Thursday, February 17, 2011

பேஸ்புக் பட்டனுடன் எச்.டி.சியின் சா சா மற்றும் சல்சா




பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை சா சா (Cha Cha) மற்றும் சல்சா (Salsa) என பெயரிடப்பட்டுள்ளன.

மேற்படி கையடக்கத்தொலைபேசிகள் ஊடாக பாவனையாளர்கள் மிக இலகுவாக பேஸ்புக்கினை உபயோகிக்க முடியும்.

பார்சலோனாவில் நடைபெற்றுவரும் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்விலேயே இவை காட்சிக்கு வைக்கப்பட்டன.கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பிலான வதந்திகள் நிலவி வந்த நிலையிலேயே இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கையடக்கத் தொலைபேசிகள் இரண்டுமே கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவை.கடந்த இரண்டு வருடங்களாக இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக பேஸ்புக் பாவிப்போரின் வீதம் தொடர்ச்சியாக அதிகரிப்பதனை கருத்தில் கொண்டே இவை தயாரிக்கப்பட்டுள்ளன.வரும் நாட்களில் மற்றைய நிறுவனங்களும் இத்தகைய கையடக்கத் தொலைபேசி உற்பத்தியில் இறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Wednesday, February 16, 2011

Etisalat வலையமைப்பு மூலம் ஸ்கைப் நண்பர்களை அழையுங்கள்

இலங்கை கையடக்க தொலைபேசி வழங்குனர்களில் ஒன்றான எடிசலாட்(Etisalat) நிறுவனம் தற்போது புதிய சேவை ஒன்றினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் பாவனையாளர்களினை எடிசலாட் மூலம் இணைக்கும் சேவையே இது.

skypebanner

உலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் நண்பர்களுக்கு 3 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் எடிசலாட்டின் இந்த புதிய சேவையின் மூலம் அழைப்பினை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அழைப்பினை மேற்கொள்ள உங்கள் எடிசலாட் தொலைபேசியினூடாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியவரின் ஸ்கைப் பெயரினை 4545  எனும் இலக்கத்திற்கு SMS செய்தால் போதும்.

அவ்வாறு SMS இனை அனுப்பியதன் பின்னர் எமக்கு வழங்கப்படும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு 3 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் உங்கல் ஸ்கைப் நண்பர்களுடன் பேசலாம்.

இவ்வாறு நீங்கள் அழைப்பினை மேற்கொள்ள வேண்டுமாயின் குறித்த அந்த ஸ்கைப் பாவனையாளர் etisalatlk எனும் பெயரினை தனது contact list ல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது ஸ்கைப் அப்ளிகேசனில் காணப்படும் Privacy settings எனும் பகுதியில் Allow any one to contact me என்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

எடிசலாட் நிறுவனத்தின் இந்தச் சேவையானது மிகப் பெரும் வரவேற்பை இலங்கையில் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.

skypebanner

பயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க Firefox Booster


நாம் வலை உலவிகளைக் கொண்டு தான் இணையத்தைப் பயன்படுத்துகிறோம். வலை உலவிகளின் போட்டியில் Firefox மற்றும் Chrome ஆகிய இரண்டுமே முண்ணணியில் உள்ளன. நமது இண்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தும் சில நேரம் வலை உலவிகளில் இணையப்பக்கங்கள் மெதுவாக தோன்றச்செய்யும்.ஏன் இப்படி மெதுவாக டவுன்லோடு ஆகின்றன என்று நமக்கும் தெரியாது.

இண்டர்நெட் இணைப்பு நல்லதாக பெற்றிருந்தாலும் இணையதளங்கள் மித வேகத்தில் வருவதற்கு காரணம் இணைப்புக்கேற்றவாறு வலை உலவிகளின் அமைப்புகளை மாற்றாமல் இருப்பதே ஆகும். ஒவ்வொரு வலை உலவிகளுக்கும் தனித்தனியே அமைப்புகள் (Configurations) உள்ளடங்கியிருக்கும். இதை நாம் அறிவதில்லை. உதாரணமாக Firefox ன் அமைப்புகளைப் பார்க்க இணைய முகவரி அடிக்குமிடத்தில் About:config என்று தட்டச்சிட்டால் பயர்பாக்ஸ் வலை உலவியின் முக்கிய அமைப்புகள் நமக்குத்தெரியும்.

