Thursday, December 16, 2010

பிரான்ஸ் நாட்டின் ஹென்றி IV மன்னரின் தலை 400 ஆண்டுகளின் பின் கண்டுபிடிப்பு

பிரான்ஸ் நாட்டில் 1610 ஆண்டு கொலை செய்யப்பட்ட ஹென்றி IV மன்னரின் தலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



அந்தத் தலை இதுவரை காலமும் பதனிட்டு வைக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 9 மாதகால ஆராய்ச்சியின் பின்னர் இத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.


400 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதற்கென மரபணு சோதனை, அங்க அடையாளங்கள் மற்றும் மானிடவியல், தடவியல், கதிர்த்தாக்கம் உட்பட நோய்கள் தொடர்பான ஆய்வு ஆகியவற்றை துல்லியமாக மேற்கொண்டுள்ளனர்.


குறிப்பாக மூக்கில் காணப்பட்ட ஓர் அடையாளம் மற்றும் காதில் தோடு அணியப்பட்டமைக்கான அடையாளம், கொலை முயற்சி ஒன்றின் போது முகத்தில் ஏற்பட்ட காயம் ஆகியவை இவற்றில் முக்கியமானவையாகும்.

ஹென்றி IV

ஹென்றி ஐஏ மன்னர் அக்காலத்தில் மிகவும் புகழ்பூத்த நல்லாட்சி புரிந்த மன்னர்களில் ஒருவராவார். இவரது கம்பீர தோற்றம் காரணமாகவும் பெண்களால் அதிகம் நேசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர் 1610 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பாரிஸில் வைத்து பிரன்கொயிஸ் ரவ்யிலக் என்பவரால் கொலைசெய்யப்பட்டார்.

இவரது தலை மாத்திரம் 1793 ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது காணமல் போனபோதும் புரட்சியின் போது போராட்டக்காரர்களால் இவரது தலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்தத் தலை பலரிடம் கைமாறியதாகக் கூறப்பட்டது.

எனினும் 400 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 15

1914: ஜப்பானில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட காஸ் வெடிப்புச் சம்பவத்தால் 687 பேர் பலி.

1967: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் பாலமொன்று உடைந்ததால் 46 பேர் பலி.

1970: தென்கொரிய கப்பல் கொரிய நீரிணையில் கவிழ்ந்ததால் 308 பேர் பலி.

1973: அமெரிக்க உளவியல் மருத்துவர்கள் சங்கம் ஓரினச் சேர்க்கையை உளவியல் நோய் பட்டியலிலிருந்து நீக்கியது.

1974: எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக பிரிட்டனில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1978: மக்கள் சீனக்குடியரசை அமெரிக்கா அங்கீகரிக்கும் எனவும் தாய்வானுடனான தொடர்புகளை துண்டிக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

2005: சர்வதேச நாணய நிதியத்திற்கான தனது கடனை ஆர்ஜென்டீனா முன்கூட்டியே செலுத்தும் என ஆர்ஜென்டீன ஜனாதிபதி நெஸ்டர் கேர்ச்னர் அறிவித்தார்.

2009: போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொண்டது.

10 தலை நாகமும் பறைசாற்றிய உண்மையும்


அண்மைக்காலத்தில் அதிகம் பேசப்பட்ட விடயம் 10 தலை நாகபாம்பு பற்றியது. வன்னிப் பகுதியில் இந்த 10 தலை நாகம் தென்பட்டதாக கூறி சில ஊடகங்களும் உண்மை நிலையை அறியாமல் செய்தியை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியிருந்தன.

இந்த 10 தலை நாகத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்னர் இணையத்தளங்களில் உலாவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எந்தவொரு செய்தியையும் ஆராய்ந்து அறியாமல் முறையற்ற தனமாக மக்கள் மத்தியில் போலிகளை பரப்புவதால் ஏமாற்றப்படுபவர்கள் வாசகர்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.இந்நிலையில் 10 தலை நாகம் என போலியாக சித்திரிக்கப்பட்ட, உண்மையான 'ஒரு தலை' நாகத்தின் புகைப்படமும் இப்போது இணையத்தில் வெளிவந்திருக்கிறது. ஒரு தலை நாகத்தின் புகைப்படத்திற்கு 10 தலை கொடுத்தவர்கள் கணினி விற்பன்னர்களே...!

ஏமாற்றமடைந்த வாசகர்களுக்கு உண்மைநிலை புரியவேண்டும் என்பதற்காக 10 தலை நாகத்தின் 'கிரபிக்ஸ்' விளையாட்டை இங்கே பிரசுரிகின்றேன் . இப்படத்தில் ஒரு தலை நாகத்தின் பின்னால் அதனுடைய நிழல் அப்படியே இருக்கும். அதே படத்தை 10 தலைகளாக மாற்றியபோதும் அதே ஒரு தலை நாகத்தின் நிழல் தென்படுவதை வாசகர்களின் கவனித்திற்காக விடுகின்றேன்  (நன்றி: பேஸ்புக் நண்பர்கள்)

Wednesday, December 15, 2010

வார்டு அறையில் சுற்றுகிறது வேலூர் ஆஸ்பத்திரியில் நுழையும் மர்ம உருவம்; செல்போன் படத்தால் பேய் பீதி

வேலூரில் ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய் நுழைவது போன்ற படக்காடசி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம்
நுழைவது போன்ற படக்காடசி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது.

வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பினார்.

சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரி கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து அறையை விட்டு வெளியேறுகிறது.



இந்த படக்காட்சி பார்ப்பவர்களை பீதியில் உறைய வைக்கிறது. மேலும் இந்த காடசியை பார்க்கும் போது சிலரின் உரையாடல்களும் கேட்கிறது. கம்ப்யூட்டரில் கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட சந்தேகம் ஏற்படுகிறது.

பேய் வருவதை படம் எடுத்து அதனை தெளிவு படுத்தும் முயற்சியில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் அதனால் தான் அவர்களின் குரல் கேட்கிறது. பேய் வருவது உண்மை தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஏதாவது ஆஸ்பத்திரி குறித்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக விரோதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் பரவி வரும் ஆஸ்பத்திரி பேய் இருக்கா இல்லையா?

அல்லது பேய் வருவதற்கான அறிகுறியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. திருவண்ணா மலையில் சித்தர் பரந்ததாக கடந்த ஆண்டு வீடியோ காட்சி பரவியது. அதுபோல வேலூரில் பேய் படக்காட்சி பார்ப்பவர்களை கலங்கடித்து வருகிறது.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 14

1287: நெதர்லாந்தில் கடல்நீர் பாதுகாப்பு மதிலொன்று உடைந்ததால் சுமார் 50000 பேர் பலி.

1812: ரஷ்யா மீதான பிரெஞ்சு படையெடுப்பு முடிவடைந்தது.
1903: ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் விமானம் மூலம் முதல் தடவையாக சோதனை பறப்பை மேற்கொண்டனர்.

1955: இலங்கை உட்பட 16 நாடுகள் ஐ.நாவில் இணைந்தன.
1972: சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற கடைசி விண்கலமான அப்பலோ 17 பூமிக்குத் திரும்பியது.
1995: பொஸ்னியா, சேர்பியா, குரொஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பாரிஸ் நகரில் சமாதான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.
 

இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்

நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.

இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.
இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.
என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம்,

இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.

இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.

கூகுளின் புதிய கூகுள் கேம்ப்

ஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும்.
கூகுள் மேப்ஸை உலகின் எந்த நாட்டிலிருந்தும் பெறலாம். எந்த நாட்டிற்கும், நகரத்திற்கும், தெருவிற்கும் வழி காட்டும் வகையில் மேப்களும், வழி காட்டுதல்களும் நமக்கு கூகுள் மேப்ஸ் தருகிறது. இதற்குத் தேவை எல்லாம் சற்று வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.
இணைய இணைப்பு இல்லாதபோது கூகுள் மேப்ஸ் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது?

இந்த இடத்தில் தான் நமக்கு ஜிமேப் கேட்சர் (Gmap Catcher) என்னும் அப்ளிகேஷன் நமக்கு உதவுகிறது. இதனை http://code.google.com /p/gmapcatcher என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திலிருந்து டவுண்ட்லோட் செய்து, பின் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். பின் அதனை இயக்கவும்.
இது இயங்குகையில், நீங்கள் எந்த ஊருக்கான மேப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த ஊரின் பெயரை என்டர் செய்திட வேண்டும்.
பின்னர் ஆன்லைனில் சென்று குறிப்பிட்ட மேப்பைப் பெற, இந்த புரோகிராம் உங்கள் அனுமதி கேட்கும். இதற்கு 'Yes' என்பதில் கிளிக் செய்திட, உடனே அந்த நகரத்திற்கான மேப் ஜிமேப் கேட்சர் விண்டோவில் கிடைக்கும்.

இதன் பின்னர் அதனை டவுண்லோட் செய்திட நாம் கட்டளை கொடுத்தவுடன், அந்த மேப் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்கள் சிஸ்டத்தில் சேவ் செய்யப்படும். மேப்பிற்கான பூகோள ரேகைக் குறியீடுகள் (latitude, longitude) ஏரியா, ஸூம் செட்டிங்ஸ் ஆகிய தகவல்களும், மேப்புடன் பதியப்படும்.

இது டவுண்லோட் செய்யப்பட்டுவிட்டால், இந்த மேப்பினை அடுத்துப் பார்க்க, இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. இல்லாமலேயே ஜிமேப் கேட்சர் உதவியுடன் காணலாம்.
ஜிமேப் கேட்சர் புரோகிராமினை விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலும் இயக்கலாம்.