Wednesday, December 15, 2010

வருகிறது ஐ போன் 4

அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனமே ஐபோனையும் அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும். மேல் நாடுகளில், வெளியான பின், இந்தியாவிலும் விற்பனைக்கு இது செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

1.வடிவம்:
புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது.
போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம்.

2. மைக்ரோசிம்:
இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம்.

3.டிஸ்பிளே:
ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை‘Retina Display’ என அழைக்கின்றனர்.
இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

4. கேமரா:
இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.

5.சிப்:
ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது.

6. கூடுதல் உதிரி வசதிகள்:
பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது.
இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம்.
தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது.
இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர்.

No comments:

Post a Comment