Tuesday, January 11, 2011

வரலாற்றில் இன்று: ஜனவரி 10

1806: தென்னாபிரிக்காவின் கேப் டவுனிலிருந்த டச்சு குடியேற்றவாசிகள் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தனர்.

1810: நெப்போலியன் முதல் மனைவி ஜோசப்பினை விவாகரத்து செய்தார்.

1863: உலகின் மிகப்பழைய பாதாள ரயில் பாதையான லண்டன் பாதாள ரயில்பாதை திறக்கப்பட்டது.
1920 : வேர்செய்ல்ஸ் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் முதலாம் உலக யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவு.

1946: ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் முதல் தடவையாக லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர்  அரங்கில் நடைபெற்றது. 51 நாடுகள் பங்குபற்றின.

1972: பாகிஸ்தானில் 9 மாதங்கள் சிறையிலிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் ஜனாதிபதியாக தாயகம் திரும்பினார்.

1984: அமெரிக்காவுக்கும் வத்திகானுக்கும் இடையில் 117 ஆண்டுகளின்பின் முழுமையான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
 

No comments:

Post a Comment