இவைகளை நமது இணைப்பிற்கு ஏற்றவாறு மாற்றும் போது வலை உலவியும் புரிந்து கொண்டு வேகத்தை அதிகப்படுத்தும். ஆனால் நாம் தெரியாமல் எதாவது ஒன்றின் மதிப்பை மாற்றிவிட்டால் சிக்கலாகிவிடும். அதனால் இதற்கென இருக்கும் மென்பொருள் தான் Firefox Booster.


இந்த மென்பொருளில் நாம் வைத்திருக்கும் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை குறிப்பிட்டால் போதும். நமது இணைப்பிற்கு ஏற்றவாறு பயர்பாக்ஸ் உலவியை தயார்படுத்தும்.எந்த வகையான இணைப்பு மற்றும் இணைப்பின் வேகம் போன்றவற்றை வைத்து இந்த மென்பொருள் செயல்படுகிறது.

இந்த மென்பொருளை செயல்படுத்தும் போது முக்கியமாக Firefox வலை உலவியை மூடியிருக்க வேண்டும். இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது.

தரவிறக்க முகவரி : Download Firefox Booster

Windows தொடங்கும் நேரத்தை கணக்கிட

நம்முடைய கணினி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே அளவிட முடியும். நம்முடைய கணினியில் அளவுக்கதிமான புரோகிராம்கள் நிறுவப்பட்டாலும், அல்லது கணினி வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தாலும் கணினி மெதுவாக செயல்பட தொடங்கும் இதனை நாம் கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே கணக்கிட்டு கொள்ள முடியும்.
நம்முடைய கணினியிலும் நம் நண்பருடைய கணினியிலும் ஒரே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் தான் நிறுவியிருப்போம். ஆனால் நம்முடைய கணினி தொடங்கும் நேரத்தை விட நண்பருடைய கணினி மிக விரைவாக தொடங்கும். நமக்கு ஆச்சர்யமாக இருக்கும் இதற்கு என்ன காரணம் நம்முடைய கணினியில் உள்ள வன்பொருள்களைவிட, நண்பருடைய கணினியில் இருக்கும் வன்பொருள்கள் அதிக மதிப்புடையதாக இருக்கும். ஆனால் இதற்கு இதுமட்டும் காரணமில்லை நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள், கணிப்பொறியில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும்  ஹார்ட்டிஸ்க் முறைப்படுத்தபடாமல் இருத்தல் போன்றவை ஆகும். சரி நம்முடைய கணினியை விட நம் நண்பருடைய கணினி எவ்வளவு வேகமாக தொடங்குகிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், பின் Start என்ற பொத்தானை அழுத்தவும் கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்யுமாறு ஒரு செய்தி வரும், உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும். உங்களுடைய கணினி மறுதொடக்கம் ஆனவுடன். எவ்வளவு நேரத்தில் தொடங்கியது என்ற செய்தி தோன்றும். 



குறைந்தபட்சம் 1நிமிடத்தில் கணினி தொடங்க வேண்டும். இல்லையெனில் கணிப்பொறியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு கணினி தொடங்கும் நேரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்கள் தொடங்கும் நேரத்தை எளிமையாக கணக்கிட முடியும்.

Thursday, February 10, 2011

Nokia முதல் Samsung வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.

சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்
பல முயற்சி  செய்தும்  Unlock எடுக்க முடியாமல் அருகில்
இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு  சென்று சரிசெய்து
வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

Nokia mobile phone முதல்
Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம்
Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள்
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு
கண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற
கட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code
மட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம்
ஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி
நம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது,
இந்த IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து
விட முடியாது, Unlock செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு
மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி : Download

இந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில்
நிறுவிக்கொள்ளவும். அடுத்து இந்த மென்பொருளை இயக்கி
நமக்கு எந்த மொபைல் Unlcok செய்ய வேண்டுமோ அதன்
நிறுவனத்தையும் மாடல்-ஐயும் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும்,
அடுத்து IMEI எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்று
நம் மொபைலில்  *#06#  என்று கொடுத்ததும் நம் IMEI
எண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI
என்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate
என்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை
Unlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்
இதன்படி எளிதாக நம் மொபைலை Unlock செய்யலாம்.
மொபைல் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்துக்
கொள்ள வேண்டிய மென்பொருள். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது புதிதாக
வந்திருக்கும் மொபைல் போனுக்கான Unlock code இந்த
மென்பொருளில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, February 9, 2011

Word தொகுப்பில் சில Shortcuts ( புத்தம் புதிய வழிகள் )


Alt + F10 விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது.

Alt + F5 விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.

Ctrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக்களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற்கொள்ளும்.

Shift + F2 தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.

Ctrl+ Backspace பின்புறமாக ஒரு சொல்லை அழித்திடும். ஆனால் இது காப்பி செய்யப்பட மாட்டாது.

Ctrl+W, Ctrl+F4 இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற்கேற்றபடி பைலை மூடும்.

Alt + Ctrl + S பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்டோவினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.

Ctrl + Shift + D தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் கீழாக இரு கோடுகள் இடப்படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன்படுத்தலாம்.

F5 அல்லது Ctrl+G செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவணத்தில் குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.

Ctrl+H ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைக் கண்டுபிடித்து அதற்குப் பதிலாக நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது அமைக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டும்.

Ctrl+F2 அனைத்து பக்கங்களின் அச்சு தோற்றத்தைக் காட்டும்.

Alt F, I பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆவணத்தின் பிராபர்ட்டீஸ் பார்க்க இந்த கீகளை வரிசையாக அழுத்தவும்.

Shift + F5 ஆவணத்தில் முன்பு டெக்ஸ்ட்டை செருகிய இடத்திற்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இது போல மூன்று முந்தைய இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்பின் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிடும். இது மிகவும் பயனுள்ள ஒரு ஷார்ட் கட். இதனால் ஒரு ஆவணத்தைத் திறந்திடுகையில் அதனை முன்பு பயன்படுத்துகையில் எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருந்தீர்களோ அந்த இடத்திற்கு இந்த கீகளைப் பயன்படுத்திச் சென்று விடலாம்.

Microsoft Word 2010ல் உள்ள பயனுள்ள வழிகள்



வேர்ட் 2010 தொகுப்பைப் பொறுத்தவரை, அதன் மிகச் சிறந்த அம்சமாக, அதன் வளைந்து கொடுக்கும் தன்மையினைக் கூறலாம். நம் விருப்பப்படி, பல வசதிகளை அமைத்துக் கொண்டு எளிதாகச் செயல்படலாம். இந்த வசதி, வேர்ட் 2007 தொகுப்பில் தரப்பட்ட ரிப்பன் இடைமுகத்தில் தரப்படவில்லை. இத்தொகுப்பு தரும் அந்த வசதிகளை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று இங்கு பார்க்கலாம்.

நீங்கள் என்ன செயல்பாடுகளை மேற்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இவை நகாசு வேலைகளாகவோ அல்லது செயல்பாட்டு வேலை களாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் வேர்ட் மிக விரைவாகச் செயல்பட வேண்டும் என விரும்பலாம். டூல்ஸ் மற்றும் டாகுமெண்ட் குறித்த விபரங்களை எளிதாகப் பெறும் வகையில் வைக்கலாம். உங்கள் ஆசை அல்லது விருப்பம் எதுவாக இருந்தாலும், அதனை நிறைவேற்றிக் கொள்ள வேர்ட் 2010, அதற்கான வழிகளைத் தருகிறது.

1. Quick Access Toolbar–ஐ மாற்றி அமைக்க: குயிக் அக்செஸ் டூல்பார் என்பது, சில டூல்ஸ் கொண்ட ஒரு சிறிய செட். இது வேர்ட் 2010ன் இடது மேல் மூலையில் காணப்படும். மாற்றப்படாத நிலையில் இந்த டூல்பாரில் Save, Undo, மற்றும் Repeat ஆகிய வசதிகள் காணப்படும். ஆனால், நீங்கள் Customize Quick Access Toolbar அம்புக் குறி மீது கிளிக் செய்து, கூடுதல் வசதிகளைப் பெறலாம். இந்த டூல்பாரில் கூடுதலாக ஒரு டூலைச் சேர்க்க, டூல்பார் பட்டியலில் அதன் மீது கிளிக் செய்திடவும். இன்னும் தெளிவாக இது குறித்து அறிய, More Commands என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, வேர்ட் ஆப்ஷன்ஸ் பாக்ஸில், Quick Access Toolbar Category கிடைக்கும். இதில், நீங்கள் அப்போது அமைத்துக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்டில் மட்டும் பயன்படுத்த இந்த டூல் தேவையா, அல்லது எப்போதும் தேவையா என்பதனை அமைக்க வேண்டும். மேலும் இந்த மாற்றத்தினை மற்ற கம்ப்யூட்டர்களுக்கும் எடுத்துச் செல்ல விரும்பினால், அதற்கான ஆப்ஷனும் இதில் தரப்பட்டுள்ளது.

2.ரிப்பனில் உங்களின் டேப் மற்றும் குரூப்களை இணைக்க: வேர்ட் 2007 தொகுப்பு வந்த பின், இந்த இணைக்கும் வசதியினைத்தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்போம். வேர்ட் 2010ல் நாம் விரும்பும் டேப்களை ரிப்பனில் இணைக்க முடியும். இவற்றை டேப் குழுக்களாகவும் அமைக்கலாம்.

ஒரு புதிய டேப் குரூப்பினை ( tab group ) இணைக்க File tab மீது கிளிக் செய்திடவும்.பின்னர் இதில் Options கிளிக் செய்க. இதற்குப் பின், Customize Ribbon என்பதில் கிளிக் செய்திடவும். உடனடியாக, வேர்ட், புதிய டேப் குரூப் ஒன்றை இணைத்திடும். நீங்கள் தேர்ந்தெடுத்த டேப்பிற்கு அடுத்தபடியாக இது அமைக்கப்படும். இந்த டயலாக் பாக்ஸிற்கு வலது பக்கத்தில், உள்ள New Tab என்பதில் கிளிக் செய்திடவும். இனி, இந்த டேப்பின் பெயரை மாற்றலாம்; இணைக்கலாம்; குழுப் பெயரும் கொடுக்கலாம்.

அடுத்து, இந்த குரூப்பில் நீங்கள் விருப்பப்படும் டூல்களை இழுத்து வந்து இதில் விட்டுவிடலாம். அனைத்தும் முடிந்த பின்னர், ஓகே கிளிக் செய்து, மாற்றங்களை சேவ் செய்துவிடலாம்.

3.வேர்ட் வண்ணக் கட்டமைப்பினை மாற்ற: வேர்ட் தொகுப்பின் கட்டமைப்பில், நம் இஷ்டப்படி, வண்ணக் கலவை அமைக்கும் வகையில் வழிகள் இல்லை. இருந்தாலும், மாறா நிலையில் வரும், அந்த ஸ்டீல் கிரே வண்ணத்தினை மாற்றி அமைக்கலாம். மாற்றப்படும் வண்ணம் நீல நிறமாகவோ, திரிந்த கருப்பு நிறமாகவோ இருக்கலாம்.

வண்ண அமைப்பு கட்டம் ரிப்பன், டைட்டில் பார் மற்றும் நம் திரையில் உள்ள டெஸ்க்டாப் சுற்று வட்டத்தில் தெரியவரும். மாறா நிலையில் வேர்ட் 2010 தொகுப்பு, கிரே கலர் கட்டமைப்பைப் பயன்படுத்து கிறது. இருப்பினும் சில மாற்றங்களை நாம் இதில் மேற்கொள்ளலாம்.

