Thursday, December 30, 2010

2010 தொழில்நுட்ப உலகம்: ஒரு மீள்பார்வை




  2010 ஆம் ஆண்டிற்கு விடைகொடுக்கும் தருவாயில் இன்றைய எமது செய்தியானது தொழிநுட்ப உலகில் இவ்வருடத்தில் நிகழ்ந்த முக்கிய சில விடயங்களை நினைவுபடுத்தவுள்ளது.

இவற்றில் அதிகமான செய்திகளை நாம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள போதிலும் அவற்றை மீண்டும் திரும்பிப்பார்ப்போம்.

மொபைல் தொழிநுட்பம் (Mobile Technology)

1) எச்.டி.சி இவோ 4 ஜி

பிரபல எச்.டி.சி நிறுவனம் உலகின் முதலாவது வை-மெக்ஸ் தொழிநுட்பத்துடன் கூடிய இவோ 4 ஜி அதாவது நான்காவது தலைமுறை வலையமைப்பு கையடக்கத்தொலைபேசியினை அறிமுகப்படுத்தியது.

2) அண்ட்ரோயிட் இயக்குதளம்

கூகுளின் அண்ரோயிட் இயக்குதளமானது உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்பிள் கையடக்கத்தொலைபேசிகளின் விற்பனையை முதல் முறையாக அண்ரோயிட் தொலைபேசிகள் முறியடித்தன.

3) அப்பிளின் ஐ-போன் 4 ஜி மற்றும் ஐ-பேட்

அப்பிள் தனது ஐ-போன் வரிசையில் ஐ-போன் 4 ஜி யை அறிமுகப்படுத்தியது. சில நாட்களிலேயே அதன் அண்டனாவில் காணப்பட்ட கோளாறுகள் காரணமாக பெரிதும் விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் ஐபேட் எனும் சாதனத்தினையும் அறிமுகப்படுத்தியது.

4) கலெக்சி டெப்

கையடக்கத்தொலைபேசி உலகில் இது ஒரு மைல்கல் எனலாம். காரணம் இது ஒரு சிறிய கணனி மற்றும் கைப்பேசியின் இணைப்பாகும். சுமார் 7 அங்குல திரையைக் கொண்டதாகும்.

இவற்றைத்தவிர நொக்கியாவின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட என் 8 (N8), டெல்லின் ஸ்ரைக் (Dell Streak), எல்.ஜியின் ஒப்டிமஸ்(Optimus ), சொனி எரிக்சனின் எக்ஸ்பீரியா(Xperia), விவாஸ்(Vivaz) தொடர் கையடக்கத்தொலைபேசிகள் மோட்டரோல்லாவின் மைல்ஸ்டோன்(Milestone), மைல்ஸ்டோன், ட்ரொயிட்(Droid) பேசிகள் ஆகியன பெரிதும் பேசப்பட்ட வகைகளாகும்.

சமூகவலையமைப்புக்கள் (Social Networking)

1) பேஸ்புக்

பேஸ்புக் தனது 500 மில்லியன் பாவனையாளர் என்ற மைல்கல்லினை எட்டியது இவ்வருடத்திலேயாகும்.

2) டுவிட்டர்

இவ்வருடத்தில் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் 200 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டியது.

3) டயஸ்போரா மற்றும் கூகுள் +1

பேஸ்புக்கிற்கு போட்டியாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தளங்களும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன.

4) பேஸ்புக் - ஸ்கைப் இணைவு

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகியன ஒன்றாக இணைந்ததும் இவ்வருடத்திலேயாகும்.

கூகுள்

1) கூகுள் தானியங்கிக் கார்

கூகுள் முதன்முறையாக தனது தானியங்கிக் காரை பரீட்சித்துப் பார்த்து அதில் வெற்றியும் பெற்றது.

2) கூகுளின் 'குரோம் நெட்புக்'

கூகுள் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டது.

இவற்றைத்தவிர முக்கிய விடயங்களாக,

1) ஈரானை உலுக்கிய ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ்

அதி மேம்பட்ட வைரஸாக இது கருதப்படுகின்றது. ஈரானின் அணு உலைகளில் செயற்பட்டு வரும் கணனிகளைத் தாக்கவே இது ஏவப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

2) சீனாவின் அதிவேக சுப்பர் கணனி

டியானி (Tianhe) - 1 A என்ற அதிவேக கணனியை இவ்வருடத்தில் சீனா மீள் அறிமுகம் செய்தது.

இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புகளை மேற்கொள்ளக்கூடியதாகும்.

3) பிளக்பெரிக்குத் தடை

சவூதி உட்பட சில நாடுகள் பிளக்பெரிக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தன . இதன் சிக்கலான என்கிரிப்ஷன்களே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டது. எனினும் பின்னர் இத்தடை அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 29

1845: மெக்ஸிகோவின் மாநிலமான டெக்ஸாஸை சர்வதேச எல்லை நிர்ணயத்திற்கிணங்க தனது மாநிலமாக்கியது அமெரிக்கா.

1890: அமெரிக்கப் படையினர் 200 இற்கும் அதிகமான செவ்விந்தியர்களை சுட்டுக்கொன்றனர்.

1911: சீனாவின் கிங் வம்ச ஆட்சியலிருந்து மொங்கோலியா சுதந்திரம் பெற்றது.

1930: இந்தியாவின் சேர் முஹமட் இக்பால் (அல்லாமா இக்பால்) பாகிஸ்தான் உருவாக்கத்திற்காக இரு நாடுகள்  கொள்கையை முன்வைத்தார்.

1972: அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதால் 101 பேர் பலி.

1984: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 508 ஆசனங்களில் 401 ஆசனங்களை சுவீகரித்தது.

1996: கௌதமாலாவில் அரசாங்கத்திற்கும் கௌதமாலா தேசிய புரட்சி ஒன்றியம் எனும் அமைப்பிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் மூலம் 30 வருடகால சிவில் யுத்தம் முடிவடைந்தது.

1997: ஹொங்கொங்கில் பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக 12.5 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.

1998: கம்போடியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட இனப்படுகொலைகளுக்காக கெமரூஜ் தலைவர்கள் மன்னிப்பு கோரினர்.

புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்

புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்
நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்
அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.

1. Sequrity Update களை நிறுவுங்கள்.



உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்
தரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இது தானாகவே இயங்குமாறு செய்யலாம். அல்லது நீங்களாகவே குறிப்பிட்ட பாதுகாப்பு கோப்புகளை தனியாக தரவிறக்கி விட்டு பின்னர் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.

இதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic updates செல்லுங்கள். அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால் எப்பொழுது விண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.

கீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்த
பாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

http://www.microsoft.com/downloads/en/resultsForCategory.aspx?displaylang=en&categoryId=7&stype=n_dc

சில முக்கியமான அப்டேட் கோப்புகள் :

Update for Windows XP (KB932823)
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=28e2fdb2-1aa5-4c84-8255-b3142ca2fe85

Security Update for Windows XP (KB958644)
Windows Malicious Software Removal Tool
http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=en&FamilyID=ad724ae0-e72d-4f54-9ab3-75b8eb148356

Malware Removal Starter Kit

மேலும் உங்களுக்கு தேவையான .Net , DirectX , Internet Explorer 8 மற்றும் விண்டோஸ் சர்வீஸ் பேக்குகள் போன்றவையும் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

2. ஆன்ட்டிவைரஸ் மட்டும் போதாது.

முன்னர் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டும் வைரஸ்கள் மீது பயந்தனர். இப்பொழுது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வைரஸ்கள் வருகின்றன. குறிப்பாக பென் டிரைவ்கள். அதனால் எதையும் சோதிக்காமல் அலட்சியமாக கோப்புகளை திறக்காதிர்கள்.உங்கள் கணினியில் ஒரு நல்ல ஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவுங்கள். இந்த வகையில் Avast மற்றும் Avira ஆண்டிவைரஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. கணினியின் நினைவகம் ( Memory ) அதிகம் உள்ளவர்கள் Avast பயன்படுத்தலாம். ஆனால் Avira இயங்க குறைந்த நினைவகமே போதும்.


ஆனாலும் ஆன்ட்டிவைரஸ் மட்டுமே போதுமானதல்ல. கண்டிப்பாக மால்வேர் (Malware ) தடுக்கும் மென்பொருளும் Spyware தடுக்கும் மென்பொருளும் இருக்க வேண்டும்.

மால்வேரை தடுக்க - Malwarebytes
ஸ்பைவேரை தடுக்க - Windows Defender .
இவைகளை பயன்படுத்தினால் பாதுகாப்பும் கூடும்.

