Thursday, December 16, 2010

பிரான்ஸ் நாட்டின் ஹென்றி IV மன்னரின் தலை 400 ஆண்டுகளின் பின் கண்டுபிடிப்பு

பிரான்ஸ் நாட்டில் 1610 ஆண்டு கொலை செய்யப்பட்ட ஹென்றி IV மன்னரின் தலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அந்தத் தலை இதுவரை காலமும் பதனிட்டு வைக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 9 மாதகால ஆராய்ச்சியின் பின்னர் இத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.


400 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதற்கென மரபணு சோதனை, அங்க அடையாளங்கள் மற்றும் மானிடவியல், தடவியல், கதிர்த்தாக்கம் உட்பட நோய்கள் தொடர்பான ஆய்வு ஆகியவற்றை துல்லியமாக மேற்கொண்டுள்ளனர்.


குறிப்பாக மூக்கில் காணப்பட்ட ஓர் அடையாளம் மற்றும் காதில் தோடு அணியப்பட்டமைக்கான அடையாளம், கொலை முயற்சி ஒன்றின் போது முகத்தில் ஏற்பட்ட காயம் ஆகியவை இவற்றில் முக்கியமானவையாகும்.

ஹென்றி IV

ஹென்றி ஐஏ மன்னர் அக்காலத்தில் மிகவும் புகழ்பூத்த நல்லாட்சி புரிந்த மன்னர்களில் ஒருவராவார். இவரது கம்பீர தோற்றம் காரணமாகவும் பெண்களால் அதிகம் நேசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர் 1610 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பாரிஸில் வைத்து பிரன்கொயிஸ் ரவ்யிலக் என்பவரால் கொலைசெய்யப்பட்டார்.

இவரது தலை மாத்திரம் 1793 ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது காணமல் போனபோதும் புரட்சியின் போது போராட்டக்காரர்களால் இவரது தலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்தத் தலை பலரிடம் கைமாறியதாகக் கூறப்பட்டது.

எனினும் 400 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 15

1914: ஜப்பானில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட காஸ் வெடிப்புச் சம்பவத்தால் 687 பேர் பலி.

1967: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் பாலமொன்று உடைந்ததால் 46 பேர் பலி.

1970: தென்கொரிய கப்பல் கொரிய நீரிணையில் கவிழ்ந்ததால் 308 பேர் பலி.

1973: அமெரிக்க உளவியல் மருத்துவர்கள் சங்கம் ஓரினச் சேர்க்கையை உளவியல் நோய் பட்டியலிலிருந்து நீக்கியது.

1974: எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக பிரிட்டனில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1978: மக்கள் சீனக்குடியரசை அமெரிக்கா அங்கீகரிக்கும் எனவும் தாய்வானுடனான தொடர்புகளை துண்டிக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

2005: சர்வதேச நாணய நிதியத்திற்கான தனது கடனை ஆர்ஜென்டீனா முன்கூட்டியே செலுத்தும் என ஆர்ஜென்டீன ஜனாதிபதி நெஸ்டர் கேர்ச்னர் அறிவித்தார்.

2009: போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொண்டது.

10 தலை நாகமும் பறைசாற்றிய உண்மையும்


அண்மைக்காலத்தில் அதிகம் பேசப்பட்ட விடயம் 10 தலை நாகபாம்பு பற்றியது. வன்னிப் பகுதியில் இந்த 10 தலை நாகம் தென்பட்டதாக கூறி சில ஊடகங்களும் உண்மை நிலையை அறியாமல் செய்தியை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியிருந்தன.

இந்த 10 தலை நாகத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்னர் இணையத்தளங்களில் உலாவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எந்தவொரு செய்தியையும் ஆராய்ந்து அறியாமல் முறையற்ற தனமாக மக்கள் மத்தியில் போலிகளை பரப்புவதால் ஏமாற்றப்படுபவர்கள் வாசகர்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.இந்நிலையில் 10 தலை நாகம் என போலியாக சித்திரிக்கப்பட்ட, உண்மையான 'ஒரு தலை' நாகத்தின் புகைப்படமும் இப்போது இணையத்தில் வெளிவந்திருக்கிறது. ஒரு தலை நாகத்தின் புகைப்படத்திற்கு 10 தலை கொடுத்தவர்கள் கணினி விற்பன்னர்களே...!

ஏமாற்றமடைந்த வாசகர்களுக்கு உண்மைநிலை புரியவேண்டும் என்பதற்காக 10 தலை நாகத்தின் 'கிரபிக்ஸ்' விளையாட்டை இங்கே பிரசுரிகின்றேன் . இப்படத்தில் ஒரு தலை நாகத்தின் பின்னால் அதனுடைய நிழல் அப்படியே இருக்கும். அதே படத்தை 10 தலைகளாக மாற்றியபோதும் அதே ஒரு தலை நாகத்தின் நிழல் தென்படுவதை வாசகர்களின் கவனித்திற்காக விடுகின்றேன்  (நன்றி: பேஸ்புக் நண்பர்கள்)