Friday, January 28, 2011

இலங்கையில் புதிதாக நாணயத்தாள்கள்: முதல்தடவையாக ஐயாயிரம் ரூபா பெறுமதியிலும் பணநோட்டு

எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புழக்கத்தில் இருக்கும் நாணயத்தாள்களுடன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளொன்றையும் அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 
இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம் தற்போதைக்கு புழக்கத்தில்  இருக்கும் 20,50,100,500, 1000,2000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுக்கும் புதிதாக நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அதனுடன் இணைந்ததாக இலங்கையில் இதுவரை புழக்கத்தில் இல்லாத ஐயாயிரம் பெறுமதியான ரூபா நோட்டும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ரூபா நோட்டுகள் எதிர்வரும் சுதந்திர தினத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

இலங்கையின் அபிவிருத்தி, சுபீட்சம், கலைகள், பறவைகள் என்பன புதிய ரூபா நோட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

வரலாற்றில் இன்று: ஜனவரி 28

1547: 8 ஆம் ஹென்றி மன்னன் இறந்ததையடுத்து, அவரின் 9 வயது மகன் 6 ஆம் எட்வர்ட் மன்னனாக முடிசூடப்பட்டான். இங்கிலாந்தின் முதல் புரட்டஸ்தாந்து மன்னன் இவன்.

1624: கரிபியன் (மேற்கிந்திய) தீவுகளில் முதலாவது பிரித்தானிய குடியேற்றம் சென் கிட்ஸ் தீவில் ஸ்தாபிக்கப்பட்டது.

1820: ரஷ்ய ஆய்வாளர்கள் பாபியன் கொட்லியெப் வோன் பெலிங்சௌசென் மற்றும் மிகைல் பெட்ரொவிச் லாஸாரேவ் ஆகியோர் அந்தார்ட்டிக் கண்டத்தை கண்டுபிடித்தனர்.

1909: குவான்டனாமோ குடா கடற்படைத் தளம் தவிர, கியூபாவின் ஏனைய பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1915: அமெரிக்க கரையோர காவற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1932: சீனாவின் ஷாங்காய் நகரை ஜப்பான் தாக்கியது.

1933: பாகிஸ்தான் எனும் பெயரை சௌத்ரி ரெஹ்மட் அலி இயற்றினார்.

1986: அமெரிக்காவின் சலெஞ்சர் விண்கலம் ஏவப்பட்டபின் வெடித்ததால் 7 விண்வெளி வீரர்கள் பலியாகினர்.

2002: கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் பலி.

2020: பங்களாதேஷின் முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர்.
 

Thursday, January 27, 2011

G-Mail ல் பயனுள்ள புதிய வசதி - Incoming Mail and Chat Alert

நாம் எந்த நேரமும் Online லேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது G-Mail ல் முகவரிக்கு வரும்  ஏதேனும் முக்கியமான Mail அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ அவை நாம் மறுபடியும் எப்பொழுது ஜிமெயிலை திறக்கும் போது தான் தெரிய வரும். இதன் மூலம் சில முக்கியமான Chatting  நாம் தவற விட்டு விடுவோம். அல்லது நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது.  ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர் அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும்.
 
இனி நாம் Offline ல் இருந்தாலும் நமக்கு ஏதேனும் முக்கிய மெயில் வந்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் சாட் வந்தாலோ இனி நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதை பார்த்து முக்கிய நபரிடம் இருந்து வந்தால் நாம் அதை தவறவிடாமல் உடனே அதற்க்கு பதில் அளிக்கலாம்.
 
புதிய Mail வந்தால் 
 

 புதிய Chatting வந்தால் 
 

  • இந்த வசதியை பெற இந்த லிங்கில் க்ளிக் செய்து www.gmail.com உங்கள் ஜிமெயில்  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பின்பு ஜிமெயிலில் Settings க்ளிக் செய்யுங்கள்.
  • பிறகு அங்கு உள்ள Destop Notification வசதிக்கு சென்று கீழே படத்தில் உள்ள மாதிரி தேர்வு செய்யவும்.
  • படத்தில் உள்ளதை போல தேர்வு செய்ததும் கீழே கடைசியில் உள்ள SAVE CHANGES என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவு தான் இனி எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து கொண்டு மெயில் வருமா,வருமா என பார்த்து கொண்டு இருக்க தேவையில்லை புதிய மெயில் வந்தால் நாம் Offline ல் இருந்தாலும் நமக்கு அறிவிப்பு செய்தி வரும்.
  • Chatting வந்தாலும் இப்படி நமக்கு செய்தி வரும்.
 இந்த வசதியை தற்பொழுது கூகுள் குரோம் Browser உபயோகிப்பவர்கள் மட்டுமே பெற முடியும்.

வரலாற்றில் இன்று: ஜனவரி 27

1943: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்க விமானங்கள் முதல் தடவையாக ஜேர்மனி மீது குண்டுத்தாக்குதல் நடத்தின.
1944: 900 நாட்கள் ஜேர்மனியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த ரஷ்யாவின் லெனின் கிராட் நகரம் விடுவிக்கப்பட்டது.

1945: போலந்திலிருந்த நாஸிப்படைகளின் சித்திரவதை முகாமிலிருந்தவர்களை சோவியத் படைகள் விடுவித்தன.

1967: அப்பலோ 1 விண்கலம் ஏவப்பட்டபோது தீவிபத்து காரணமாக விண்கலத்திலிருந்த 3 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.

1967: விண்வெளியில் அணுவாயுதங்களை வைத்திருப்பதை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் 69 நாடுகள் கையெழுத்திட்டன.

1973: பாரிஸ் சமாதான உடன்படிக்கை மூலம் வியட்நாம் யுத்தம் முடிவுக்கு வந்தது.

1984: பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன், பெப்ஸி விளம்பரப் படப்பிடிப்பின்போது தீ விபத்துக்குள்ளானார்.

2006: வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தந்தி சேவைகளை நிறுத்திக்கொண்டது.
 

Wednesday, January 26, 2011

ஜி-மெயில் வழங்கும் புத்தம் புதிய வசதி

ஜி-மெயில் குழுவினர் புத்தம் புதிய வசதியொன்றினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இது தற்போதைக்கு ஜி-மெயிலின் பரீசோதனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எங்களால் வாசிக்காமல் விடப்பட்ட மின்னஞ்ஞல்களின் எண்ணிக்கையை ப்ரவுசரில்(Browser) சிறிய படமாக தோற்றுவிப்பதே இந்த புதிய வசதியாகும்.




இதனை உங்கள் ஜி-மெயில் கணக்கில் செயல்படுத்த முதல் Settings ஐ க்ளிக் செய்து பின்னர் Labs இனை க்ளிக் செய்து Unread message icon என்பதை enable செய்தால் போதும். இனி நீங்கள் எத்தனை Tab திறந்து வைத்து வேலை செய்தாலும் நீங்கள் வாசிக்காமல் இருக்கக்கூடிய மின்னஞ்ஞல்களின் எண்ணிக்கை ஜி-மெயில் ஐகனுக்கு(Icon) பக்கத்தில் தோற்றமளிக்கும்.

வானத்தில் புதிய சூரியன் தோன்றும்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!


தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது. பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை.

இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள்  சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை.

இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும்.


இது மற்றொரு சூரியன் புதிதாக தோன்றியதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படி இல்லாவிட்டால் அடுத்த 10 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் உண்டாகும். இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் "பிராட்கார்டர்" தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இன்று: ஜனவரி 26


1500: வின்சென்ட் பின்ஸோன் என்பவர் பிரேஸிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியரானார்.
 
1531: போர்த்துகலின் லிஸ்பன் நகரில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பலி.
 
1788: பிரித்தானிய தளபதி தலைமையில் அவுஸ்திரேலியாவுக்கு  முதல் தொகுதி  கைதிகளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் தற்போதைய சிட்னி துறைமுகப் பகுதியை அடைந்தன. இத்தினம் அவுஸ்திரேலிய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
 
1930: இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 26 ஆம் திகதியை பூரண சுவராஜ் தினமாக பிரகடனப்படுத்தியது.  20 வருடங்களின்பின் இந்தியா குடியரசாகியது.
 
1934: ஜேர்மன் - போலந்து மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
 
1950: இந்தியா குடியரசாகியது. ராஜேந்திர பிரசாத் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
1958: ஜப்பானிய கப்பலொன்று கவிழ்ந்தால் 167 பேர் பலி.
 
1965: இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப்பட்டது.
 
1980: இஸ்ரேல் - எகிப்து மோதல் தவிர்ப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.
 
1992:அமெரிக்க நகரங்களை ரஷ்யாவின் அணுவாயுதங்கள் இலக்குவைப்பதை ரஷ்யா நிறுத்தும் என அந்நாட்டு ஜனாதிபதி பொரிஸ் யெல்டசின் அறிவித்தார்.
 
1998: வெள்ளை மாளிகை பணிப்பெண் மோனிகா லுவின்ஸ்கியுடனான தகாத உறவுகள் வைத்திருந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மறுத்தார். 8 மாதங்களின்பின் அவர் இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
 
2001: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி.
 
2004: ஆப்கானிஸ்தானின் புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் கையெழுத்திட்டார்.