3. தேவையான மென்பொருள்களை மட்டும் பயான்படுத்துங்கள்.

சிலர் கணினியில் பார்த்தால் அத்தனை ப்ரோக்ராம்கள் இருக்கும். எல்லாவற்றையும் நிறுவி விட்டு பாதிக்கு மேலானவை பயன்படாமலே வைத்திருப்பார்கள். இதை தவிர்த்து எவை உங்களுக்கு வேண்டுமோ அதன் முக்கியத்துவம் தெரிந்தால் மட்டுமே வைத்திருக்கவும். உதாரணமாக Firefox, MS-Office போன்றவை. மற்றவற்றை எல்லாம் தூக்கி கடாசி விடுங்கள்.

4. கணினியின் மென்பொருள் நண்பர்கள் :

Ccleaner

கணினியில் வேண்டாதவற்றை அழிக்க Ccleaner பயன்படுத்துங்கள். இது ஒரு நல்ல மென்பொருள். ரெஜிஸ்ட்ரி பழுதுபார்க்க , தேவையில்லாத குப்பை பைல்களை நீக்க , மென்பொருளை நீக்க , Startup மென்பொருள்களை கையாள, பார்த்த கோப்புகளின் பட்டியல் , இணைய தள முகவரிகளை (History) நீக்க பயன்படும் அருமையான எளிமையான மென்பொருள்.முதலில் இறக்குங்கள் இதை.

Advanced System Care

இது மேலே கூறிய மென்பொருள் செய்யும் வேலைகளை விட அதிக வசதிகள் கொண்டது.அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய இந்த மென்பொருள் கணினிக்கு எந்த பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்கிறது. இதில் ஸ்பைவேர் நீக்கும் வசதியும் இருக்கிறது. வைரஸ் வரும் ஓட்டைகளை கண்டறிந்து அடைத்துவிடும் வசதியும் உண்டு.

5. Hard Disk படம் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

படம் பிடிப்பது என்றால் கேமராவில் பிடிப்பதல்ல. உங்கள் கணினியின் வன்தட்டில்
உள்ள தகவல்கள், அமைப்புகள், நிறுவப்பட்ட மென்பொருள்கள் போன்ற
எல்லாவற்றையும் இமேஜ் பைல்களாக பேக்கப் எடுத்து கொள்வதாகும். இதன் மூலம் அடுத்த முறை உங்கள் விண்டோஸ் பழுது அடைந்தாலோ அல்லது Format செய்யும்
நிலை ஏற்பட்டாலோ இதை பயன்படுத்தி அப்படியே உங்களிடம் என்ன இருந்ததோ அதை மீட்டு கொள்ளலாம். மறுபடியும் windows cd தேட தேவையில்லை.இதை மேற்கொள்ள
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கீழே உள்ள முகவரியில் தரவிறக்கவும்.

DriveImage XML

6. பயர்வால் பயன்படுத்துங்கள் ( Firewall )

பயர்வால் பயன்படுத்தும் போது உங்களுக்கான ஆபத்தும் குறைகிறது. ஏன் என்றால் எந்த ஒரு தேவையில்லாத ப்ரோக்ராம் வந்தாலோ அல்லது வைரஸ்கள் வந்தாலோ அதை வாசலிலேயே தடுத்து நிறுத்துகின்றன. இதனால் உங்களின் Firewall அமைப்பை இயக்க நிலையில் வைத்திருக்கவும்.


இதற்கு Control panel -> Windows Firewall செல்லுங்கள். அதில் on என்பதை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் இதை பயன்படுத்தினாலும் தனியாக இன்னொரு பயர்வால் பயன்படுத்தலாம். Zone Alarm என்ற நிறுவனம் இலவசமாகவும் தரமானதாகவும் பயர்வால் அளிக்கிறது.
இதை தரவிறக்க : Zone Alarm Firewall.

மேலும் WinPatrol என்ற மென்பொருள் நமது கணினியை சுற்றி ரோந்து செய்து என்னென்ன உள்ள வருகின்றன என்றும் நமக்கு அலெர்ட் செய்கின்றன. இதனால் வைரஸ்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்யும் முன் தடுத்து விடலாம். மேலும் தற்போது இயங்கும் ப்ரோக்ராம்கள் போன்றவை பற்றியும் தெரிவிக்கிறது.

இதை தரவிறக்க : Winpatrol