Thursday, December 9, 2010

பேஸ்புக்கில் படங்களுக்கு பதிலாக கார்டூன்! மாறி வரும் மக்களின் மனநிலை

பேஸ்புக் பாவனையாளர்கள் தமது புகைப்படங்களுக்கு பதிலாக கார்டூன் கேலிச்சித்திரங்களைப் பாவிப்பது அதிகரித்து வருகின்றது.
இவ்வருட நவம்பர் மாத நடுப்பகுதி முதல் இந்தப் போக்கு அதிகரித்துவருவதாக அமெரிக்க இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் கிரேக்கத்திலும், சைப்பிரஸிலும் உருவான இந்தப்பழக்கம் காலப்போக்கில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் இணையத்தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது.
இந்த மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தி மேற்படி தகவலை வெளியிட்டுள்ள இணையத்தளம் இதை சிறுவர் வன்முறைக்கு எதிரான பிரசாரமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ”உங்கள் பேஸ்புக் புகைப்படத்தை உங்களுக்குப் பிடித்த கார்டூன் புகைப்படமாக மாற்றுங்கள். 06 டிசம்பர் 2010 க்குள் இவற்றை மாற்றுமாறு உங்கள் நண்பர்களுக்கும் அழைப்புவிடுங்கள். அதன்பிறகு பேஸ்புக்கில் மனித முகங்களே இருக்கக் கூடாது. ஞாபகங்களின் ஊடுருவல் தான் அங்கு இருக்க வேண்டும்.

 இது சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான ஒரு பிரசாரமாக அமையட்டும்” என்று மேற்படி இணையத்தளம் அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment