Saturday, January 22, 2011

வரலாற்றில் இன்று: ஜனவரி 21

1789: அமெரிக்காவின் முதலாவது நாவல் பொஸ்டன் நகரில் அச்சிடப்பட்டது.
1793: பிரான்ஸின் 16 ஆம் லூயி மன்னன் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிரச்சேதம்
செய்யப்பட்டார்.

1899: ஒபெல் நிறுவனம் தனது வாகன உற்பத்தியை ஆரம்பித்தது.

1908: நியூயோர்க் நகரில் பெண்கள் பொது இடத்தில் புகைபிடிப்பதை தடைசெய்யப்பட்டது.

1911: முதலாவது மொன்டே கார்லோ பந்தயம் நடைபெற்றது.

1921: இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1960: ஜமைக்கா விமான விபத்தில் 37 பேர் பலியாகினர்.

1981: ஈரானில் அமெரிக்கத் தூதரகத்தில் 444 தினங்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

1999: அமெரிக்க கரையோரக் காவல் படையினர் 4300 கிலோகிரோம் கொகேய்ன் போதைப் பொருளை கைப்பற்றினர்.

No comments:

Post a Comment