Thursday, December 23, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 23

1947: முதல் தடவையாக ட்ரான்ஸிஸ்டர் செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டது.

1948: சர்வதேச இராணுவ விசாரணை மன்றத்தினால் யுத்தக் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 ஜப்பானியர்கள் டோக்கியோ நகரில் தூக்கிலிடப்பட்டனர்.

1957: அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் கிறேக் வரலாற்றின் மிக இளமையான ( 22 வருடங்கள், 194 நாட்கள்) டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரானார்.

1970: நியூயோர்க் நகரில் உலக வர்த்தக நிலையத்தின் வடக்குக் கோபுரம் 1368 அடி (417) மீற்றர் உயரத்தை அடைந்தது. அக்காலத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக அது விளங்கியது.

1972: மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலியாகினர்.

1972: சிலியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களின் பின் மீட்கப்பட்டனர்.

1979: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சோவியத் யூனியன் துருப்புகள் கைப்பற்றின.

1990: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக ஸ்லோவேனியாவைச் சேர்ந்த 88 சதவீதமான மக்கள் வாக்களித்தனர்.

2002: ஈராக்கின் மிக் 25 விமானத்தின் மூலம் ஆளில்லா விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. உலகில் ஆளில்லா விமானமொன்று தாக்குதலொன்றில் சம்பந்தப்பட்டது அதுவே முதல் தடவை.

2003: சீனாவில் இயற்கை வாயு அகழ்வுக் களமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 234 பேர் பலி.

2005: அஸர்பைஜானில் ஏற்பட்ட விபத்தினால் 23 பேர் பலி.

2005: சூடானுக்கு எதிராக ஆபிரிக்காவின் சாட் நாடு யுத்தப் பிரகடனம் செய்தது.

Wednesday, December 22, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 21

1913: உலகில் முதல் தடவையாக குறுக்கெழுத்துப்போட்டி நியூயோர்க் வேர்ல்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான்  -தாய்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.ஷ

1967: உலகில் முதலாவது இதய மாற்று சத்திரசிகிச்சைக்குள்ளான லூயிஸ் வாஷ்கன்ஸி, 18 நாட்களின்பின் தென்னாபிரிக்காவில் காலமானார்.

1968: சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அப்பலோ பயணச் சோதனைகளில் முதல் தடவையாக (அப்பலோ 8) மனிதர்களை ஏற்றிச்சென்ற விண்கலம் ஏவப்பட்டது.

1969: நியூயோர்க்கில் ஓரினப் பாலியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது.

1969: சகல விதமான இனப்பாகுபாட்டையும் ஒழிக்கும் சாசனத்தை ஐ.நா. அங்கீகரித்தது.

1988: லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்ட பான் அமெரிக்கன்; விமானம் ஸ்கொட்லாந்தின்  லொக்கர்பீ எனும் இடத்திற்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது குண்டுவெடித்து சிதறியதால் 270 பேர் (தரையிலிருந்த 11 பேர் உட்பட) கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் லிபிய பிரஜைகள் இருவர் தொடர்புபட்டனர் என்ற குற்றச்சாட்டு பிரிட்டன் - லிபிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக முறுகல் நிலவியது.

1992: நெதர்லாந்து விமானமொன்று பாரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 56 பேர் பலி.
 

facebook “Like” இனூடாக வரும் வைரஸ்

facebook இணைய தளத்தில் காணப்படும் “Like” பட்டனினூடாக வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றதாம். Javascript ன் துணையுடனேயே இது செயற்பட்டுவருகின்றது. “Shocking! This girl killed herself after her dad posted this photo.” இந்த வாசகத்துடைனையே இந்த வைரஸ் பரவிவருகிறது.


“Shocking! This girl killed herself after her dad posted this photo.” எனும் வாசகத்தை click செய்யும் போது தானகவே குறிப்பிட்ட இந்த வாசகத்தை ‘Like’ செய்து உங்கள் ‘wall’ இலும் இந்த வாசகத்தை போட்டுவிடும். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான facebook பயனாளர்களை தொல்லை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட வாசகத்துடன் ஏதேனும் வந்தால் ,அதனை click செய்ய வேண்டாம்

Nokia N8–சின்ன அறிமுகம்

facebook பாதுகாப்பு இன்னும் மேம்படுத்தப்படுகிறது

பேஸ்புக் (facebook) இணைய தளம் அண்மைக் காலமாக தனது கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பினையும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இன்று இன்னுமொரு புதிய பாதுகாப்பு வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எமது செல்பேசிகளின் உதவியுடன் செயற்பட இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.