ரிப்பனில், இன்னும் சற்று கூடுதலாக வெண்மையைக் கொண்டு வரலாம்; சில டூல்ஸ் மற்றும் ஆப்ஷன் களில், பளிச் என்ற நிலையையும், சில டூல்களின் பார்டர்களில் வண்ணக் கலவையையும் கொண்டு வரலாம். வண்ணங்களை இணைக்கையில் வேறுபட்ட வண்ணங்கள் இருந்தால் தான், உங்களால் நன்றாகப் பார்த்துப் படிக்க முடியும் என்றால், அந்தக் கலவையில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு ஏற்படுத்தும் வண்ண மாற்றங்கள், அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் ஏற்படுத்தப்படும். எனவே இங்கே மாற்றிவிட்டு, அடுத்து அவுட்லுக் செல்கையில் அங்கேயும் இந்த மாற்றங்கள் இருந்தால், ஆச்சரியப்படாதீர்கள்.

4. டாகுமெண்ட் ப்ராப்பர்ட்டீஸில் கூடுதல் வசதிகள்: வேர்ட் 2010ல் தரப்பட்டுள்ள புதிய வசதியான Backstage வியூ , நம் பைலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெற உதவிடுகிறது. உங்களுடைய குழுவில் உள்ள மற்றவர்கள், இந்த டாகுமெண்ட்டைப் பார்த்திருந்தால், எடிட் செய்திருந்தால், அதனை அறிந்து கொள்ள முடிகிறது. File டேப் கிளிக் செய்து, அதில் Info தேர்ந்தெடுத்தால், இந்த தகவல்களைப் பெறலாம். வலது புறம் உள்ள பிரிவில் இவை காட்டப்படுகின்றன. இந்த ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை, ஒரு டாகுமெண்ட் பேனலில் ( Document Panel ) இணைத்துக் கொள்ளவும் இங்கு வசதி தரப்பட்டுள்ளது.

5.அடிக்கடி டைப் செய்திட வேண்டுமா? சில வாக்கியங்களை நாம் ஒவ்வொரு டாகுமெண்ட்டிலும் அமைப்போம். ஒரு மையத்தின் நோக்கத்தினை விளக்கும் வாக்கியம், ஒரு நிறுவனத்தின் முழு பெரிய பெயர், முகவரிகள், முடிக்கும் சொற்கள் என எத்தனையோ விஷயங்களை, ஓராண்டில் எத்தனை முறை நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் அமைக்க வேண்டியதிருக்கும்? ஏன் ஒவ்வொரு முறையும் டைப் செய்து நம் நேரத்தினையும், உழைப்பையும் செலவழிக்க வேண்டும். அது மட்டுமின்றி, இவற்றைக் குறிப்பிட்ட ஒரு எழுத்துவகையில் தான் அமைக்க விரும்புவோம். இதற்கும் கூடுதலாக சில நிமிடங்கள் ஆகலாம். இவற்றை ஏதேனும் ஒரு வழியில் அமைத்து, நேரம், உழைப்பு வீணாகாமல் அமைக்க முடியுமா? நாமே, நம்முடைய Quick Parts என்ற பகுதியை உருவாக்கி, இவற்றை அமைத்து, நொடியில் பயன்படுத்தலாம்.

இதற்கு முதலில் என்ன வாக்கியங்கள், எந்த எழுத்துவகையில், என்ன ஸ்டைலில் அமைக்க முடியுமோ, அதனை உருவாக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Insert டேப்பினைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் பட்டியலில், Quick Parts என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் கீழாக உள்ள Save Selection To Quick Part Gallery என்பதில் கிளிக் செய்திடவும். இறுதியாக Create New Building Block என்ற டயலாக் பாக்ஸில், இந்த Quick Parts –க்கு ஒரு பெயர் சூட்டவும். எந்த கேலரியில் இது இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதனையும் குறிப்பிடவும். மேலும் பிற தேவைகளையும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர், இறுதியாக ஓகே, கிளிக் செய்து மூடவும்.

6. மாறா நிலை போல்டரை அமைக்க: புதிய பைல் ஒன்றை உருவாக்கும் ஒவ்வொரு வேளையும், அதனை எந்த போல்டரில் சேவ் செய்திட வேண்டும் என, அந்த போல்டரைத் தேர்ந்தெடுக்க விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அலைய வேண்டும். வேர்ட் 2010ல் எந்த போல்டரில் இவை சென்றடைய வேண்டும் என்பதனை, வரையறை செய்து மாற்றலாம்.

