Thursday, December 30, 2010

பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்

பழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா?

உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.

1. Isobuster

தரவிறக்கச்சுட்டி :
http://www.isobuster.com/

2.Cd Recovery Tool box



தரவிறக்கச்சுட்டி :
http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe

3. CDCheck
தரவிறக்கச்சுட்டி :
http://www.kvipu.com/CDCheck/download.php

Pen Drive களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...

தற்போது Pen Driveகளின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.

Usb Flash Security




Usb Flash Security என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் Autorun.inf  மற்றும்  UsbEnter.exe என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்
  

LCD Monitor ல் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.

LCD Monitor  வாங்கும் போது அதன் Warranty முடியும் முன்பும்
நாம் நம் LCD Monitor ன் திரையின் பிக்சல் பழுதில்லாமல்
இயங்குகிறதா என்று சரிபார்க்கலாம்.

                                                                                        














                                              படம் 1

LCD Monitor பயன்படுத்தும் போது சில நேரங்களில் திரையில்
சில பிக்சல் சரியாக தெரியாமல் இருக்கலாம் இல்லை என்றால்
சில வண்ணங்கள் மட்டும் சரியாக தெரியாமல் இருக்கலாம் இந்தப்
பிரச்சினை புது LCD Monitor வாங்குவதில் இருந்து தொடங்குகிறது.

புதிய LCD Monitor வாங்குபவர்கள் அதற்கு முன் Monitor
ஏதும் பிக்சல் பிரச்சினை இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடித்து
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கிறது.


இணையதள முகவரி : http://flexcode.org/lcd.html

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Pick a color
என்பதில் விரும்பும் வண்ணத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து அதன் அருகில் இருக்கும் toggle full screen என்ற பொத்தானை
அழுத்தினால் முழுத்திரையில் நாம் தேர்ந்தெடுத்த கலர் இருக்கும்
வண்ணத்தில் அல்லது Monitorல் பிரச்சினை இருந்தால்
பிரச்சினை உள்ள பகுதியின் பிக்சல் மட்டும் வேறு கலரில்
இருக்கும். இதிலிருந்து எளிதாக கண்டுபிடிக்கலாம். LCD Monitor
வாங்கி இன்னும் சில மாதங்களில் Warranty  முடிவதாக
இருந்தால் நாம் கண்டிப்பாக இந்ததளத்திற்கு சென்று நம்
LCD -ல் ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

கண்டிப்பாக இந்தப்பதிவு LCD Monitor பயன்படுத்தும்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Windows இயங்குதளம் வேகமாக இயங்க

இன்று 90 வீதத்திற்கு மேற்பட்டோர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பயன்படுத்துகின்றனர் என்பது யாவவம் அறிந்த உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற சில வழிமுறைகள் இங்கு தரப்படுகின்றது..

1.மினிமைஸ்: 
பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும்.

2. இமெயில் போல்டர்:
இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும்.

3. சரியான பயன்பாடு:
போல்டர்களுக்குச் சரியான பெயர் கொடுத்து, மெயில்களைப் பொருள் வாரியாகப் பிரிக்கவும். ஒரே போல்டரில், அதிக மெயில்களைத் தேக்குவது போல்டர்கள் அமைத்த நோக்கத்தை செயல்படுத்தாது.

4. நேரம் தாழ்த்தி பார்க்கப்படும் மின்னஞ்சல்கள்
பின் நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் பல மெயில்கள் வரும். இவற்றிற்கென ஒரு போல்டரை உருவாக்கி அதில் போட்டு வைத்து, நேரம் கிடைக்கும்போது கண்டறிந்து நீக்கவும்.

5. பிரவுசரின் தேடல் சாதனம்:
உங்களுக்கென விருப்பமான தேடல் சாதனத்தினை, மாறா நிலைக்கு (டிபால்ட்) தேர்ந்தெடுத்து அமைக்கவும். இல்லையெனில், லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், சிஸ்டம் அமைத்த சர்ச் இஞ்சினும் , நீங்கள் பயன்படுத்த இன்னொன்றுமாய் கிடைக்கும்.

6. பைல் பெயர் மாற்றம்:
பைல்களின் பெயர்களை மாற்ற விரும்புகிறீர்களா? நிறைய பைல்கள் மாற்றப்பட வேண்டுமா? முதல் பைலைத் தேர்ந்தெடுக்கவும். எப்2 அழுத்தவும். புதிய பெயரை டைப் செய்திடவும். இனி, என்டர் அழுத்தாமல், டேப் கீ அழுத்தவும். எக்ஸ்புளோரர் உங்களை அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லும். அந்த பைலின் பெயர் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாற்றத்திற்குத் தயாராய் இருக்கும். பேக் ஸ்பேஸ் கீயெல்லாம் அழுத்த வேண்டாம்.

7. இமெயில் செக்கிங்:
அடிக்கடி உங்கள் இமெயில்களை செக் செய்து பெறும்படி அமைக்க வேண்டாம். இதனால், உங்கள் வழக்கமான கம்ப்யூட்டர் பணியில் தேவையற்ற குறுக்கீடு இருக்கும். எனவே எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திட வேண்டும் என்பதனை, இதன் அடிப்படையில் அமைக்கவும்.

