Friday, December 31, 2010

New Year (2011) Wishes




வரலாற்றில் இன்று: டிசெம்பர் 31

1695: இங்கிலாந்தில் வீட்டு ஜன்னல்களுக்கு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
1857: ஒட்டோவாவை கனடாவின் தலைநகராக விக்டோரியா மகாராணியார் தெரிவுசெய்தார்.
1963: மத்திய ஆபிரிக்க குடியரசானது ஸாம்பியா, மாலாவி, ரொடிசியா ஆகிய நாடுகளாக பிரிந்தது.
1986: பியூர்ட்டோ ரிக்கோவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 97 பேர் பலி.
1991: சோவியத் யூனியனின்  அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.
1992: செக்கஸ்லோவாக்கியா நாடானது செக் குடியரசு, ஸ்லோவாக்கியா என இரு நாடுகளாக பிரிந்தது.
1999: ரஷ்ய ஜனாதிபதி பதவியிலிருந்து பொரிஸ் யெல்ட்சின் இராஜினாமா செய்தார். பிரதமர் விளாடிமிர் புட்டின் பதில் பிரதமராக பதவியேற்றார்.
1999: சிறையிலிருந்த 3 தீவிரவாதிகளை இந்திய அரசாங்கம் விடுவித்ததையடுத்து, இந்தியாவிலிருந்து  ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்தியன் எயார்லைன்ஸ் விமானத்தையும் 155 பயணிகளையும் ஹர்கத் உல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.
1999: பனாமா கால்வாயை பனாமா அரசாங்கத்திடம் அமெரிக்கா ஒப்படைத்தது.
2004: அக்காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கிய தாய்பே 101 கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 30

1903: சிகாகோ நகரில் அரங்கமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 600 பேர் பலி.

1922: சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப்பட்டது. 22,402,200 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட மிகப்பெரிய நாடாக அது விளங்கியது.
1943: அந்தமானின் போர்ட் பிளெயர் நகரில் இந்திய சுதந்திரக்கொடியை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஏற்றினார்.

1965: பிலிப்பைன்ஸில் பேர்டினன்ட் மார்கோஸ் ஜனாதிபதியானார்.

1993: இஸ்ரேலும் வத்திகானும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தன.

1996: இந்தியாவின் அஸாம் மாநில ரயில் குண்டுவெடிப்பில 26 பேர் பலி.

1997: அல்ஜீரியாவில் கிளர்ச்சியின் காரணமாக 400 பேர் பலி.

2004: ஆர்ஜென்டீனாவின் புவனேர்ஸ் அயர்ஸ் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் 194 பேர் பலி.

2006: மட்ரிட் நகரில் சர்வதேச விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு.
2006: ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் 148 ஷியா இனத்தவர்களை கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுதூக்கிலிடப்பட்டார்.

வீடியோக்களை சேமித்துக்கொள்ள (Videos Backup)


இணையதளங்களிலிருந்து நீங்கள் விரும்பும் வீடியோக்களை தறவிறக்கம் செய்து அதனை சேமித்து வைத்துக்கொள்ள ஒரு சிறந்த தளம் Save tube. இப்பக்கத்திற்கு சென்று நீங்கள் சேமிக்க விரும்பும் வீடியோவின் URL முகவரியை Copy பண்ணி அதனை இங்கே video to save எனும் பாக்ஸ்ஸிற்குள் Paste செய்து விட்டு Go எனும் பட்டனை கிளிக் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.



Download:-http://www.savetube.com/

டுவிட்டரிலிருந்து தானாக பேஸ்புக்கில் Update செய்ய ஒரு Application



Update facebook status via twitterஇணைய உலகில் டுவிட்டரும் பேஸ்புக்கும் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. இவற்றின் வளர்ச்சி பல நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் பிரபலமாக உதவுகிறது. வலைத்தளம் வைத்திருப்போருக்கும் பதிவுகளை கொண்டு போய் சேர்ப்பதில் இவைகளுக்கும் பங்குள்ளது. பதிவுகளின் சுருக்கத்தையும் இணைப்பையும் மட்டும் டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் போட்டுவிட்டால் நமது நண்பர்கள் மற்றும் பேஸ்புக் பக்கத்தை பார்வையிடுபவர்கள் உடனடியாக நமது தளத்திற்கு வருவார்கள்.


நாம் பிளாக்கரில் பதிவிட்டதும் டுவிட்டரில் தனியே, பேஸ்புக்கில் தனியே நுழைந்து பதிவைப்பற்றிய குறிப்பைச்சேர்ப்போம். பின்னர் தான் இவைகளின் Status இல் பதிவைப்பற்றிய குறிப்பு தெரியும். ஆனால் இந்த மாதிரி செய்வது நேரமில்லாதவர்களுக்கு சிரமமான வேலையாக இருக்கும்.

ஏற்கனவே எழுதிய பதிவொன்றில் டுவிட்டரில் நுழையாமலே பதிவிட்டதும் தானாகவே பதிவின் சுருக்கம் அப்டேட் ஆகும் என்பதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதைப்போல பேஸ்புக்கிலும் நுழையாமல் தானாகவே Status இல் பதிவின் சுருக்கம் அப்டேட் ஆக என்ன வழி என்று தேடினேன். அப்போது தான் பேஸ்புக்கிலேயே இதற்கு ஒரு பயன்பாடு ( Application ) உள்ளது என்று அறிந்தேன்.

இந்த பயன்பாடு டுவிட்டரை பேஸ்புக்கில் இணைக்கிறது. நீங்கள் டுவிட்டரில் இடும் அத்தனை கருத்துகளும் வேறு செய்திகளும் பேஸ்புக்கில் தானாகவே அப்டேட் செய்யப்படும். இதனால் நீங்கள் தனித்தனியே இரண்டிலும் நுழைந்து நேரத்தை வீணாக்கத்தேவையில்லை.

1. முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் கணக்கில் நுழைந்துகொள்ளவும்.
பின்னர் இந்த இணைப்பை கிளிக் செய்து பேஸ்புக்கின் டுவிட்டர் செயலிக்கு செல்லவும்.
http://apps.facebook.com/twitter/

Update facebook status via twitter
2. பின்னர் உங்கள் டுவிட்டர் கணக்கிற்கான பயனர் பெயர், கடவுச்சொல்லை கொடுத்து Allow என்பதை கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் உங்கள் டுவிட்டரின் புகைப்படமும் பேஸ்புக்கின் புகைப்படமும் அருகருகே காட்டப்படும். App Permissions பகுதியில் Allow Twitter to post updates to Facebook Profile என்பதில் டிக் செய்து கொள்ளவும்.

Update facebook status via twitter
3. இனிமேல் நீங்கள் டுவிட்டரில் செய்திகளை, தகவல்களைக் குறிப்பிட்டால் தானாகவே பேஸ்புக்கில் தெரியும்.