மாறா நிலையில் தரப்பட்டிருக்கும் போல்டரை மாற்ற, File டேப்பில் கிளீ செய்து Options தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் Word Options டயலாக் பாக்ஸில், Word Options என்பதைக் கிளிக் செய்திடவும். அடுத்து Default File Location என்ற பீல்டில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் போல்டருக்கான டைரக்டரி வழியை ( Path ) டைப் செய்திடவும். இப்படியே ஒவ்வொரு வகை டாகுமெண்ட்டிற்கும் அமைத்து, இறுதியில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதில் ஆன்லைன் சர்வரில் உள்ள ட்ரைவில் கூட சேவ் செய்திடும் படி அமைக்கலாம். ஆனால், இன்டர்நெட் இணைப்பில் உங்கள் கம்ப்யூட்டர் அப்போது இயங்க வேண்டும்.

7. உங்கள் திட்டப்படி பக்க வடிவம்: வர்த்தக அலுவலகங்கள், கல்வி மையங்கள் என ஒவ்வொரு வகை டாகுமெண்ட்டிற்கும், ஒரு வகையில் அதன் பக்கங்கள் இருக்க வேண்டும் என நாம் விரும்புவோம். ஒன்றில் மார்ஜின் இடைவெளி அதிகமாக, அதில் குறிப்புகள் எழுத இடம் இருக்கும்படி அமைக்க வேண்டும். இன்னொன்றில், பிரிண்ட் இடம் நான்கு பக்கங்களிலும் சற்று கூடுதலாக இருக்க விரும்புவோம். இது போல நம் விருப்பப்படி பக்கங்களை அமைக்க வேர்ட் 2010 உதவுகிறது.

இதற்கு, Page Setup டயலாக் பாக்ஸை முதலில் கொண்டு வரவும். அதில் நீங்கள் விரும்பும் வகையில் பக்க அகலம், உயரம், நீளம் ஆகியவற்றை செட் செய்திடவும். பின்னர், Set As Default என்பதில் கிளிக் செய்திடவும். இந்த இடத்தில், உங்களுக்கு ஒரு செய்தி காட்டப்படும். நீங்கள் தொடர்ந்து செயல்பட விரும்புகிறீர்களா? என்று கேட்கப்படும். ஏனென்றால், இந்த மாற்றங்கள் Normal.dot என்ற டெம்ப்ளேட் பைலில் மாற்றப்பட்டு அமைக்கப்படும். நிலையாக இந்த அளவுகளில் பக்கங்கள் வேண்டும் எனில், Yes என்பதைக் கிளிக் செய்திடவும். அதுவே மாறா நிலையாக, புதிய அளவுகளில் பக்கமாக அமைக்கப் பட்டு, அந்த அளவுகளிலேயான பக்கம் உங்களுக்கு புதிய பைலில் காட்டப்படும்.

8. பிடித்த எழுத்துவகையை அமைக்க: ஒவ்வொரு வருக்கும் ஒரு குறிப்பிட்ட எழுத்துவகை ( Font ) யினைப் பிடிக்கும். எடுத்துக்காட்டாக, எனக்கு Calibri, Footlight, Palatino போன்ற மிதமான எழுத்து வகைகள் பிடிக்கும். ஒரு சிலருக்கு Times New Roman எழுத்துவகைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். எது ஒருவருக்குப் பிடித்திருந்தாலும், அவர் கம்ப்யூட்டரில், வேர்ட் 2010 தொகுப்பில் அதனை, மாறா நிலை எழுத்துவகையாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு Manage Styles என்ற டயலாக் பாக்ஸ் செல்லவும். Set Defaults என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் Font, Size, Color, Position, Line Spacing, and Paragraph Spacing ஆகியவற்றில், நீங்கள் விரும்பும் அளவில் செட் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து இவற்றை சேவ் செய்திடவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்துவகை, செட் செய்யப்பட்ட அளவில், வண்ணத்தில் கிடைக்கும்.