Saturday, January 15, 2011

ஐ-போன் 4ல் காணப்படும் குறைபாடு கண்டுபிடிப்பு

அப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ-போன் 4ல்(iphone4) குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட consumer union எனும் அமைப்பு தனது consumer report எனும் சஞ்சிகையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால் புதிய ஐ-போன் 4 ன் இடது பக்க கீழ் மூலையில் காணப்படும் ஒரு சிறிய இடைவெளியில்(antenna gap) நமது கைவிரல் தற்செயலாக தொடுமிடத்து எமக்கு வரும் தொலைபேசி அழைப்பில் தடங்கள் ஏற்படலாம் எனவும் சமிஞ்ஞை அளவு சடுதியாக மிகப்பெரியளவில் குறைவடைவதே இதற்கு காரணமாகும் என தெரிவித்துள்ளது.
 

இதற்கான தீரவையும் இந்த நிறுவனம் தர மறக்கவில்லை. ஐ-போனில்(iphone 4) காணப்படும் அந்த சிறிய அண்டென்னா இடைவெளியை ஒரு சிறிய duct tape துண்டினைக்கொண்டு மறைத்துவிடுவதன் மூலம் இந்த குறைபாட்டினை தீர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் இன்று: ஜனவரி 15

1559: பிரிட்டனில் முதலாம் எலிஸபெத் மகாராணியாருக்கு முடிசூட்டபட்டது.
1759: பிரித்தானிய நூதனசாலை திறக்கப்பட்டது.

1889: அமெரிக்காவில் கொகாகோலா கம்பனி கூட்டிணைக்கப்பட்டது.

1982: கூடைப்பந்தாட்டத்திற்கான விதிகளை ஜேம்ஸ் நைஸ்மித் என்பவர் வெளியிட்டார்.

1943: உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமான பென்டகன் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் திறக்கப்பட்டது.

1966: நைஜீரியாவில் இராணுவப் புரட்சியின் மூலம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

1970: நைஜீரியாவில் பயாப்ரா பிராந்தியத்திற்கு சுதந்திரம் கோரி 30 மாதங்களாக போராடிய போராளிகள் சரணடைந்தனர்.

1970: லிபியாவில் கேணல் முவம்மர் கடாபி பிரதமராக பதவியேற்றார்.

1973: அமெரிக்க ஜனாபதிபதி ரிச்சர்ட் நிக்ஸன், வியட்நாமில் யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவித்தார்.
1977: சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

1991: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேறுவதற்கு ஐ.நா. விதித்திருந்த காலக்கெடு முடிவுற்றது.

1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த ஸ்லோவேனியா, குரோஷியாவின் சுதந்திரத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது.

2001: இணைய கலைக்களஞ்சியமான விக்கிபீடியா அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
2009: யூ.எஸ். ஏயார்வேஸ் விமானமொன்று கோளாறுக்குள்ளானதால் அதை ஹட்சன் நதியில் விமானி தரையிறக்கினார். பயணிகள், ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

ஆப்பிளின் ஐபேட் (IPAD) விரிவான அறிமுகம்

தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டுபண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான்.

இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.
ஐபோன் வருவதற்கு முன்பு மொபைல் சந்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தொடுதிரை மொபைல் என்பது கனவுதான். ஆனால் ஐபோன் வந்த பின்பு எத்தனை நிறுவனங்கள் வகை வகையான தொடுதிரை மொபைல்களை போட்டு தாக்கி வருகின்றன. மொபைல் போன் சந்தையில் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியது ஐபோன் என்றால் அது மிகையாகாது.  ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துவது அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப் படுகிறது.


மடிக்கணினிக்கும், மொபைல் போன்களுக்கும் இடையில் எளிதாக எங்கும் எடுத்து செல்லும் எளிமையுடன் நெட்புக் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் சிறிய திரைகளுடன் கூடிய நெட்புக் கணினிகளை வெளியிடத் துவங்கி உள்ளன.

கூகிள் நிறுவனமும் தனது புதிய இயங்குதளமான குரோம் ஓஎஸ் ஆரம்பத்தில் நெட்புக் கணினிகளுக்காகத்தான் வெளியிடுகிறது. இவை நேட்புக் கணினிகளுக்கான சந்தை எதிர்காலத்தில் அதிகம் இருப்பதை உணர்த்துகிறது.

இந்த சந்தையையும் தனது வித்தியாசமான தயாரிப்பு மூலம் கலக்கப் போகிறது ஆப்பிள். நேற்று (ஜனவரி 27, 2010) ஐபேட் (IPad) எனும் தனது புதிய தயாரிப்பை உலகுக்கு தந்துள்ளது.  தோற்றத்தில் பெரிய ஐபோன் போன்று இருக்கும் ஐபேட் 9.5 இன்ச் தொடுதிரையுடன் வருகிறது. இது Wi-Fi, Wi-Fi + 3G என்று இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

அரை அங்குல தடிமனுடன், .68 kg எடையுடன் வரும் ஐபேட்தில் இணையத்தில் உலவுதல், இசை கேட்டல், வீடியோ பார்த்தல், ஈபுக் (Ebook) வாசித்தல் போன்ற வேலைகளை எளிமையாக செய்து கொள்ள முடியும். தொடுதிரை உள்ளதால் மற்ற கணினிகளை உபயோகிப்பதை விட ஐபேட்டை உபயோகிப்பது மிகவும் எளிது.

ஐபேட் இயங்குதளம், ஐபோனின் இயங்குதளத்தை ஒத்ததாகவே உள்ளது. செயல்முறைகள் பெரும்பாலும் ஐபோனே போன்றே உள்ளன. இது ஆப்பிளின் 1Ghz பிராசசரில் இயங்குகிறது. இதன் முழுமையான தொழிநுட்ப விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள  இதன் பயன்பாடுகள் குறித்து வீடியோவை பாருங்கள்.




இந்த ஐபேட் மக்களை எந்த அளவு கவரும்?  கவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எடை குறைவு. எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்து செல்ல முடியும். தொடுதிரை. எளிதில் உபயோகிக்கலாம். மடியில் வைத்துக்கொண்டு புத்தகம் போல வாசித்து கொள்ளலாம். காலத்தின் வளர்ச்சியில் பெரும்பாலான மாணவர்கள் கையில் சிலேட் போன்று ஐபேட் மாதிரியான சாதனங்கள் உட்காரும் காலம் வரலாம்.

ஐபேட்டில் உள்ள குறைகளை பார்க்கலாமே. மல்டிடாஸ்கிங் (Multitaking) கிடையாது. ஒரே நேரத்தில் பல செயலிகளில் (Application) வேலை செய்ய இயலாது. வெப்கேம் இல்லாததால் வீடியோ சாட்டின் செய்ய இயலாது. 3G மாடலாக வந்தாலும் அதை நீங்கள் இணைய இணைப்புக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியுமே தரவிற போன் அழைப்புகள் (Phone Calls), குறுஞ்செய்தி (SMS) சேவை முதலியவற்றை பயன்படுத்த இயலாது.

நேரடியாக USB க்களை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது, அதற்கென தனியே அடாப்டர் தேவைப்படும். Flash சப்போர்ட் கிடையாது. இணையதளங்களில் உள்ள பிளாஷ் பகுதிகள் தெரியாது. புரியும்படி கூற வேண்டும் என்றால் இணையப்பக்கங்களில் உள்ள Flash வீடியோக்களை பார்க்க இயலாது. 16GB, 32GB, 64GB போன்ற அளவுகளில் கிடைக்கிறது. இருந்தாலும் நீங்கள் தனியே மெமரி கார்ட் வாங்கி இதனை மேம்படுத்தி (Upgrade) கொள்ள முடியாது.

ஐபேட்டின் இயங்குதளம் ஐபோன் போன்று கட்டுப்பாடுகளை உடையது. அவற்றிற்கு யார் புதிய செயலிகளை வெளியிட்டாலும் ஆப்பிள் அனுமதித்தால் மட்டுமே அவற்றை ஐபேட்டில் பயன்படுத்த முடியும். ஐபோனுக்கான கூகுளின் அருமையான பல செயலிகளை (Applications) ஆப்பிள் மட்டுறுத்தியிருக்கிறது.

எனவே ஆப்பிள் என்ன தருகிறார்களோ அவற்றை தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற கணினிகள் போன்று பிறர் செயலிகளை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது. உதாரணத்திற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word), பயர்பாக்ஸ் விரும்புபவர் என்றால் அதனை ஐபேட்டில் உபயோகிப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

விலையைப் பொறுத்தவரை மிகவும் அதிகம் இல்லை. Wifi மாடல் 499 டாலரில் இருந்தும், 3G+Wifi மாடல் 629 டாலரில் இருந்தும் கிடைக்கிறது. ஐபோன்களின் அறிமுக விலையை ஒப்பிடும் போது ஐபேட்டின் விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

மொத்தத்தில் ஆப்பிளின் ஐபேட் புதுமையான, கவர்ச்சிகரமான தயாரிப்பாக வந்துள்ளது. ஆனால் சூப்பர் என்று கொண்டாடுவதற்கு குறைகள் இன்றி இல்லை. இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்தால் நாம் கூறிய குறைகள் அற்ற ஐபேட் போன்ற புதிய தயாரிப்புகள் கூகிள், நோக்கியா போன்ற நிறுவனங்களிடம் இருந்து வரலாம்.  அதற்குள் ஐபேட் சந்தையை ஆக்ரமித்து கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது.

விண்டோஸ் 7 அற்புத வசதிகள்


விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட்  (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில்  “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால்,Start  மெனு சென்று  My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில்,  Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும்.

இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

Password இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்நுழையலாம்.

எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

மென் பொருளை தரவிறக்கம செய்ய