Monday, December 20, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 19

 1907: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தால் 239 பேர் பலி.
1932: பிபிசி உலக சேவை ஆரம்பம்.

1941: அடோல்வ் ஹிட்லர், ஜேர்மன் இராணுவத்தின் படைத் தளபதியானார்.

1983: 1930 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்ட சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA) அசல் உலகக்கிண்ணம் பிரேஸில் கால்பந்தாட்டச் சங்க தலைமையகத்திலிருந்து திருடப்பட்டது.

1984: ஹொங்கொங்கை 1997 ஆம் ஆண்டில் சீனாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவும் பிரிட்டனும் கையெழுத்திட்டன.
1997: இந்தோனேஷிய விமானமொன்று நதியொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதால் 104 பேர் பலி.

1998: வெள்ளை மாளிகையில் பணியாற்றிய பெண்ணான மோனிகா லெவின்ஸிகியுடனான பாலியல் உறவு தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்(காணொளி இணைப்பு)

  சந்திரன் படிபடியாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, அதற்கு மேலும் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு மேற்கொண்டதாகவும் அங்குள்ள சிறிய எரிமலைகள், மற்றும் செங்குத்தான குன்றுகள் மற்றும் பாறைகளாலும் இது போன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சந்திரன் குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது.

 

மதுபான சாலையில் அலையும் பேய் (காணொளி இணைப்பு)

  பிரித்தானிய மதுபான சாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்று பலரிடையே பீதியை கிளப்பியுள்ளது.
அந்த மதுமானசாலையின் பாதுகாப்பு கமராவில் வெள்ளை நிற ஆவி போன்றதொரு உருவம் பதிவாகியிருந்தமையே அதற்கான காரணமாகும்.

மேற்படி காணொளி தற்போது உலகம் பூராகவும் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
சம்பவ இடமானது இதற்கு முன்னர் ஒரு மலர்ச்சாலையென்ற தகவலும் பீதியை இரட்டிப்பாக்கியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த இதன் உரிமையாளர், தனது செல்லப்பிராணியான நாய் இங்கு நுழையும் போது அதிக பயம் கொள்வதாக தெரிவிக்கின்றார்.

இது போன்ற அனுபவத்தினை மதுபான சாலைக்கு அண்மையில் உள்ள அயலவர்களும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜிமெயில் 'ப்ரயோரட்டி இன்பொக்ஸ்'

  கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) என்பது பிரபல மின்னஞ்சல் சேவை. பல்வேறு நவீன வசதிகளை தமது பாவனையாளர்களுக்கு கூகுள் வழங்கி வருகிறது.

தற்போது கூகுள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்குப் புதியதொரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதியானது ' ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' என அழைக்கப்படுகின்றது.
இது பாவனையாளர் ஒருவர் பெற்றுக் கொள்ளும் மின்னஞ்சல்களை அதன் முக்கியத்துவ அடிப்படையில் வேறுபடுத்துவதாகும்..

இதன் போது பாவனையாளரின் இன்பொக்ஸ் 3 பிரிவுகளாக பிரிக்கப்படும்.

முக்கியமான மின்னஞ்சல்கள் 'இம்போர்ட்டன்ட் அண்ட் அன்ரெட்' பிரிவுக்குள் உள்ளடக்கப்படும். மற்றைய மின்னஞ்சல்கள் அடுத்தடுத்த பிரிவுகளுக்குள் சேர்க்கப்படும்.

இம்மின்னஞ்சல்களை வேறுபடுத்துவதற்காக ஜிமெயில் சில விசேட சமிக்ஞைகளை உபயோகப்படுத்துகின்றது.

நாம் அதிகமாக எவரிடமிருந்து மின்னஞ்சல்களினை பெறுகின்றோம் மற்றும் பதிலளிக்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தொழிற்பாடு நடைபெறுகின்றது.

மேலும் மின்னஞ்சல் கணக்கில் காணப்படும் '+' பட்டன் மூலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களையும் ' - ' பட்டன் மூலம் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவற்றையும் குறிப்பிட்டுக் கொள்வதன் மூலமும் மின்னஞ்சல்களை வேறுபடுத்திக் கொள்ளலாம்.

கூகுள் நிறுவனமானது கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாகத் தனது ஜிமெயில் பாவனையாளருக்கு அறிமுகப்படுத்திவரும் 3ஆவது நவீன வசதி இதுவாகும்.

தொடர்புகளை நிர்வகிக்கும் ( கொன்டாக்ட் வசதி) வசதி, அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி என்பனவே அவையாகும்.

ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக்

  பேஸ்புக் மற்றும் ஸ்கைப் இணைவு தொடர்பான செய்தியை உத்தியோகபற்றற்ற நிலையில் வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப்' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.

இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்

மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ் ( Comments) செய்யவும் முடியும்.

இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.


ஸ்கைப் 5.0 தொடர்பான காணொளி

விண்டோஸ் 8 தொகுப்பு 2012 இல்

  விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.

அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.

மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.

மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எல்ஜியின் உலகின் முதலாவது டுவல்-கோர் புரசெஸர் ஸ்மார்ட்போன்: X2

  உலகின் முதலாவது டுவல்-கோர் (Dual-core) புரசெஸரைக் கொண்ட அதிவேக கையடக்கத்தொலைபேசியினை எல்.ஜி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஒப்டிமஸ் எக்ஸ் 2 (Optimus X2) எனப்பெயரிடப்பட்டுள்ளது.
சந்தையிலுள்ள மற்றைய ஸ்மார்ட் போன்களை விட இது வேகமானதென எல்.ஜி உத்தரவாதமளித்துள்ளது.

இதில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ட்ரோயிட் புரோயோ 2.2 இயக்குதளத்தின் மூலம் இக் கையடக்கத் தொலைபேசிகள் இயங்கவுள்ளன. எனினும் பின்னர் ஜிஞ்ஜர் பிரட் 2.3 இற்கு மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.
மற்றும் வேகமான இணையவசதி, 8 மெகா பிக்ஸல் கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கான 1.3 மெகாபிக்ஸல் முன் கெமாரா 32 ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய மெமரி, 8 ஜிபி உள்ளக மெமரி என்பனவற்றையும் இது கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியானது அடுத்தமாதம் கொரியாவில் விற்பனைக்குவரவுள்ளது.