Saturday, January 22, 2011

நீங்கள் Video Game பிரியரா?

நீங்கள் Video Game பிரியராக இருந்தால் உங்களுக்கு பயன்படும் வெப்சைட் இது. நீங்கள் விளையாட நினைக்கும் Games உங்கள் கணிணியில் இயங்குமா? இயங்காதா? மற்றும் இயக்க உங்கள் கணிணியில் என்ன மென்பொருள் அல்லது வன்பொருள் தேவைப்படும் என தெளிவாக கூறுகிறது.


Go Can You Run It?

Google Chrome ல் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு Shortcut key கொடுத்து Open செய்ய

கூகுள் வழங்கும் குரோம் உலவியில் பல எண்ணற்ற வசதிகள் இருக்கின்றன. இதில் இல்லாத பல வசதிகளை நாம் நீட்சிகளை உலவியில் நிறுவினால் பெற்று கொள்ளலாம்.    அதில் ஒரு முக்கிய மான வசதி இது. நாம் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒரு shortcut key செட் செய்து இந்த shortcut கீயை அழுத்தினால் அந்த இணைய தளம் ஓபன் ஆவது போல செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் நாம் ஒவ்வொரு முறையும் இந்த பெயர்களை Type பண்ண வேண்டியதில்லை இந்த Shortcut  Key அழுத்தினால் உடனே அந்த தளம் நமக்கு திறந்து விடும்.


 • முதலில் நீங்கள் shortcut செட் செய்ய நினைக்கும் தளத்தை ஓபன் செய்து Ctrl+D அழுத்தி புக்மார்க் செய்து தனி போல்டரில் சேமித்து கொள்ளுங்கள். 
 • ஒவ்வொரு போல்டரிலும் ஒரு தளம் மட்டுமே இருப்பதை போல தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 • நீங்கள் அடிக்கடி ஓபன் செய்யும் தளங்களை தனி தனி போல்டர் ஓபன் செய்து அதில் தனி தனியாக சேமித்து கொள்ளுங்கள்.
 • அடுத்து  இந்த லிங்கில் சென்று  நீட்சியை Chrome Toolbox உங்கள் உலவியில் நிறுவி கொள்ளுங்கள்.
 • இந்த நீட்சியை உங்கள் கணினியில் நிறுவியதும் ஒரு வளையம் போன்ற பட்டன் உங்கள் உலவியில் வந்திருக்கும் அதன் மீது க்ளிக் செய்து Options பகுதிக்கு செல்லுங்கள்.
 • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் நீங்கள் Quick Launch என்பதை தேர்வு செய்து நான் கீழே படத்தில் காட்டி இருக்கும் போல்டர் போன்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
 • அந்த போல்டர் போன்ற பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு உங்கள் புக்மார்க் பகுதி ஓபன் ஆகும் அதில் நீங்கள் Alt+1 கீயை ஷார்ட்கட் கீயாக தேர்வு செய்ய நினைக்கும் புக் மார்க் போல்டரை தேர்வு செய்து OK  செய்து கொள்ளுங்கள்.
 • அதே முறையில் கீழே உள்ள கட்டங்களில் உங்களுக்கு தேவையான தளங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 • நீங்கள் இப்படி தேர்வு செய்து முடித்ததும் அந்த பக்கத்தை மூடி விடுங்கள்.
 • இப்பொழுது உங்கள் உலவியில் நீங்கள் தேர்வு செய்த shortcut cut கீயை அழுத்துங்கள் உடனே அந்த தளம் ஓபன் ஆவதை காண்பீர்கள். 
 • இது போல நாம் அடிக்கடி ஓபன் செய்யும் தளத்திற்கு செட் செய்து கொண்டு சுலபமாக திறந்து கொள்ளலாம்.

கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அழிக்கவும்!

BleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு (Hard Disk) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை (Temporary Files) தேடிப்பிடித்து அழிப்பதற்கு  பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலவி (Firefox Browser) யின் வேகத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க Bleachbit ஐ உபயோகிக்கலாம்.

இணைய உலவியில் நாம் விட்டுச் சென்ற தடயங்கள் (Traces), வரலாறு, குக்கீஸ் (Cookies) போன்றவற்றை இந்த மென்பொருள் நொடிப்பொழுதில் அழித்துவிடும்.

பையர்பாக்ஸ் முதல் கூகிள் குரோம் வரை எல்லா உலவிகளுடன் (Browser) ஒத்திசைவு கொண்டது இது. அடோபி ரீடர், அடோபி பிளாஷ், கூகிள் எர்த், ஜாவா, ஓபன் ஆபிஸ், ஸ்கைப் போன்ற 80 + பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை அடையாளம் கண்டு அழிக்க வல்லது.

புகைப்படங்களை Digitel Art ஆக மாற்ற Online தளம்

சாதாரண புகைப்படங்களை அழகிய டிஜிட்டல் ஆர்ட் (Digital Art) ஆக மாற்றுவதற்கு உதவும் தளமாக Befunky உள்ளது. விண்டோஸ் பெயிண்ட் பிரஷில் இல்லாத பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. புகைப்படத்தை கார்ட்டூன் போலவோ, கரியால் வரைந்த ஓவியம் போலவோ, மற்றும் பல புதிய வடிவமாக மாற்றவோ Befunky பயன்படுத்தலாம்.

புகைப்படங்களை டிஜிட்டல் ஆர்ட் ஆக மாற்ற ஆன்லைன் தளம்

புகைப்படங்களை டிஜிட்டல் ஆர்ட் ஆக மாற்ற ஆன்லைன் தளம்
நம் கணினியில் உள்ள புகைப்படத்தை அங்கே தரவேற்றவேண்டும் (Upload). சமூகக் குழும தளங்களில் (Social Networking sites) இருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு. டிஜிட்டல் ஆர்ட் ஆக மாற்றப்பட்ட நமது திறமையால் உருவான அழகிய நவீனத்தை பேஸ்புக், மைஸ்பேஸ் போன்றவற்றில் பகிரும் வசதியும் உண்டு.

விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆகிய அனைத்து இயங்குதளத்திலும் (Operating System) இதைப் பயன்படுத்தலாம். உங்கள் உலவியில் (Browser) இருந்து இயக்குவதால் இது சாத்தியமாகிறது. சமீபத்திய பிளாஷ் ப்ளேயர் (Flash Player) தேவைப்பட்டால் தரவிறக்கிக்  (Download) கொள்ளவும்.
தள முகவரி : http://bit.ly/g5qQrx

வரலாற்றில் இன்று: ஜனவரி 21

1789: அமெரிக்காவின் முதலாவது நாவல் பொஸ்டன் நகரில் அச்சிடப்பட்டது.
1793: பிரான்ஸின் 16 ஆம் லூயி மன்னன் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிரச்சேதம்
செய்யப்பட்டார்.

1899: ஒபெல் நிறுவனம் தனது வாகன உற்பத்தியை ஆரம்பித்தது.

1908: நியூயோர்க் நகரில் பெண்கள் பொது இடத்தில் புகைபிடிப்பதை தடைசெய்யப்பட்டது.

1911: முதலாவது மொன்டே கார்லோ பந்தயம் நடைபெற்றது.

1921: இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1960: ஜமைக்கா விமான விபத்தில் 37 பேர் பலியாகினர்.

1981: ஈரானில் அமெரிக்கத் தூதரகத்தில் 444 தினங்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

1999: அமெரிக்க கரையோரக் காவல் படையினர் 4300 கிலோகிரோம் கொகேய்ன் போதைப் பொருளை கைப்பற்றினர்.