Tuesday, December 21, 2010

கூகிள் தேடுபொறியில் புகுத்தப்பட்டிருக்கும் புதிய பாதுகாப்பு கருவி

கூகிள் தனது தேடு பொறியில் பல வசதிகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பது உலகறிந்த விடயம். அந்த வரிசையில் கூகிள் தேடலில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய வசதியினைக் கொண்டு பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான இணைய தளங்களை அறிய முடியும்.

ஏதேனும் ஒரு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது அந்த இணைய தளமானது ஸ்பாம் களை கொண்டிருந்தாலோ அது தொடர்பான அறிவித்தலானது கூகிள் தேடல் முடிவில் “This site may be compromised.” எனும் அறிவித்தல் தோற்றுவிக்கப்படும். இந்த அறிவித்தல் மூலம் நாம் குறித்த இணைய தளத்திற்கு செல்வதா இல்லையா எனும் தீர்மானத்தை இலகுவில் எடுத்துக் கொள்ளலாம்.

 எனவே நீங்கள் இணைய தளங்களை கூகிளில் தேடும் போது இந்த பாதுகாப்பு அறிவித்தல் இருக்கிறதா என பார்த்துவிட்டு அந்த இணைய தளத்தினை பார்வையிடுங்கள்.

No comments:

Post a Comment