Thursday, January 6, 2011

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!


வரலாற்று ஆசிரியர்களையும், தொல்லியல் நிபுணர்களையும் இன்று வரை வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருப்பவை, எகிப்தில் உள்ள பிரமாண்ட பிரமிடுகள். இவற்றை ஒட்டியுள்ள `ஸ்பிங்க்ஸ்’ (சிங்கத்தின் உடலும், மனிதத் தலையும் கொண்ட மகா உருவம்) போன்ற அமைப்புகளும் ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்க்க வைக்கின்றன.

`கிஸா’ பிரமிடு பகுதியில் கட்டப்பட்ட 3 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான ஒரு மண் சுவரை தற்போது தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்தச் சுவர், கிஸா பிரமிடையும், கிரெட் ஸ்பிங்ஸையும் மணல் வீச்சில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கட்டப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்து. இரண்டு பகுதிகளாகக் காணப்படும் அந்தச் சுவர், நான்காம் துட்மோஸ் அரசர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


கி.மு. 14-ம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட 8-வது பாரோ மன்னர் அவர். சுவரின் இரண்டு பகுதிகளும் சுமார் மூன்றடி உயரம் இருக்கின்றன. ஒரு பகுதி, வடக்கு- தெற்கு திசையில் 86 மீட்டர்கள் நளமும், மற்றொரு பகுதி கிழக்கு- மேற்கு திசையில் 46 மீட்டர்கள் நீளமும் இருக்கின்றன. இங்கு இதுபோல மறைந்து கிடக்கும் மேலும் பல ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வில் தொல்லியல் நிபுணர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment