Tuesday, February 1, 2011

கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.

1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்: பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்திடலாமா?” என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்: இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம் அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும்.
இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும்.

இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.

3.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்: ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது. அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம்.

இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.

4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்: டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட்(TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.

5.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது: திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.

இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.

6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்: பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 01

 1662: சீன ஜெனரல் கோக்ஸிங்கா, 9 மாதகால முற்றுகையின்பின் தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.
1793: பிரிட்டன், நெதர்லாந்து மீது பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.

1814: பிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்ததால் 1200 பேர் பலி.
1835: மொரிசியஷில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1865: அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டார்.

1924:  சோவியத் யூனியனை பிரிட்டன் அங்கீகரித்தது.

1958: எகிப்தும் சிரியாவும் இணைந்த ஐக்கிய அரபு குடியரசை ஸ்தாபித்தன.
1974: கோலாலம்பூர் நகரம் சமஷ்டி பிராந்தியமாக்கப்பட்டது.

1979: ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி 15 ஆண்டுகள் அஞ்ஞான வாசத்தின்பின் ஈரானுக்குத் திரும்பினார்.

1982: செனகலும் காம்பியாவும் இணைந்து செனகாம்பியா கூட்டுச் சம்மேளனத்தை உருவாக்கின.

2003: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய கொலம்பிய விண்கலம் வெடித்துச்சிதறியதால் 7 விண்வெளி வீர வீராங்கனைகள் உயிரிழந்தனர்.
 

Monday, January 31, 2011

வரலாற்றில் இன்று: ஜனவரி 31

1915: முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி நச்சு வாயு தாக்குதல் நடத்தியது.

1943: ஜேர்மன் பீல்ட் மார்ஷல் பிரெட்ரிச் பௌலஸ் சோவியத் யூனியனிடம் சரணடைந்தார்.

1945: ஜேர்மனியினால் ஸ்டத் ஓவ் முகாமிலிருந்த சுமார் 3000 கைதிகள் பால்டிக் கடல் பகுதிக்கு அழைத்துக் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.
1946: சோவியத் யூனியனின் அரசியலமைப்பை பின்பற்றி யூகோஸ்லாவியாவில் 6 குடியரசுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.
1950: ஹைதரசன் குண்டுத் தயாரிப்புத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1953: வடகடல் வெள்ளம் காரணமாக நெதர்லாந்தில் 1800 பேர் பலி.

1968: அவுஸ்திரேலியாவிலிருந்து நௌரு சுதந்திரம் பெற்றது.
1996: இலங்கை மத்திய வங்கி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 86
 பேர் பலியானதுடன் 1400 பேர் காயமடைந்தனர்.
1996: ஹையாகுட்டாகே வால்வெள்ளி ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் யூஜி ஹையாகுட்டாகேவினால் கண்டுபிடிக்கப்பட்டது.

Microsoft:வழங்குகிறது 25GB Online சேமிப்பகம்

Microsoft நமக்கு வழங்குகிறது 25GB அளவுக்கு ஆன்லைன் சேமிப்பகம் ( Online Storage Space),இங்கு நாம் நமது Important தகவல்களை (Data) சேமித்து வைத்து கொள்ள முடியும். இந்த சேவையை மைக்ரோசாப்ட் நமக்கு இலவசமாக வழங்குகிறது.

Australia,France,Canada,Switzerland போன்ற நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவோற்கும் இந்த சேவையை Microsoft விரிவுபடுத்தி உள்ளது.

இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால்,உங்களுக்கு MSN or Hotmail ஏதாவதொன்றில்  கணக்கு இருக்க வேண்டும்.

கணினியில் ஸ்பைவேர் தாக்கத்தை நீக்கும் CCleaner புதிய இலவச பதிப்பு.

கணினியில் ஏற்படும் அனைத்துவிதமான ஸ்பைவேர் மற்றும்
மால்வேர் பிரச்சினைகளுக்கும் Registry-ல் ஏற்படும்
பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது




கணினி பயன்படுத்தும் நமக்கு சில நேரங்களில் வேகம் குறைவாக
இருக்கலாம். தேவையில்லாத அப்ளிகேசன் அடிக்கடி திறக்கலாம்.
உலாவி திறக்கும் போது கூடவே சில இணையதளங்கள் திறக்கலாம்
இது மட்டும் இல்லாமல் பல நேரங்களில் பிழை செய்தி கூட
வந்து நம்மை வெறுப்படைய செய்யும் இப்படி கணினியில்
அடிக்கடி எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.filehippo.com/download_ccleaner/
இந்த தளத்திற்கு சென்று CCleaner மென்பொருளின் புதிய பதிப்பை
இலவசமாக தரவிரக்கி கொள்லலாம். மென்பொருளை இயக்கி
நம் கணினியில் தேவையில்லாமல் இயங்கும் ஸ்பைவேர்
மற்றும் மால்வேர் போன்றவற்றை எளிதாக நீக்கலாம். வைரஸ்
நீக்கும் மென்பொருள் பயன்படுத்துவதால் நம் கணினியின் வேகம்
குறைவாக இருக்கும் என்று நினைப்பவர்களும் இந்த இலவச
மென்பொருளை பயன்படுத்தலாம். கண்டிப்பாக கணினி பயன்படுத்தும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Sunday, January 30, 2011

கணினியின் முகப்பில்(desktop) பேஸ்புக்கை பயன்படுத்துவது எவ்வாறு?

இணைய உலாவி மூலம் அடிக்கடி பேஸ்புக் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுபவரே நீங்கள்,
அவ்வாறெனில் இனிமேல் கணினியின் முகப்பு திரையிலேயே  பேஸ்புக்கை கொண்டுவரக்கூடிய Facebook Desktop என்கின்ற மென்பொருளை பயன்படுத்துங்கள்.


இவ்வாறு செய்தால் இனிமேல் பேஸ்புக் ஐ பார்வையிடுவதற்காக இணைய உலாவியை திறக்கவே தேவையில்லை.டெக்ஸ்டாப்பில் பேஸ்புக் இல் வருகின்ற அப்டேட்களை காட்டுமாறு செய்துவிடலாம்.

Facebook Desktop  என்பது பேஸ்புக்கை கணினியில் பயன்படுத்த உதவும் அளவில் சிறிய டெக்ஸ்டாப் அப்பிளிகேஷனாகும்.

மெசெஞ்சர் சாப்ட்வேர்கள் போலவே தொழிற்ப்படும் இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து பேஸ்புக்கின் ஸ்டீரிமில் புதிதாக என்ன நடைபெற்றது என்பதை அலெட் செய்கிறது.அடோப் ஏர் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த மென்பொருள்.

பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட், புதிய வால் போஸ்ட், நண்பராக சேர விரும்புவர்கள் போன்றவற்றின் விபரங்களை காட்டுகின்றது இந்த மென்பொருள் ஆனால் பேஸ்புக் பேஜ்களை பற்றிய தகவல்களை காட்டவில்லை.

வரலாற்றில் இன்று: ஜனவரி 30


 1648: முன்ஸ்டர், ஒஸ்னாபுருக் ஒப்பந்தங்கள் மூலம்; ஸ்பெய்னுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 8 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தது.

1649: இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் புரட்சியாளர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1750: 1835: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸனை சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதியொருவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட முதலாவது சம்பவம் இது.

1847: அமெரிக்காவின் யேர்பா புயெனா நகரத்தின் பெயர் சான் பிரான்ஸிஸ்கோ என மாற்றப்பட்டது.

1933: அடோல்வ் ஹிட்லர் ஜேர்மனியின் சான்ஸ்லர் (அரச அரசாங்கத் தலைவர்) ஆனார்.

1945: அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற ஜேர்மன் கப்பலான வில்லியம் குஸ்ட்லவ் பால்டிக் கடலில் சோவியத் நீர்மூழ்கி கப்பலின் தாக்கத்திற்குள்ளானதால் சுமார் 9000 பேர் பலி. கப்பல் அனர்த்தமொன்றில் மிக அதிக எண்ணிக்கையானோர் பலியான சம்பவம் இது.

1945:இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி, இந்து தீவிரவாதியான நாதுராம் கோட்சேவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1956: அமெரிக்க சிவில் உரிமை போராட்டத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியரின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டது.

2003: அமெரிக்க விமானத்தை பாதணி குண்டு மூலம் தகர்க்க முயன்ற ரிச்சர்ட் ரீட்டுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.