்று நீங்கள் கருதுபவற்றை வலது கிளிக் செய்து end process மூலம் நிறுத்தி முழுமையான இணைய வேகத்தை பெறலாமல்லவா?.
 
Click Here For Download

வரலாற்றில் இன்று: ஜனவரி 20

1793: பிரான்ஸ், ஸ்பெய்னுடன் அமெரிக்கா சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்க சுதந்திரப் போராட்ட மோதல்கள் முடிவுக்கு வந்தன.

1801: யாங்கேய் யுத்தத்தில் பெரு, பொலிவியா கூட்டணியை சிலி தோற்கடித்தது.

1841: ஹொங்கொங்கை பிரிட்டன் கைப்பற்றியது.

1885: ரோலர் கோஸ்டருக்கு எல்.ஏ. தொம்ஸன் காப்புரிமை பெற்றார்.

1929: முதல் தடவையாக திறந்தவெளியில் படம்பிடிக்கப்பட்ட முழுநீள திரைப்படமான ' ன் ஓல்ட் அரிஸோனா' திரையிடப்பட்டது.

1934: பியூஜிபில்ம் நிறுவனம் டோக்கியோவில் ஸ்தாபிக்கப்பட்டது.

1936: 8 ஆம் எட்வேர்ட் பிரிட்டனின் மன்னரானார்.

1936: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்புக்கான திகதி மார்ச் 4 ஆம் திகதியிலிருந்து ஜனவரி 20 இற்கு மாறியமை இதுவே முதல் தடவை.

1941: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 3 ஆவது தடவையாக அமெரிக்க ஜனாதிபதியானார்.

1945: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 4 ஆவது தடவையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து சாதனை படைத்தார்.

1961: ஜோன் எவ். கென்னடி அமெரிக்க ஜனாதிபதியானார்.

1969: கிழக்கு பாகிஸ்தானில் மாணவரான அமானுல்லா அஸாதுஸ்ஸமான் கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்திற்கு வழி வகுத்தது.

1981: அமெரிக்க ஜனாதிபதியாக 69 வயதான ரொனால்ட் ரீகன் பதவியேற்றார். அதிக வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவர் இவர்.

1991: சூடான் அரசாங்கம் நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தியது. வடக்கிலுள்ள முஸ்லிம்களுக்கும் தெற்கிலுள்ள கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான சிவில் யுத்தத்தை தீவிரமாக்கியது.

1992: பிரான்ஸில் விமான விபத்தொன்றில் 87 பேர் பலி.

2001: பிலிப்பைன்ஸில் 4 நாள் வன்முறையற்ற புரட்சி மூலம் ஜனாதிபதி ஜோசப் எஸ்ராடா பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

2009: அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்றார். இப்பதவியைப் பெற்ற முதலாவது கறுப்பினத்தவர் இவராவார்.

கணினியில் இருந்து பீப் ஒலி

கணினி On செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.