Wednesday, January 5, 2011

Pen Drive ல் இருக்கின்ற ஆவணங்கள் இல்லை என காட்டினால் என்ன செய்வது?

நீங்கள் வைரஸ்கள் நிறைய உள்ள பென்ரைவினை சுத்தமாக்கும் போது அல்லது உங்கள் பென் டிரைவினை கணினியில் செலுத்தியதும் சில வேளைகளில் ஒன்றும் இல்லாத Icons களாகவெ காணப்படும். பென் டிரை வடிவிலான Icons காணப்படும் இப்படி இந்த Icons களை திறந்து பார்த்தால் உள்ளெ ஒன்றும் இருக்காது.

பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் Icons களாக மாறிவிடுகின்றன. அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை. தற்போதைக்கு காட்டும் போது Icon னாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?

1. Start - > Run
செல்லவும்
2.
அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3.
பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
Enter  தட்டவும்.

attrib -h -r -s /s /d X:\*.*
இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.
4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.

இறுதியாக உங்கள் கணிணியை சிறந்த Malware 
மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்

No comments:

Post a Comment