8. பல பைல் தேர்ந்தெடுக்கும் எளிய வழி:
ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தேர்ந்தெடுக்கிறீர்களா? கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயை அழுத்தித் தான் பலரும் இந்த செயலை மேற்கொள்கிறோம். இதனால் சில வேளைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றான வழி ஒன்றும் உள்ளது. முதலில் Organize>Folder and search options>View என்று செல்லுங்கள். பின்னர் கீழாகச் சென்று Use check boxes to select items என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இதன் மூலம் டிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

9. ஸ்பேம் நீக்கவும்:
உங்களுடைய கம்ப்யூட்டரில் ஸ்பேம் மெயில்களை வடிகட்டுவதற்கென புரோகிராம் இல்லை எனில், உடனடியாக ஒன்றை இன்ஸ்டால் செய்திடவும்.

10. விண்டோஸ் 7 கால்குலேட்டர்:
விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளில் கால்குலேட்டர்கள் இணைந்தே தரப்பட்டன. ஆனால் சில சிறப்பான கால்குலேட்டர் செயல்பாடுகளுக்கு, இணைய தளங்கள் தரும் இலவச கால்குலேட்டர் புரோகிராம்களை பதிந்து பயன்படுத்தினோம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், வேறு ஒரு புரோகிராமிற்குச் செல்ல வேண்டியதில்லை. இதில் கிடைக்கும் கால்குலேட்டர் மிகச் சிறப்பானதாகப் பல செயல்பாடுகளைத் தாங்கி உள்ளதாக அமைந்துள்ளது.

11. பிரச்னை பதிவு:
விண்டோஸ் இயக்கத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு உங்கள் டெக்னீஷியனை அடிக்கடி அழைத்து, பிரச்னைகள் குறித்து நிறைய விளக்கம் தர வேண்டியுள்ளதா? நீங்கள் சொல்வது அவருக்கும், அவர் கேட்பது உங்களுக்கும் புரியாமல் பல தொலைபேசி அழைப்புகளை வீணாக்குகிறீர்களா? இது தேவையே இல்லை. Windows’ Problem Steps Recorder என்பதை இயக்கினால் போதும். வரிசையாக, ஒவ்வொரு ஸ்டெப் ஆக, என்ன நடை பெற்றது என்று உங்களுக்கு இது காட்டும். இதனைப் பெற PSR என ஸ்டார்ட் மெனு சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். மிக விலாவாரியாக, ஸ்கிரீன் ஷாட்களுடன் உங்கள் பிரச்னைகளை இதில் காணலாம்.

12. திரை இடம் பெரிதாக:
டாஸ்க்பார் ஐகான் பெரிதாக அமைந்து, மானிட்டர் திரையில், நீங்கள் இயங்கும் இடம் சுருங்குகிறதா? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து Properties > Use small icons என அமைக்கவும். இதன் மூலம் அனைத்து ஐகான்களும் பாதியாக அதன் அளவில் குறையும். நீங்கள் இயங்க அதிக இடம் கிடைக்கும்.

13. சிறிய, பெரிய எழுத்துக்கள்:
எழுத்துக்களை அமைத்துவிட்டு, அதனை முழுமையாகப் பெரிய எழுத்துக்கள் அல்லது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக அமைக்க வேண்டுமா? ஒவ்வொரு எழுத்தாகத் தேடிச் சென்று மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர், ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால், இந்த ஆப்ஷன்கள் வரிசையாகக் காட்டப்படும். தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.

14. பின் அப்:
விண்டோஸ் 7 தொகுப்பில் எதனையும் டாஸ்க்பாரில் பின் செய்தி டலாம். அடிக்கடி பயன்படுத்தப் படும் போல்டர்கள், கண்ட்ரோல் பேனல், ஏன் ஒரு செயல்பாட்டிற்கென அமைக்கப் பட்ட பட்டனைக் கூட இதில் அமைத்திடலாம்.

15. Add On நேரம்:
உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு இயக்கத்திற்குக் கிடைக்க அதிக நேரம் ஆகிறதா? இதனுடன் இணைந்த ஆட் ஆன் தொகுப்பே இதற்குக் காரணம். Tools>Manage Addons சென்று ‘Load time’ என்பதில் ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பிற்கான நேரம் பார்க்கலாம். பின்னர், அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் புரோகிராமினை, தேவை இல்லை என்றால் நீக்கிவிடலாம்.

Wednesday, December 29, 2010

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்.. ?

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்.

இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.

இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.

அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.


விண்டோஸ் 7 அற்புத வசதிகள்

விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட் 
 (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில்
  “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால், Start  மெனு சென்று  My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில்,  Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும். இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது. பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI  dots per inch)  அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர்  Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply  மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில் http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ஞீடிணச்ட்ச்டூச்ணூ என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 28

1612: இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி, நெப்டியூன் கிரகத்தை அவதானித்த முதல் வானியலாளரானார்.
1832: ஜோன் சி கல்ஹோன், அமெரிக்க உப ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய முதல் மனிதரானார்.
1836: மெக்ஸிகோவின் சுதந்திரத்தை ஸ்பெய்ன் அங்கீகரித்தது.
1879: ஸ்கொட்லாந்தில் ரயில் பாலமொன்று  உடைந்து 75 பேர் பலி.
1885: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பாம்பாயில் ஸ்தாபிக்கப்பட்டது.
1908: இத்தாலியின் சிசிலி தீவின் மெசின்னா நகரில் 7.2 ரிக்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 75 ஆயிரம் பேர் பலி.
1918: சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொன்ஸ்டன்ஸ் மார்கிவிக் பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் எம்.பியானார்.
2009: பாகிஸ்தானின் கராச்சி நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி.