Saturday, January 1, 2011

வரலாற்றில் இன்று: ஜனவரி 01

கி.மு. 45:  ஜூலியன் கலண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1600: ஸ்கொட்லாந்தில் வருடம் ஆரம்பிக்கும் தினம் மார்ச் 25 இலிருந்து ஜனவரி முதலாம் திகதிக்கு மாற்றப்பட்டது.
1772: முதலாவது பயணக் காசோலை லண்டனில் விநியோகிக்கப்பட்டது.
1800: டச்சு கிழக்கிந்திய கம்பனி கலைக்கப்பட்டது.
1804: ஹெய்ட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவடைந்தது.
1808: அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது.
1833: பாக்லாந்து தீவுகளுக்கு பிரிட்டன் உரிமை கோரியது.
1872: இலங்கையில் பிரித்தானிய நாணயத்திற்குப் பதிலாக ரூபா நாணயம் பாவனைக்கு வந்தது.
1877: பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.
1899: கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுற்றது.
1949: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தம் ஐ.நா.வின் போர் நிறுத்த தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.
1958: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னோடியாக அமைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஸ்தாபிக்கப்பட்டது.
1959: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்த்தன.
1978: எயார் இந்தியா விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானதால் 213 பேர் பலி.
1984: பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் பெற்றது.
2002: ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளில் யூரோ நாணயம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.
2007: இந்தோனேஷியாவில் 102 பயணிகளுடன் விமானமொன்று காணாமல் போனது.
2009: தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 66 பேர் பலி.
2010: பாகிஸ்தானில் கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 105 பேர் பலி. நூற்றுக்கும் அதிகமானோர் காயம்.

நொக்கியாவின் (Nokia) X6....

நொக்கியா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Nokia X6 ஜ வெளியிடுகின்றது. இது நொக்கியாவின் X series இல் முதலாவது வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளசுகளை நம்பியே Nokia X6 வெளியிடப்படுகின்றது..
Nokia X6 ஆனது குறிப்பிடத்தக்க சில புதிய வசதிகளை (Feature) கொண்டுள்ளது...
 • 3.2 inch தொடுகை திரை (touch screen)
 • 5.0 மெகா பிக்சல் (mega pixel) கமரா
 • கமரா dual LED flasharl Zeiss lens ஜ் கொண்டுள்ளது
 • உயர் தரத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும் (30 frames per second)
 • வீடியோ, புகைப்படத்தை (photo) எடிட்டிங் செய்ய முடியும்
 • TV Out, Stereo speakers, 3.5 mm audio jack வசதியுள்ள மல்டி மீடியா பிளேயரை (multimedia player) கொண்டுள்ளது
 • 3G, HSDPA, stereo Bluetooth and WiFi
 • இணைய உலவியானது (web browser) flash support உடையது.
 • 32 GB உள்ளக சேமிப்பு வசதி (on-board memory)உங்கள் பைல்களை GB இருந்து MB ஆக மாற்ற/சுருக்க வேண்டுமா?


 பெரிய Capacity கொண்ட அதாவது GB வரிசையில் உள்ள பைல்களை (File- Data, Video) அல்லது மென்பொருட்களை சிறிய Capacity கொண்டபைல்களாக அதாவது MB யாக மாற்ற KGB Archiver எனும் மென்பொருள் பயன்படுகின்றது. KGB Archiver மென்பொருளானது இலவச மென்பொருள் என்பது சந்தோசம் தரக்கூடிய விடயம்.KGB Archiver ஆனது நம்ப முடியாத உயர் Compression Rate இல் GB இருந்து
MB ஆக மாற்றுகின்றது. இந்த மென்பொருளானது AES-256 Encryption எனும்
முறையைப் பயன்படுத்தி Encrypt செய்யப்படுகின்றது. இந்த மென்பொருளை
கணணியில் ஏற்ற (Install) 1.5GHz Clock Speed,256MB RAM கொண்ட கணணி
போதுமானது.


KGB Archiver ஜ பயன்படுத்தி Zip file ஆகவும், KGB file format ஆகவும் மாற்ற
முடியும். இங்கு .KGB file format ஆனது KGB Archiver இனுடைய சொந்த
file format ஆகும். மேலதிகமாக எமக்கு விரும்பிய Compression Algorithm யும்
தெரிவு செய்ய முடியும்.

Windows Vista மென்பொருளை (ஏறக்குறைய 3GB கொண்டது) 4MB ஆக
Compress பண்ணியது என்றால் நம்புவீர்களா??????????

KGB Archiver ஜ தரவிறக்க சுட்டியை அழுத்தவும்: Download Here
RUBY & CHIKAADEE - THAYA THAYA - OFFICIAL MUSIC VIDEO

Rihanna - Rude Boy

Akon - Right Now (Na Na Na)