எமது பேஸ்புக் கணக்கினை பொதுக் கணணிகளில் திறக்கும் நிலை ஏற்பட்டால் எமது கடவுச் சொல்லிற்குப் பதிலாக ஒரு தற்காலிக கடவுச் சொல்லினை (password) உபயோகிக்கும் வசதியினை பேஸ்புக் ஏற்படுத்தித் தந்துள்ளது. உதாரணமாக நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கினை cafe யிலோ அல்லது உங்கள் நண்பனின் கணணியிலோ திறக்க நேரிட்டது என எண்ணிக் கொள்வோம். அந்த குறிப்பிட்ட கணணியில் உங்கள் கடவுச் சொல்(password) சேமிக்கப்படும் அல்லது கழவாடப்படும் என நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்த வசதியினை பயன்படுத்தலாம்.

இவ்வாறு தற்காலிக கடவுச் சொல்லினை பெற முதலில் உங்கள் செல்பேசி இலக்கத்தை உங்கள் பேஸ்புக் கணக்கோடு இணைத்துக் கொள்ள வேண்டும்(ஒரு முறை செயற்படுத்தினால் போதுமானது). அவ்வாறு இணைக்கப்பட்ட செல்பேசி இலக்கத்திலிருந்து “otp” என டைப் செய்து “32665″ எனும் இலக்கத்துக்கு அனுப்பினால் உங்களுக்கான அந்த தற்காலிக கடவுச் சொல் கிடைக்கும்.

அவ்வாறு பெறப்படும் கடவுச் சொல்லினை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்பதையும் அந்த குறிப்பிட்ட கடவுச் சொல் 20 நிமடங்களின் பின்னர் செயலிழந்து போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்க.

இந்த குறிப்பிட்ட சேவையானது தற்போது செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இந்த குறித்த பாதுகாப்பு சேவயினை ஒரு வாரத்திற்குள் அனைத்து பாவனையாளர்களும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Tuesday, December 21, 2010

Hpன் Palm pre 2 உத்தியோகபூர்வமாக அறிமுகம்

Hp நிறுவனம் தனது புதிய  Palm pre 2 ஸ்மார்ட் செல்பேசியினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளது.

உலகிலேயே ஜிகாஹேர்ட்ஸ் processor உடன் வெளிவரும் முதலாவது ஸ்மார்ட் தொலைபேசி இதுவாகும். HP webOS 2.0 இயங்கு தளத்துடனும் 5 மெகா பிக்ஸல் கமெராவுடன் இந்த புதிய Palm pre 2 ஸ்மார்ட் செல்பேசி வெளிவருகிறது.
 இந்த புதிய வகை செல்பேசி தொடர்பான முழுமையான விபரங்களை அறிய HP Palm இணைய தளத்தை நாடவும்.

தற்போது நீங்கள் Delete செய்த ஜிமைல் முகவரிகளை மீளப் பெறலாம்

ஜி-மைல் பாவனையாளர்களை அடிக்கடி கூகிள் சந்தோசப்படுத்திவருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் தற்போதும் ஒரு சிறிய முக்கியமான வசதியினை ஜி-மெயில் தந்துள்ளது. தற்போது நீங்கள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப்பெறக்கூடியதாக கூகிள் ஒரு புதிய வசதியினை ஏற்படுத்தித் தந்துள்ளது.

இந்த புதிய வசதியினைக் கொண்டு , நீங்கள் 30 நாட்களுக்குள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரியினை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு உங்கள் மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப் பெற வேண்டுமாயின் ஜி-மைலில் காணப்படும் ‘contacts’ பிரிவிற்குள் சென்று ‘More actions’ பகுதியினை க்ளிக் செய்து அங்கு காணப்படும் “Restore contacts” என்பதனை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் அழிந்த மின்னஞ்ஞல்களை மீழப் பெற்றுக்கொள்ள முடியும்.


தவறுதலாக நீங்கள் ஏதேனும் முகவரிகளை அழித்திருந்தால் கவலைப்பட வேண்டாம். இந்த Restore முறையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.