Akon - I Wanna Love You ft. Snoop Dogg

இசைப் பிரியர்களுக்காக வீவோ (VEVO) மியூசிக் இணையத் தளம்


யு–ட்யூப் (You Tube) இணையத் தள நிறுவனத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. யு–ட்யூப் இணையத் தள நிறுவனமும், உலகின் முன்னணி இசை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து வீவோ (VEVO) என்னும் பெயரில் ஒரு மியூசிக் வீடியோ வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த திட்டத்தை யு–ட்யூப் இணைய நிறுவனத்துடன் சோனி மியூசிக் என்டர்டெய்ன்மென்ட், யுனிவர்சல் மியூசிக் குரூப், இ.எம்.ஐ., ஏ.டி அண்ட் ட்டி மற்றும் அபுதாபி மீடியா கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயற்படுத்துகின்றார்கள். இந்த நிறுவனங்கள் இத்திட்டத்திற்கென 30 கோடி டாலர் நிதியை வழங்கியுள்ளன.
தற்போது வீவோ இணைய தளத்தில் 5,191 கலைஞர்களுடைய 14,675 மியூசிக் வீடியோக்கள் உள்ளன. மேலும் 20 வெவ்வேறு வகையான இசை ஆல்பங்கள் இருக்கின்றன. வீவோ தளத்தைப் பயன்படுத்துபவர்கள் அவர்கள் விரும்பும் வகையில் பிளே லிஸ்ட்டுகளை (Play List) உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வகையில் இதுவரை 800க்கும் அதிகமான பிளே லிஸ்ட்டுகள் உள்ளன.
வீவோ இணையத் தளத்தை மேலும் விரிவாக்கும் திட்டத்தில் இந்த நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபடுகின்றன.
வீவோ இணையத் தள முகவரிஎவ்வாறு இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாறுவது?


  ”இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்?” என்பது பற்றி
அலசுகின்றது. இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடியுமே தவிர இரண்டு கணனிகளுக்கிடையில் இணைய இணைப்புகளை இணைக்கும் முறையல்ல.

இரண்டு கணிணிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற, அடிப்படை தேவைகள் சில உண்டு.
முதலாவது,
இரண்டு கணனிகளிலும் நெட்வர்க் கார்ட் (Network Card) இருக்க வேண்டும்.

மற்றையது,
இரண்டு கணனிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும்.


இரண்டு கணணிகளுக்கிடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற இணைய சாதனங்கள் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக இரண்டு
கணனிகளை இணைக்க cross-over கேபில் பயன் படுத்தப்படுகிறது.. இந்த cross-over கேபில் (கீழேயுள்ள படத்தைப் பார்க்க) வழமையான ஈதர்நெற் (Ethernet) கேபிலிலிருந்து வேறுபட்டது.Cross-Over கேபில்

இரண்டு கணினிகளையும் cross-over கேபிலால் இணைத்த பின், அடுத்ததாக இரண்டு கணனிகளிலும் ஐபி முகவரிகளை (IP address) மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு முன், எவ்வாறு ஐபி முகவரிகளை விண்டோஸ் எக்ஸ்பீ (Windows XP) ங்கு தளத்தில் மாற்றியமைப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.
விண்டோஸ் எக்ஸ்பீ
(Windows XP) கணனியில்,

படி 1:
Start பின் Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அதன் விண்டோ கீழே உள்ளவாறு காணப்படும்.
படி 2:அதன் பின், புதிதாக வந்திருக்கும் விண்டோ பின்வருமாறு காணப்படும்.

 • Local Area Network என்பதன் கீழ் உள்ள நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிற விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் இருக்கும்.
(அதாவது இன்னும் இரண்டு கணினிகளும் தொடர்பாடலை மேற் கொள்ள தயாராயில்லை என்பதே ஆகும்).


படி 3: அடுத்து அந்த மஞ்சள் நிற ஐக்கன் மீது ரைட் க்ளிக் (Right Click) செய்து, புதிதாக வரும் மெனுவிலிருந்து Properties என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General ரப் இன் (Tab) கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனையும் க்ளிக் செய்யுங்கள்.

அதன் விண்டோ கீழே உள்ளவாறு காணப்படும்.

படி 4:


புதிதாக தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ளவாறு அதன் ஐபி முகவரியை
மாற்றியமையுங்கள்.

முதலாவது கணனியில் (கணனி-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும்,

இரண்டாவது கணனியில் (கணனி-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள்.
கீழேயுள்ள படத்தைப் பார்க்க.

இப்போது உங்கள் இரண்டு கணனிகளையும் ஒன்றாக இணைத்துள்ளீர்கள். நீங்கள் இரண்டு கணினிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள் செய்தது சரி தானா? என்பதை உறுதி செய்து கொள்ள பின்வரும் முறையை பின்பற்றுங்கள்.


படி 1:

 • Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்க.
 • புதிதாக வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் மஞ்சள் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம் அல்லது ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருக்கும்.
கவனிக்க: நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கன் மேல் பூட்டு வடிவில் இருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. ஏனென்றால், இது Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதைக் காட்டுகிறது.
அதை சரி செய்ய,

இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள். இது Firewall இயக்க
நிலையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும். தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் இரண்டு கணணிகளுக்கிடையில் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.
உங்கள் கணினி-1 இன் ஐபி முகவரிகளை (IP address) பெற,

 • Start → Run ஐத் தெரிவு செய்யுங்கள். அதன் பின் தோன்றும் விண்டோவில் "cmd"என type செய்யுங்கள்.
 • புதிதாக தோன்றும் விண்டோவில் "ipconfig" என type செய்து A கீயை அழுத்துங்கள்.
 • அந்த விண்டோவில் ஐபி முகவரிகள் பற்றிய விபரம் பின்வருமாறு தெரியும்.
IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0 (இது வேறுபடும்)

Default Gateway: 192.168.0.1 (இது வேறுபடும்)

Preferred DNS Server: 192.168.0.1 (இது வேறுபடும்)


இரண்டாவது கணனியிலும் கீழே உள்ளவாறு ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள் (இதற்கும் மேலுள்ள முறையைப் பின்பற்றுக).

IP Address: 192.168.0.2

Subnet Mask: 255.255.255.0

Default Gateway: 192.168.0.1

Preferred DNS Server: 192.168.0.1